Tuesday, April 26, 2011

பிரான்சில் விளையாட்டு விபரீதமானது .


பரிஸ் Disneylandல் திங்கட்கிழமை மதியமளவில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இங்கு ஓடப்படும் மலைக்கணவாய் தொடருந்து விளையாட்டில் (Big Thunder Mountain) 15 மணியளவில் கடைசிக் குகைக்கு திரும்புகையில் மலையமைப்பிற்காக அமைக்கப்பட்ட செயற்கைப் பாறையொன்று சரிந்து விழுந்துள்ளது.
இந் தொடருந்து விளையாட்டில் பங்கடுத்துக் கொண்டவர்கள் மீது இப்பாறை சரிந்து விழுந்துள்ளது. இதில் ஐவர் காயமடைந்தனர். இதில் ஒருவர் ஆபத்தான தலைக் காயத்திற்குள்ளாகியுள்ளார். விபத்து நிகழ்ந்தபோது 25 சுற்றுலாப் பயணிள் பயணித்தபடி இருந்துள்ளனர். இதில் 40 வயதுடைய பிரான்சைச் சேர்ந்தவரே படுகாயமடைந்தவராவார்.
இவர் உடனடியாக Clichy-sur-Seine இலுள்ள hôpital Beaujon ற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். Disneylandன் Frontier Land பகுதியிலேயே இச் சாகச விளையாட்டுத்திடல் உள்ளது. Disneylandன் நிர்வாகம் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கான வசதிகளையும் மருத்துவ ஏற்பாடுகளையும் உடனடியாகப் பொறுப்பேற்றுள்ளது. விபத்தின் பின்னர் இந்த விளையாட்டுத்திடல் மூடப்பட்டுள்ளது. Chessy காவற்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment