Thursday, April 14, 2011

10 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீரில் பஞ்சாயத்தேர்தல் ஆரம்பம்

ஸ்ரீநகர்: பத்து ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் இன்று முதல் பஞ்.,தேர்தல் துவங்க உள்ளது. மே மாதம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 128பஞ்சாயத்துக்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் பிரிவினைவாதிகள் என யாரும் போட்டியிட வில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக கங்கன்,பட்காம், கொய்மோ,மற்றும் குப்வாரா ,உதம்பூர். ஜம்மு, சம்பா, பிஸ்னா பகுதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குபதிவோ, வாக்குசீட்டுகளோ பயன்படுத்தப்படவில்லை. மக்களே நேரடியாக பஞ்., தலைவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.கடந்த 200-ல் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதையடுத்து இந்த பஞ்., தேர்தல் நடைபெற உள்ளது.பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. இத்தேர்தலில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment