அலி அப்துல்லா கடந்த 32 ஆண்டுகளாக யேமனை ஆட்சி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அலி அப்துல்லா கடந்த 32 ஆண்டுகளாக யேமனை ஆட்சி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் 30 தினங்களுக்குள் ஆட்சிப் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்கத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு அரபிய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை யேமன் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தபட்சம் 120 பேர் கொல்லப்பட்டனர்.
யேமன் அதிபரின் இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா பூரண ஆதரவளித்துள்ளது. இந்தத் தீர்மானம் வரவேற்கத் தக்கது எனவும், அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் எனவும் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அலி அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி குடும்பம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment