Tuesday, April 26, 2011

தொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்

26 APR 2011
child with tv
தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.
இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.
3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.
இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.
அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment