Wednesday, April 13, 2011

லண்டனில் நிர்வாணமாகத் திரியும் தமிழர்: சித்திரவதை காரணம்.



பிரித்தானியாவில் எசிக்ஸ் மாவட்டத்தில் உள்ள பூங்கா ஒன்றின் புதரில் நிர்வாணமாக நின்றிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தம்மைத் தாமே மகிழ்வித்துக்கொண்டு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்றுவரும் அப் பூங்காவில் அவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ தினம் அன்று பிரஸ்தாப நபர், தான் அணிந்திருந்த ஜீன்ஸை கைகளில் எடுத்துவைத்திருந்ததாகவும் அவர் ஒரு புதருக்குள் நின்றிருந்ததாகவும் ஒரு பெண் வணிக நிலைய காவலாளி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். என்ன நடந்தாலும் நான் செய்வதை நிறுத்தமாட்டேன் என அவர் கூச்சலிட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த ஜேமஸ் எனப்படும் நபரே கைது செய்யப்பட்டவராவார். அவரின் அநாகரீகச் செயலின் பின்னால் இருக்கும் விடையங்களை அறிந்த நீதிபதி அதிர்சியில் உறைந்துபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1991ம் ஆண்டு அவரை இலங்கை இராணுவம் கைதுசெய்து, பல மாதங்களாக அடைத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும், அவர் ஆண் உறுப்பிலும், இடுப்பிலும் மின்சாரத்தை செலுத்தி கொடுமை செய்துள்ளதாகவும் ஜேமசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். ஜேமஸ் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் இலங்கை இராணுவத்தின் கொடுமைகளால் அவர் இவ்வாறு ஆளாகியுள்ளதாவும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதவான், அதிர்சியளிப்பதாவும் மேலும் இலங்கையில் அவருக்கு ஏற்பட்ட கொடுமைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். இக் குற்றச் செயல்களுக்காக சீர்திருத்த சிறைத்தண்டனை வழங்கியுள்ள நீதவான், தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மேலதிகமாக பிரத்தியேக மனநல மருத்துவரை அணுகுமாறும் பரிந்துரை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment