குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அதிகாரிகளும், பொதுமக்களும் தைரியமாக பேச முன்வந்துள்ளது, நல்ல விஷயம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், கோல்கட்டாவில் நேற்று கூறியதாவது:குஜராத்தில், 2002ல் நடந்த கலவரம் குறித்து, அதிகாரிகளும், பொதுமக்களும் தைரியமாக பேச முன்வந்துள்ளனர். போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட், இது தொடர்பாக தைரியமாக கருத்து தெரிவித்துள்ளார். இது மிகவும் நல்ல விஷயம்.சிறப்பு புலனாய்வு குழுவிடம், இது தொடர்பாக சஞ்சீவ் பட் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது இந்த அளவுக்கு தீவிரமாக பேசப்படவில்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.மோடி மீது மீண்டும் குற்றச்சாட்டு: இதற்கிடையே, குஜராத் கலவரத்தின் போது, ஜாம்நகர் நகராட்சி கமிஷனராக இருந்த பிரதீப் சர்மா என்ற அதிகாரி, குஜராத் கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, ஒரு கடிதம் எழுதியுள்ளார்.பிரதீப் சர்மா, நில மோசடி வழக்கில் சிக்கி, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்து, இந்த கடிதத்தை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, அவர் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:குஜராத் கலவரம் நடந்தபோது, நான், ஜாம்நகர் நகராட்சி கமிஷனராக இருந்தேன். என் சகோதரர் குல்தீப் சர்மா, போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து, ஒரு அதிகாரி என்னை போனில் தொடர்பு கொண்டார்.
"கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, என் சகோதரரிடம் தெரிவிக்கும்படி, அவர் கூறினார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து, எனக்கு போன் செய்த அதிகாரி யார் என்பதை, சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதீப் சர்மா எழுதியுள்ளார்.

0 comments:
Post a Comment