Monday, April 18, 2011

அமெரிக்காவில் வீசிய சூறாவளி காற்றில் 50 பேர் பலி(காணொளி இணைப்பு)



ராலியாஹ்: அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, சூறாவளியால் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களான ஒக்கலஹாமா, வடக்கு கரோலினா, வெர்ஜினியா ஆகி‌ய மாகாணங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதில் வடக்கு கரோலினாவில்வீசிய சூறாவளி காற்றினால் வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மரங்கள் ‌வேரோடு சாய்ந்தன. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சூறாவளி காற்றினால் தூக்கி வீசப்பட்டன. இந்த வெள்ள சேதத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்‌மையின் நிர்வாகி ஜிலாம்ப் கூறினார். சேதமடைந்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ள பாதித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதால், அங்கு அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment