Tuesday, May 31, 2011

இந்தியா வந்த ஜெர்மன் பிரதமர்-விமானத்தை அனுமதிக்காமல் துருக்கி மீது சுற்றவிட்ட ஈரான்!


Angela Merkel
may 31
டெல்லி: ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் இன்று இந்தியா வந்தார். அவரது ஏர்பஸ் விமானம் தனது நாட்டின் மீது பறக்க ஈரான் ஆட்சேபித்ததால், விமானம் துருக்கிக்குத் திருப்பப்பட்டு அந் நாட்டு வான் பகுதியில் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் விமானத்தில் எரிபொருள் காலியாகத் தொடங்கியதையடுத்து தனது நாட்டின் மீது பறக்க, அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.


விமானம்  துருக்கி வான்வெளியில் சுற்றியபடியே ஈரான் அதிகாரிகளுடன் துருக்கி அதிகாரிகள் மூலமாக ஜெர்மன் அதிகாரிகள் 1 மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மெர்கலின் விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

இன்னும் சிறிது நேரம் வானில் வட்டமடித்திருந்தால், எரிபொருள் காலியாகி துருக்கியில் தரையிறங்க வேண்டிய நிலை அந்த விமானத்துக்கு ஏற்பட்டிருக்கும். டெல்லியை அடைவதற்கு மட்டும் தேவையான எரிபொருள் இருந்த நிலையில், அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

ஜெர்மன் பிரதமருக்காக வாங்கப்பட்ட புதிய ஏர்பஸ் விமானத்தில் மெர்கல் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அவருக்கு இந்த அனுபவம் நேர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியதாகத் தெரிகிறது.
  

AFFA வின் நேற்றய போட்டி(30-05-2011) நடைபெற்றே ஆட்டத்தில்

நேற்று (30-05-11) இரண்டாம் காலிறுதி ஆட்டமாக அதிரை AFFA அணியும் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியும் மோதின . கடைசி ஒரு நிமிடம் மிஞ்சி இருந்த நிலையில்
அதிரை AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


நேற்றைய  ஆட்டத்தின் சிறப்பு அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியில் பத்தாம் வகுப்பில் 462 மதிப்பெண் பெற்ற சிறுவனின் ஆட்டத்திற்கு அரங்கமே அதிர்ந்தது . அவருடைய ஆட்டத்தை பாராட்டி 800 ருபாய் பரிசு வழங்கப்பட்டது .


கால்பந்து ரசிகர்கள் அந்த சிறுவனை பாராட்டும் காட்சி 




இன்று  (31-05-11) முன்றாம் குவாட்டர் பைனல் ஆட்டமாக் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணியும் சிவகங்கை அணியும் மோதிகினறன .

Monday, May 30, 2011

அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் சிக்கியது

may 30
சென்னை: சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம், விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது.

நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்:

இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

May 30, சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே.

மக்கா மஸ்ஜித் முதல் மலேகன் வரை, "இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு" இவர்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள்.

"மதத்தை வைத்து அரசியல் நடத்த" இந்த பாரதிய ஜனதாகட்சி இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்கள் எத்தனை? எத்தனை?

இதன் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் ஊற்று கண்களாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளாகிய பாரதிய ஜனதா பார்ட்டி,

விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிஷத், இந்து முன்னணி, ஹிந்து சுயம் சேவக் சங்க், துர்க்கா வாகினி, ஆகிய அமைப்புகள் இருந்து செயல்பட்டு வந்தன.

இப்படிப்பட்ட பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி, இவர்கள் சொல்கிறார்கள் வளர்ந்து வரும் உலக தீவிரவாததிற்கு எதிராக ஒன்று பட்டு போராடவேண்டும் என்று.

வேடிக்கையாக இருக்கிறது, இந்திய தீவிரவாதத்தின் தலையாக இருந்து செயல்படுபவர்கள் உலக தீவிரவாதத்தை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் இவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்நிலையில் இந்தியாவின் மனித உரிமை இயக்கங்களும், மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும், மக்களும், தலைவர்களும் இந்த ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியே

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

May 30, பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.

SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.
இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.

புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக

மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!


மே 30,  குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.

இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,

மோடி செய்த இனப்படுகொலையை மறைக்க ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து பயங்கரவாதி மோடி மீது படிந்த கரையை துடைக்க பார்க்கின்றன.

குஜராத்தின் பயங்கரவாதி மோடி ஆட்சியை பற்றி சில தினங்களுக்கு முன் காந்தியவாதி அன்னா ஹஸாரே கூறியதாவது,

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

Sunday, May 29, 2011

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இஸ்லாத்தை அறிவோம் -பயிற்சி முகாம்:


நாள்:30.05.2011 திங்கள்கிழமை
இடம் :தரகர் தெரு,பெண்கள் மதரஸா அதிரை
நேரம் :காலை 9.00.மணி
சிறப்புரையாளர்கள் :சகோ M.ஹாரிஸ் முஹம்மது .
தலைப்பு :நம்மை நாம் புணரமைத்தல்.
சகோ:S.S.A கரீம்
தலைப்பு :குடும்பத்தை புணரமைத்தல்
சகோ:M.ஜெய்னுல் ஆபுதீன்
தலைப்பு:சமுகத்தை புணரமைத்தல்
(பெண்களுக்கு தனி இட வசதி உண்டு)
கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய எண்:
9944329328,9952141802

Friday, May 27, 2011

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 பேர் முதலிடம்


Nithya, Bagyashree and Shini

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.

முதலிடம் பிடித்தவர்கள் 

செய்யாறு மின்னலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நித்யா, கோபிச்செட்டிப்பாளையம், ரம்யா, சேலம் சங்கீதா, சென்னை திருவொற்றியூர் ஹரிணி.

11 பேர் 2வது இடம்

சேலம் மாவட்டம் மல்லூர் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி விக்னேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் போல மேலும் 10 மாணவ, மாணவியர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

24 பேருக்கு 3வது இடம்

494 மதிப்பெண்களைப் பெற்று 24 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் விரைவில் காணலாம்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.

பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.

இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாயின.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மெட்ரிகுலேஷனில் 4 பேர் முதலிடம்

மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஜெயபாரதி, ஈரோடு மாவட்டம் ஹர்ஷினி, தர்மபுரி மாவட்டம் அனிதா, செங்கல்பட்டு மாவட்டம் அனிக்ஷா ஆகியோர் தலா 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

12 பேருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 22 பேருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களில் 94.7 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர்.

ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 92.6 சதவீதம் பேரும், மாணவியர் 97.60 சதவீதம் பேரும் பாஸாகியுள்ளனர்.

ஜூன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல்

மதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறு கூட்டல் விண்ணப்பம்

மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு

தேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.

ஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு 
ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும்  நடைபெறும்

அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!!!

27 May 2011
இந்த புகை படத்தில் பார்க்கும் குப்பை தொட்டிகள் இருக்கும் இடங்கள் புதுமனைதெரு மற்றும் cmp லைன் தெருக்களில் அல்லபடாமல் இருக்கும் குப்பைகள்.
புதுமனைதெரு

புதுமனைதெருவில் இந்த குப்பை தொட்டி இருக்கும் இடம் மக்கள் நடந்து செல்லும் பாதையாக உள்ளது இந்த பாதையில் குப்பைகளை தினமும் அல்லாமல் இருக்கின்றது பேரூர் நிர்வாகம்.இங்கு கொசுத் தொல்லையும் அதிக துர்நாற்றம் வீசுகின்றது. இங்கு நடந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
cmp லைன் 

cmp லைன்ல் குப்பை தொட்டிகள் அதிகஅளவில் உள்ளது ஆனால் நீங்கள் பார்க்கும் குப்பைத்தொட்டி நிலைதான் அணைத்து குப்பைத்தொட்டிக்கும்.
குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.ஆனால் இந்த குப்பைகளை அள்ளுவதற்கு இங்கு உள்ள வார்டு உறுப்பினர் முயற்சி எடுக்கவில்லை. அதுபோல் cmp லைன் வாய்கால் மரம் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கின்றது.அங்கு உள்ள வீடுகளுக்கு பாம்புகள் வரும் அபாயம் உள்ளது இதற்கு உடனடியாக வாய்காலை மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய பேரூர் நிர்வாகத்திடம் கேட்டுகொள்கிறோம்.


புகைப்பட உதவி :ஹசன் முராத்