இத்தாலியை சேர்ந்த அலிடாலியா நிறுவன விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஆண் பயணி ஒருவர் பலமாக சிறித்தபடி திடீரென எழுந்தார்.
பணியில் இருந்த விமான பணிப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்தார். இந்த விமானத்தை லிபியா தலைநகர் திரிபோலிக்கு திருப்ப வேண்டும். இல்லா விட்டால் இவரின் கழுத்தை அறுத்து கொலை செய்வேன் என மிரட்டினார். இதனால் விமான பயணிகள் பீதி அடைந்தனர்.
இதற்கிடையே மற்ற விமான ஊழியர்கள் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த படியே அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து ரோம் நகர போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விமானம் அங்கு தரை இறக்கியவுடன் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் கஜகஸ்தானை சேர்ந்தவர்.
48 வயதான அவர் பாரீசில் வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதற்கிடையே கத்தி முனையில் பிணைக்கை தியாக பிடித்து வைக்கப் பட்டிருந்த விமான பணிப் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு ரோம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment