Saturday, April 10, 2021

மதமாற்றம் செய்வதைத் தடுக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கடும் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை

 மிரட்டுதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கூறி மதமாற்றம் செய்வதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த மனுவை பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறுகையில் “ நீண்ட ஆண்டுகளாக இந்தியா மதமாற்ற சம்பவங்களுக்குப் பலியாகி வருகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள், குறிப்பாக எஸ்சி,எஸ்டி மக்கள், அவர்களின் பிள்ளைகள், ஆண்கள் , பெண்கள் மதமாற்றத்துக்குள்ளாவதைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

மிரட்டுதல், அச்சுறுத்துதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு வழிகள் மூலம் இவர்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

இந்த நாட்டில் ஒரு மாவட்டம் கூட மந்திர வேலைகள் மூடநம்பிக்கைகள், மதமாற்றம் இல்லாமல் இருப்பதில்லை. நாடுமுழுவதும் ஒவ்வொரு வாரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கடந்த் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 86 சதவீதம் இருந்த இந்துக்கள் 79 சதவீதமாகக் குறைந்துவிட்டனர். பல்வேறு அமைப்புகள் , தனநபர்கள் கிராமங்களுக்குச் சென்று எஸ்டி, எஸ்சிபிரிவு மக்களை மதமாற்றி வருவது அச்சமடையச் செய்துள்ளது. கடந்த 20ஆண்டுகளாக பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள் இடையே மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.

ஆதலால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மதமாற்றத்தைத் தடுக்க ஒருகுழுவை மத்திய அரசு அமைக்க உத்தரவிட வேண்டும். மூடநம்பிக்கைகள், மாந்தரீக வேலைகள், மதமாற்றம் ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தாக்கல் செய்யவும் உத்தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் எப் நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.

இந்த மனுவை மீது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அமர்வு, இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரர் அஸ்வினி உபாத்யாயேவுக்கு எச்சரித்தனர். இதையடுத்து, அஸ்வின் உபாத்யாயே மனுவை திரும்பப் பெற்றார்.



கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; முதல்வர் அறிவிப்பு!

     கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், நிபுணர்களின் அறிவுரைப்படி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த பின்னர் , 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 95.31 சதவீதம் பேர், குணமடைந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாகவும், 20 லட்சம் தடுப்பூசிகள் உட்பட சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், முழு ஊரடங்கு வராது என்று அவர் தெரிவித்தார்.



ரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்!

 
    கோவை மற்றும் நாமக்கல் பகுதிகளில் ஆலைகளில் வேலைபார்த்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக ரயில்களில் முன்பதிவு செய்தபோது இடம் கிடைக்காமல் எப்படி ஊருக்குச் செல்வது என தவித்து வந்துள்ளனர்.

    இதை அறிந்த புரோக்கர்கள் சிலர், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களைச் சந்தித்து, கோவை, நாமக்கல் பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் இடம் கிடைக்காமல் இருக்கிறார்கள். இவர்களை நாம் பேருந்தில் அழைத்துச் சென்று பீகாரில் விட்டுவிட்டு, அங்கிருந்து தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்தால் ரூபாய் 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை கிடைக்கும் என ஆசையைத் தூண்டியுள்ளனர்.
இதை நம்பிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வட மாநில தொழிலாளர்களைப் பேருந்தில் ஏற்றிக் கடந்த மாதம் 15ம் தேதி அனுப்பிவைத்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர்களுக்குச் சாப்பாட்டுப் படி மட்டும் கொடுத்துள்ளனர்.

    பின்னர், பீகார் மாநிலம் பாட்னாவுக்குச் சென்று வட மாநில தொழிலாளர்களை இறக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்குச் செல்ல தொழிலாளர்கள் வருவார்கள் என ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால் ஒருவர் கூட தமிழகம் வர தயாராக இல்லை என்பதை அறிந்த ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்து, இதுபற்றி பேருந்து உரிமையாளரிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், பேருந்து உரிமையாளர்கள் பயணிகள் இல்லாமல் பீகாரிலிருந்து காலியாக வந்தால் டீசல் செலவு கட்டுப்படியாகாது எனக் கூறி, ஒருசில நாட்கள் அங்கேயே இருந்து பயணிகளை ஏற்றி வாருங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் ஓட்டுநர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் கடந்த 25 நாட்களாகப் பீகாரிலேயே சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, பேருந்தை இயக்கி சம்பாதித்துக் கொடுக்கும் ஓட்டுநருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் சாப்பாட்டிற்குக் கூட பணம் அனுப்ப இயலாத பேருந்து அதிபர்களுக்கு 3 கோடி ரூபாய் பேருந்து எதற்கு என ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மேலும் பீகாரில் தவித்து வரும் பேருந்து ஓட்டுநர்கள் பத்திரமாகச் சொந்த ஊர் திரும்ப கோவை, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து ஓட்டுநர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்திலிருந்து பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள், தமிழகம் வர பயணிகள் இல்லாததால் ஊர் திரும்ப வழியில்லாமல் 25 நாட்களுக்கு மேலாகப் பேருந்து ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



பாசிசத்தின் கோரப்பிடியில் வாரணாசி நீதிமன்றம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்

     ஒளரங்கசீப் காசிவிசுவநாதர் கோயிலை இடித்துவிட்டுதான் ஞானவாபி மசூதியை கட்டியதாகவும் அந்த மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என்று போடப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த வாரணாசி நீதிமன்றம் மசூதியை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதியை போல இன்னுமொரு அநீதியை இந்திய சமூகம் ஏற்காது என்பதுடன் சட்டத்திற்கு புறம்பான மேற்கண்ட உத்தரவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.



Friday, April 9, 2021

குவைத்தில் பகுதி நேர ஊரடங்கு, நடைபயிற்சி, ஷாப்பிங், உணவு விநியோகம் தற்போது மற்றும் ரமலான் மாதத்தில்...

ஊரடங்கு உத்தரவு : தற்போது இரவு 7.00 மணி முதல் காலை 5.00 மணி வரை.

ரமலான் மாதத்தில் : இரவு 7.00 மணி முதல் காலை 5.00 மணி வரை                 

நடைபயிற்சி தற்போது : இரவு 8.00 மணி முதல் இரவு 10. 00 மணி வரை.

ரமலான் மாதத்தில் : இரவு 8.00 மணி முதல் இரவு 10. 00 மணி வரை.

ஷாப்பிங் தற்போது : இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

ரமலான் மாதத்தில் : இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை

உணவு டெலிவரி தற்போது : இரவு 7.00 மணி முதல் இரவு 10. 00 மணி வரை
ரமலான் மாதத்தில் : இரவு 7.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை.





Thursday, April 8, 2021

நோன்பு திறப்பதில் நபிவழி!

 


அதிராம்பட்டினம் அரசு மருத்துவமணையில் வெறி நாய்கள் ஆகிரமைப்பு !

         நமது ஊர் அரசு மருத்துவமனையில் வெறி நாய்கள் வருவதால் தொற்று நோய் வரும் அபாயம் காணப்பட்டு வருகிறது. இதை சம்மந்தபட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடி சரி செய்யுமாறு அதிரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   




நுழைவாயிலும் சேதப்பட்டுள்ளது இதையும் சரி செய்ய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.




Wednesday, April 7, 2021

பிலால் நகரின் அவலம் ! பல வருடமாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை !

     நமது ஊரில் ஏரிபுரக்கரை கிராமத்தை உட்பட்ட பிலால் நகரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றது இவர்களின் பல நாள் கனவும், கோரிக்கையும் இன்றுவரை எந்த அரசாங்கமும் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை . இதனால் இங்கு வாழும் மக்கள் சரியான தார் சாலையும் / கழிவு நீர் வடிகால் இல்லாததால் பரிதவிக்கும் மக்கள்.