Wednesday, April 6, 2011

தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலைக் கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.


நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி பயணிகள் ரயில் நேற்று மாலை வந்து கொண்டு இருந்தது. அந்த ரயில் இரவு 7.30 மணி அளவில் ஊத்துக்குளி ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஐயாமுத்தையன் காடு என்ற இடம் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது.

ஆனால் ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தவில்லை. மாறாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து நிறுத்தினார். பின்னர் அந்த சத்தம் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு அதிகாரிகள் சென்று பார்த்தபோது அங்கு பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.

இதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போதும் ஊத்துக்குளி ஐயாமுத்தையன் காடு அருகே வந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது.

இந்த முறையும் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தவில்லை. மாறாக ஈரோடு வந்த அங்கு ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் பாறாங்கல்லில் மோதி விபத்திலிருந்து தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறவிருந்த சமயத்தில் அடுத்தடுத்து 7 இடங்களில் பாறாங்கல் வைத்து ரயிலைக் கவிழ்க்க முயற்சிகள் நடந்தன. 

இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் மீண்டும் ரயிலைக் கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment