Thursday, April 28, 2011

அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; சிரியா கலவரத்தில் 400 பேர் பலிs


அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; 
சிரியா கலவரத்தில் 400 பேர் பலி
டமாஸ்கஸ், ஏப். 28
 
சிரியாவில் அதிபர் பாஷார்-அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தை அடக்க பொதுமக்கள் மீது ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.இருந்தும் போராட்டம் குறைந்த பாடில்லை.
 
டாரா, டமாஸ்கஸ், தவுமா உள்ளிட்ட அனைத்து நகரங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. இப்போராட்டத்தில் இது வரை 400 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சிரியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஈவு இரக்கமின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி இதுகுறித்து விவாதிகக் வேண்டும்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
 
சிரியாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் நாடுகளின் தூதர்களும் இங்கு நடைபெறும் படுகொலைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

0 comments:

Post a Comment