Monday, April 25, 2011

நைஜீரியாவில் அதிபர் தேர்தல் :500 பேர் பலி

நைஜீரியாவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 500 பேரை கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்குபகுதிஎன இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிற்கு அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் குறிப்பாக வடக்கு பகுதியை சேர்ந்த கடுனா பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். வன்முறைக்கு அடிப்படை காரணமாக தெற்குபகுதியை காட்டிலும் வடக்கு பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளதே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment