Wednesday, April 27, 2011

விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் : சுப்ரீம் கோர்ட் தடை



புதுடில்லி: விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க டில்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு: டில்லி சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையம் போன்றவை விமான பயணிகளிடம் விமான வளர்ச்சி கட்டணமாக வசூலித்து வந்தது. இதன்படி மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளூர் பயணிகளிடம் ரூ100, வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.600-ம், டில்லி சர்வதேச விமான நிலையம் உள்ளூர் பயணிகளிடம் ரூ.200,வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.ஆயிரத்து 300 என வசூலித்து வந்தது. இது போன்ற கட்டணங்களை வசூலிக்க கூடாது என நுகர்வோர் அமைப்பு ஒன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்திருந்தது. இருப்பினும் இரு விமான நிலையங்களிலும் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ஆர்.வி ரவீந்திரன் மற்றும் ஏ.கே. பட்னாயக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் எந்த ஒரு சட்ட வரைவு இல்லாமல் பணம் பெறுவது கூடாது இந்த வழக்கைபொறுத்தவரையில் ஏர்போர்ட் எக்கனாமிக் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் அனுமதி பெற வில்லை.எனவே விமான பயணிகளிடம் எந்த விதமான கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்றும் இதுகுறித்த டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடியாகும் என அவர்கள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment