Wednesday, April 13, 2011

பிரான்ஸில் தடையை மீறி பர்தா அணிந்த 2 பெண்கள் கைது

லண்டன்: பிரான்ஸில் தடையை மீறி பர்தா அணிந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.


பிரான்ஸில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கென்ஸா டிரைடர் என்பவர் புரோவென்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து பர்தா அணிந்து தலைநகர் பாரீஸுக்கு பயணம் செய்தார். புதிய சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டாத்தில் ஈடுபட்டதால் அவரும், மற்றொரு பர்தா அணிந்த பெண்ணும் நாட்ரடாம் தேவாலயத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ. 9 ஆயிரத்து 610 அபராதம் விதிக்கப்படலாம் என்று டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக 5 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

வெளியே வந்த பிறகு டிரைடர் கூறியதாவது,

நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எனது உரிமையைத் தான் கேட்கிறேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. பெண்களை அடக்குவதற்ககாத் தான் இந்த தடை என்றார்.

நேற்றிரவு 12க்கும் மேற்பட்ட பெண்கள் சட்டவிரோதமாக கூட்டம் கூடியதாகவும், கலைந்து போக மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அல் கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment