Sunday, June 9, 2013

நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் பராமரிப்பு பெயரில் ஆண்டுக்கு ரூ5கோடி ஊழல்…

poor house  green  justice_chandru

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் பெரிய பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு அதன் நடுவில் காட்சியளிக்கும் பங்களாக்களில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வசிக்கிறார்கள்..
 
    இந்த நவீன வசதிகள் கொண்ட பங்காளக்கள், தமிழக அரசுக்கு சொந்தமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளது. அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் இந்த பங்களாக்களுக்கு, பொதுப்பணித்துறை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒவ்வொரு பங்களாவுக்கு ரூ5 இலட்சம் செலவு செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கு காட்டுகிறார்கள்.
 
     இந்த செலவுகள் அமைச்சர்கள், நீதிபதிகள் விருப்பத்தின் பேரில், செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது.
 
     நம் சந்தேகத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சர்கள், நீதிபதிகளின் வேண்டுகோளின்படியேதான் நாங்கள் செலவு செய்கிறோம் என்று பதில் அளித்தார்கள்..
 
     ஆனால் வாக்களித்து, அரசியல்வாதிகளை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் அப்பாவி மக்கள் இன்னும் ஓட்டை குடிசையில், பிளாட்பாரத்தில்தான் வசிக்கிறார்கள்.
 
     பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் பங்களாக்களில் பல செலவு செய்ததாக போலியாக பில் போட்டு ஆண்டுக்கு ரூ5 கோடி வரை ஊழல் செய்கிறார்கள் என்ற பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது.
 
     தமிழக அரசின் பொதுப்பணியிலிருந்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் பெறப்பட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் குடியிருக்கும் பங்களாவுக்கு செய்த2012-13ம் ஆண்டிற்கான செலவை அப்படி தருகிறோம்.

திரு நீதியரசர் K. சந்துரு(ஒய்வு)…
Committed judiciary  என்றால் கெட்ட வார்த்தை என்று விமர்சனம் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக பேட்டி அளிக்கும் ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பங்களாவில் குடியிருந்த செய்யப்பட்ட செலவு…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,89,714
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,28,208
  3. WATER CHARGES                          –  RS 37,380
                          TOTAL..                                         –  RS 5,55,302
elipr dhama rao justice     justice jaichandran   justice chitra venkatraman         justice sugana
திரு நீதியரசர் எலிப்பி தர்மராவ்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,53,960
  2. ANNUAL MAINTENANCE             — Rs  1,76,109
  3. WATER CHARGES                          –  RS 37,380
                      TOTAL..                                    –  RS 5,67,449
நீதிபதி செல்வி சுகுணா…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,89,931
  2. ANNUAL MAINTENANCE             — Rs  1,60,109
  3. WATER CHARGES                          –  RS 37,380
                       TOTAL..                                      –  RS 5,87,420
 
நீதிபதி திருமதி சித்ராவெங்கட்ராமன்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 18,275
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,58,060
  3. WATER CHARGES                          –  RS 37,380
                         TOTAL..                                      –  RS 3,13,715.
நீதியரசர் திரு ஹரிபரந்தாமன்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 8,58,633
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,71,549
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 11,67.562.
நீதியரசர் திரு எம்.ஜெயசந்திரன்..
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 4,05,978
  2. ANNUAL MAINTENANCE             – Rs  2,49,601
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 6,92,959.
87efe__5F3C12B18F381A24CEE51CA51D       181272573_c335f28bd2
நீதியரசர் திரு எம்.துரைசாமி…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 24,93,511(ரூ24.93 இலட்சம்)
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,19,197
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 27,50,088 thanks, makkal seithimaiyam

தொடரும் சிங்கள பேரினவாதத்தின் அடாவடி!


ஜூன் 08: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் இதுவரை ஒழுங்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சாக்கிட்டு, 5 படகுகளையும், அவற்றில் இருந்த 24 மீனவர்களையும் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அனுராதபுரம் சிறையில் இவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த அதிர்ச்சியில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீளாமல் இருக்கின்ற நிலையில், நேற்றையதினம் 6-6-2013 அன்று கிடைத்த செய்திப்படி, கச்சத்தீவு பகுதியில் ரோந்து கப்பல்களுடன் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படையினர் மேலும் 25 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, தங்கள் கப்பலுடன் படகுகளை இணைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூன் 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, யாழ் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 

கைது செய்த 49 மீனவர்களை அன்னியில், அந்தப் பகுதியிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களையும் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2 படகுகள் பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளானதாகவும், படகிலே இருந்த மீனவர் முனியசாமி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த 49 மீனவர்கள் தவிர, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் போஸ், பாபு, ரீகன் ஆகிய 3 மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படை போலீசார் சிறை பிடித்திருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் என்பதால் இவர்களை நிச்சயம் மத்திய அரசு பாதுகாக்காது. எனவே தமிழர்களே தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது.

*மலர் விழி* thanks, sinthikkavum
 

ஆப்கான் கூட்டுப்படுகொலை:குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க வீரர்!

US soldier confesses of afghan mass killing
 
     வாஷிங்டன்: குழந்தைகள், பெண்கள் உள்பட 16 அப்பாவி ஆப்கானியர்களை அநியாயமாக கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். மரணத் தண்டனையில் இருந்து தப்பவே 39 வயதான அமெரிக்க ராணுவ வீரர் ராபர்ட் பெயில்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவனுடைய வழக்குரைஞர் கூறுகிறார். தான் செய்த கொலை பாதகங்களை ஒவ்வொன்றாக விவரித்து வாஷிங்டனில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் ராபர்ட் பெயில்ஸ்.
 
       கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக மக்களின் மனசாட்சியை அதிரவைக்கும் மனித குலத்திற்கு எதிரான மாபாதக செயலை நிகழ்த்தினான். காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெளியே வந்தான் ராபர்ட் பெயில்ஸ். இரண்டு கிராமங்களைச் சார்ந்த அப்பாவிகளான 16 பேரை இந்த கொடூரன் படுகொலைச் செய்தான். இதில் ஒன்பது குழந்தைகள் ஆவர். இந்த கொடூர சம்பவத்தில் ஆறுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி:இந்தியா மீதான தடையை நீக்கியது அமெரிக்கா!

Oil imports from iran-the US lifted a ban on india
 
     வாஷிங்டன்:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்ததற்காக இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதிச்செய்வது குறைந்தது கண்டறிந்ததை தொடர்ந்து தடையை வாபஸ் பெறுவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, மலேசியா, கொரியா குடியரசு, இலங்கை, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, துருக்கி, தைவான் ஆகிய நாடுகள் மீதான தடை வாபஸ்பெறப்படுவதாக கெர்ரி அறிவித்துள்ளார்.
 
 
றுமாதங்களுக்கு முன்பு அமெரிக்கா இந்நாடுகள் மீது தடை விதித்தது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் இடையேயான கருத்தொற்றுமையே தெஹ்ரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்வது கணிசமாக குறைவதற்கு காரணம் என்று கெர்ரி கூறுகிறார். ஈரானில் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்து வந்த இந்தியா, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து கணிசமாக இறக்குமதியை குறைத்ததாக செய்திகள் வெளியாகின.

பாதி குழந்தைகளின் மரணம் ஊட்டச்சத்துக் குறைவால் நிகழுகின்றன!

                           7 Jun 2013 NYT2009022716513718C
 
      வாஷிங்டன்:ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதி எண்ணிக்கையினரும் மரணமடைவதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்காததால் உலகில் ஆண்டுதோறும் 31 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. பிறந்த முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு கிடைப்பது கட்டாயம். வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது இக்காலக் கட்டத்தில் கிடைக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
      பொருளாதார பின்னடைவால் பல குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைக்காமல் போகின்றன. உலக அளவில் 16.5 கோடி குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற உயரம் இல்லை. உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 5 கோடியாகும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், இரண்டு வயது வரை குழந்தைக்கும் ஊட்டச் சத்துமிக்க உணவுகள் கிடைத்தால் கடுமையான நோய்கள் ஏற்படாது என்று இது தொடர்பான ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்காவில் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்தின் பேராசிரியர் ராபர்ட் ப்ளாக் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியின் முழு விபரமும் லான்ஸேட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

அப்பாவிகள் மீதான தீவிரவாத வழக்குகள் ரத்து:உ.பி அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

                     8 Jun 2013 HC blocked UP Govts move to withdraw cases of terror on innocent
 
     அலகபாத்:தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவுச் செய்யப்பட்ட அப்பாவிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கைக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்குரைஞர் ரஞ்சனா அக்னிகோத்ரி உள்ளிட்ட 5 பேர் சார்பில் அலாகாபாத்உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் உள்பட பல குற்றவழக்குகளை உத்தரப் பிரதேச அரசு திரும்பப் பெற்றுள்ளது’ என்று சுட்டிக்காட்டப்பட்டது.
 
      இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், குற்றவழக்குகளை திரும்பப் பெறும் உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், இது தொடர்பாக 6 வாரத்தில் விளக்கமளிக்க வேண்டுமென்று மாநில, மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதற்கு பிறகு எதிர் கருத்தை தெரிவிக்க 4 வார அவகாசத்தையும் நீதிமன்றம் அளித்துள்ளது.
 
    ’தீவிரவாத வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதிப் பெறத் தேவையில்லை. ஏற்கெனவே இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதேபோல் இந்த மனுவையும் நிராகரிக்க வேண்டும்’ என்று உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பாக கூடுதல் அட்வக்கேட் ஜெனரல் புல்புல் கோதியால் வாதிட்டார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
     ஏற்கெனவே நீதிமன்றம் கேட்டபடி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான முழுவிவரத்தையும் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படித்த பின்புதான் கருத்துத் தெரிவிக்க முடியும். எனினும் நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை மதிப்போம். அப்பாவிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவோம் என்று தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி செயல்படுவோம்’ என்றார்.

மோடிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க தலைவர்கள்! நாட்டின் நிலைமை என்னவாகும்? – காங்கிரஸ் கேள்வி!

                         8 Jun 2013 India
 
     புதுடெல்லி:கோவாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தை பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதற்கு எல்.கே.அத்வானி உடல்நிலை சரியில்லாததால் கலந்துகொள்ளவில்லை என்று பா.ஜ.க மழுப்பியுள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
 
      காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியது:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருவதன் காரணமாக பாஜகவின் சில மூத்த தலைவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால் மோடியின் வரவினால் இந்த நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று பாஜக சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ஷக்கீல் அஹ்மது பேசுகையில், மோடி குழு பாஜகவில் அத்வானி குழுவை விரட்டிவிட்டது என்று குறிப்பிட்டார்.

வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை – பா.ஜ.கவுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி!

8 Jun 2013

      பாட்னா:வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை என்று பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஐக்கிய ஜனதா தளம். பீகார் மாநிலம் மகராஜ்கஞ்ஜ் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி அந்த மாநிலத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பாஜகவினரின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாததால்தான் இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

     இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலர் ராஜீவ் பிரதாப் ரூடி இடைத்தேர்தல் தோல்வி பற்றி கருத்து கூறியபோது, அடுத்த பொதுத் தேர்தலின்போது, தமது கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரசார பலம் தேவைப்படுகிறது. இது போன்ற தோல்விகளை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமானால் மோடி எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

     ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு நரேந்திர மோடி மீது இருக்கும் வெறுப்புணர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில பாஜக தலைவர்கள் கருத்து கூறிவருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுசீல்குமார் மோடி ஆகியோர் பெயர்களை முன்வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகார் மக்கள் நான்கில் மூன்று பங்கு அளவு வாக்களித்துள்ளனர். இனி வேறு எந்த தலைவரையும் பீகாருக்கு இறக்குமதி செய்யத் தேவையில்லை.

     பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் வெவ்வேறு கொள்கைகளை உடைய கட்சிகள். பொதுவான செயல் திட்டத்தின் அடிப்படையில் பீகாரில் ஆட்சிபுரிந்து வருகின்றன. ஒரு இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் எங்கள் கட்சியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா? புது டெல்லியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிக் குறிப்பிடும்போது, அனைவருக்கும் ஏற்புடையவராக இருக்க வேண்டுமென சொன்னோம். எங்களுடைய அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.

     பாஜகவின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடியை அறிவிக்க வாய்ப்புள்ளது குறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, அது அந்தக் கட்சியின் விவகாரம் என்று பதிலளித்தார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டும் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மோடி பலூன் விரைவில் வெடித்துவிடும் – சரத்பவார்!

                         8 Jun 2013 Agriculture Minister Sharad Pawar
 
     புதுடெல்லி:அளவுக்கு மீறி காற்றடிக்கப்பட்டு வரும் “மோடி’ என்ற பலூன் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெடித்துவிடும் என குஜராத் முதல்வர் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்  நரேந்திர மோடி குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது, அவரை பிரதானப்படுத்தி தேர்தலைச்சந்திப்பது உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சரத் பவார் அளித்த பதில்:நரேந்திர மோடிக்கு பாஜகவில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். என்னுடைய ஐம்பது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பலரைச் சந்தித்துள்ளேன். மிகைப்படுத்தப்படும் எந்த ஒரு விஷயமும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு பலூனில் தேவையான அளவுக்குத்தான் காற்றடிக்க வேண்டும். அளவுக்கு மீறி காற்றடித்தால் அழுத்தம் தாங்காமல் அது வெடித்துவிடும். அது போலத்தான் பாஜகவில் மிகைப்படுத்தப்பட்டு வரும் “மோடி’ என்ற பலூனும் விரைவில் வெடித்துவிடும் என்று சரத் பவார் தெரிவித்தார்.

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு:பாண்டே மீதான வழக்கு ரத்து இல்லை! உச்சநீதிமன்றம்!

                       8 Jun 2013 SupremeCourt
 
புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் கூடுதல் டி.ஜி.பி பி.பி பாண்டே மீதான வழக்கை ரத்துச் செய்ய உச்சநீதிமன்றம்மறுத்துவிட்டது. நீதிபதிகள் சுதன் மிஷ்ரா, மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலைச் செய்ய திட்டமிட்டு இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் வருவதாக குஜராத் போலீசுக்கு தகவலை அளித்தவர் பி.பி.பாண்டே ஆவார். இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டபோது துணை கமிஷனராக பாண்டே பதவி வகித்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Friday, June 7, 2013

சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதும் நாடுகள்!


ஜூன் 04/2013: யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில்  நடத்தப்பட்ட மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஒப் இந்தியா என்கிற இயக்கத்தின் சார்பாக சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளத்தால் கேரள தலைநகர் திருவனந்த புரம் ஸ்தம்பித்தது. 
சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது. யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ்பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. 
கண்டன மாநாட்டில் ஆல் இந்தியா மில்லி கவுன்சில், எஸ்.டி.பி.ஐ கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக, அரசியல் கட்சிகளும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆ. கிலானி, பேராசிரியர் ஜக்மோகன் சிங் (சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.
*உலகில் சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதும் நாடுகள்  இந்தியா, இலங்கை என்று தைரியமாக சொல்லலாம்*

ஜின்னாவின் உரைகளை வெளியிட வேண்டும் – மத்திய தகவல் உரிமை ஆணையம்!

                                  6 Jun 2013 Mohamed Ali Jinnah
 
     புதுடெல்லி: சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னா ஆற்றிய இரண்டு உரைகளை ஆல் இந்தியா ரேடியோ வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணையம்(சி.ஐ.சி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த உரைகளை வெளியிடாமல் தடுத்துவைப்பதற்கான காரணத்தை விளக்கவும் சி.ஏ.சி வலியுறுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக கடந்த சூழலில் சுதந்திரத்திற்கு முந்தைய காரியங்களை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணைய தலைவர் சத்யானந்த மிஷ்ரா கூறினார்.
 
பாகிஸ்தானுக்கு குடியேறிய தலைவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் ஆர்.டி.ஏ 8(1) (ஏ)பிரிவின் படி வெளியிடாமல் இருப்பது சரியல்ல என்று மிஷ்ரா கூறியுள்ளார். ஜின்னாவின் உரைகளை ஆல் இந்தியா ரேடியோவின் ஆவணப் பெட்டகத்தில் இருந்து வெளியிடவேண்டும் என்று கோரி தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் சமர்ப்பித்த மனுவில் சி.ஏ.சி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. வரலாற்று துறை மாணவர்களுக்கும், நாட்டின் வரலாற்றை அறிய விரும்பும் பொதுமக்களுக்கும் இவை விலை மதிக்க முடியாத சேகரிப்புகளாக அமையும் என்று மிஷ்ரா தெரிவித்துள்ளார். ஆவணங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக முதலில் தெரிவித்த பிரச்சார் பாரதி, ஆர்.டி.ஏ 8(10)(ஏ) வின் படி அளிக்க முடியாது என்று தெரிவித்தது.
 
     நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல்-பொருளாதார விருப்பங்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை குறித்த இந்த சட்டப்பிரிவின் படி தகவல்களை அளிக்க முடியாது என்பது பிரச்சார் பாரதியின் நிலைப்பாடாகும். சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற தலைவர்களின் விபரங்களை வரும் மாதங்களில் வெளியிடவேண்டும் என்று ஆணையம், ஆல் இந்தியா ரேடியோவுக்கு உத்தரவிட்டுள்ளது. 1947-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ஜின்னா ஆற்றிய உரையும், தேதி குறிப்பிடாத இன்னொரு உரையும் தங்களின் ஆவணப் பெட்டகத்தில் உள்ளதாக பிரச்சார் பாரதி கூறியிருந்தது. இந்த ஆவணங்கள் குறித்து செய்தி ஒலிபரப்புத் துறையின் கருத்தை ஆராய்ந்ததாகவும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்திற்கு தெரிவித்திருந்தனர். ஜின்னாவின் உரையை கேட்டு ஏதேனும் பாகிஸ்தான் ஏஜன்சியின் கடிதம் கிடைத்திருக்கும் என்றால் உரையின் நகலை அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் லெக்கீஸ், மினி ஸ்கர்ட்ஸ் அணிய வேண்டாம் – சீன போலீஸ் அறிவுரை!

skirts banned
 
     பீஜிங்:பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க பெண்கள் லெக்கீஸ், மினி ஸ்கர்ட்ஸ்(குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமானஆடைகள்) அணியவேண்டாம் என்று சீன தலை நகர போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. ஆண்களை கவராமலிருக்க பைகள் அல்லது பத்திரிகைகள் மூலம் உடலை மறைத்துக்கொள்ளுமாறும் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில், பஸ்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டும் புகார்கள் குறைவதாக இல்லை. இதனால் போலீசார் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
     பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க, குட்டை பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கீஸ் பேன்ட், மார்பு தெரியும் பனியன்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பின்பக்கம் உள்ள மேடான பகுதிகளில் சென்று அமராமல் முன்புறம் உள்ள கீழ்பகுதியில்தான் அமர வேண்டும். இதேபோல், மாடி பஸ்களின் உள்படியில் நிற்பதை தவிர்த்தால், செல்போன்களில் கீழே இருப்பவர்கள் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், இதை நோட்டீசாக அடித்து பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டியுள்ளனர். பேருந்துகளில் கண்டக்டர்கள் மூலம் இந்த அறிவுரைகளைகூறவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்திய போலீஸ் – வழக்கை வாபஸ் பெற உ. பி அரசு முடிவு!

                             6 Jun 2013 Image
 
     புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் குண்டுவைத்ததாக போலீஸ் அநியாயமாக குற்றம் சாட்டிய ஷமீம் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞர் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு முடிவுச் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு கொடோலியாவில் ஜமுனா ஃபதகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ப்ரஷர் குக்கர் குண்டை ஷமீம் தான் வைத்தார் என்ற போலீஸின் கூற்றை உ.பி அரசு நிராகரித்துள்ளது.
 
     2006 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி ஸங்கட் மோச்சன் மற்றும் வாரணாசி காண்ட் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. 21 பேர் கொல்லப்பட்ட இச்சம்பவங்களைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் ஜமுனா ஃபதக் அருகே ப்ரஷ்ஷர் குக்கர் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. ஹூஜி என்ற அமைப்புதான் இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக போலீஸ் வாதிடுகிறது. பின்னர் இக்குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரி என்று குற்றம் சாட்டி அலஹாபாத் மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றிய கலீலுல்லாஹ்வை சிறப்பு படை கைதுச் செய்தது.
 
 
     தேவ்பந்த் மதரஸாவில் கலீலுல்லாஹ்வுடன் பயின்ற 3 வங்காளதேசத்தவர்கள் இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக போலீஸ் கூறுகிறது. கலீலுல்லாஹ் தற்போது தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 வங்காள தேசத்தவர்களைக் குறித்த தகவல் இல்லை. 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷமீம் அஹ்மதை இவ்வழக்கில் சேர்த்தனர். இவர் தலைமறைவாக உள்ளார். ஷமீம் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு, வாரணாசி மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் கோரியுள்ளது. பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு கைதுச் செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்போம் என்று உ.பி மாநில சமாஜ்வாதிக் கட்சியின் அரசு அறிவித்தபோதிலும், போலீசும், பா.ஜ.கவும் இம்முடிவை எதிர்த்து வருகின்றனர். காலித் முஜாஹித் என்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர் விடுவிக்கப்படவிருந்த வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படும் வேளையில் போலீஸ் வேனில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. காலித்முஜாஹிதை போலீஸ் கொலைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா:பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

6 Jun 2013
 
     புதுடெல்லி:ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியதுஎன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ போலவே மோக்கா சட்டமும் ஜனநாயக விரோதமானதாகும். அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்கவேண்டும் என்ற பெயரில் 1999-ஆம் ஆண்டு மஹராஷ்ட்ரா மாநில அரசால் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், பெரும்பாலும் நிரபராதிகளை கைதுச் செய்யவே பயன்படுத்தப்பட்டது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னரும் மஹராஷ்ட்ராவில் குற்றங்கள் குறையவில்லை. மாறாக அதிகரிக்கவேச் செய்தது.
 
     சந்தேகிக்கும் எவரையும் கைதுச் செய்யும் வரம்பற்ற அதிகாரங்களை போலீசுக்கு அளிக்கும் சட்டமே மோக்கா. இச்சட்டத்தின் படி நிரபராதி என்று நிரூபணமாகும் வரை நீதிமன்றங்கள் கைதுச் செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் அனுமதிப்பதில்லை. அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்க ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் இத்தகைய கறுப்புச் சட்டங்கள் அமலில் இருப்பதும், பிரயோகிப்பதும் இந்தியா போன்றதொரு ஜனநாயக தேசத்திற்கு அவமானமாகும். ஆகையால்தான் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், இச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுக்கிறது.இவ்வாறு ஒ.அப்துல் ஸலாம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு:விரைவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

6 Jun 2013
 
     புதுடெல்லி:கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
 
     சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், இது புதிய விஷயம் அல்ல. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம் என்றார்

சரணடையவந்தவர்களை தீவிரவாதிகள் என்று கைதுச் செய்த பாதுகாப்பு படை!

6 Jun 2013
 
    பஹ்ரைச்(உ.பி):கஷ்மீர் மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைய வந்த 3 நபர்களை பாதுகாப்பு படையினர்தீவிரவாதிகள் என்று கூறி அநியாயமாக கைதுச் செய்துள்ளனர். இவர்கள் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள ருபைடிஹா சோதனைச் சாவடிஅருகே எஸ்எஸ்பி படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுக்குறித்து கைதுச் செய்யப்பட்ட முஹம்மது அக்பர் லோன், முஹம்மது ஷஃபிக் பர் மற்றும் மன்சூர் அஹ்மது ஜர்கர்  ஆகியோர் விசாரணையின் போது கூறுகையில்,’1990-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில்உள்ள முஸஃப்ராபாத்திற்கு சென்றோம். அங்கேயே பாஸ்போட்ர்ட் பெற்றோம். கஷ்மீர் மாநில அரசின் திட்டப்படி, போலீசாரிடம் சரணடைய வரும்போது கைதுச் செய்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

முஸ்லிம் விவாகரத்து நடைமுறை:சான்றிதழ் வழங்கும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்க கோரி வழக்கு!

                                6 Jun 2013 divorce
 
     சென்னை:முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பது: ”விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிட முடியும். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை. ஷாரியா தொடர்பான சட்டம் செல்லாது என முன்னர் 2002ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அம்மனு நிராகரிக்கப்பட்டது.
 
     ஆனால் அப்போது நீதிமன்றம் தலாக் சொல்லுவதற்கு போதுமான முகாந்திரம் வேண்டும். தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முன் தம்பதியருக்கிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும், அவை தோற்றாலேயே தலாக் மூலம் விவாகரத்து அனுமதிக்கப்படலாம் என வலியுறுத்தியிருந்தது. ஆனால் அவ்வித நடைமுறைகள் எதனையும் கடைபிடிக்காமலேயே தலாக் மூலம் பல முஸ்லீம் கணவர்கள் விவாகரத்து செய்வதை தான் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராயிருந்தபோது தெரியவந்தது. அதற்கு காஜிகளும் உடன்போய் சான்றிதழும் வழங்குவதால் பெண்கள் அல்லலுறுகின்றனர். ஆனால் காஜிகளுக்கோ அவ்வாறு சான்றிதழ் வழங்கவே உரிமை கிடையாது’ என வாதிடுகிறார் பதர் சயீத்.
 
     தற்காலிகத் தலைமை நீதிபதி ஆர்.கே அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனு குறித்த தங்கள்விளக்கங்களை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கும் மாநிலத் தலைமை காஜிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்திரவிட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு- என்.ஐ.ஏ!

                                    6 Jun 2013 NATIONAL INVESTIGATION AGENCY OF INDIA
 
     புதுடெல்லி: முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், மத்தியபிரதேசத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹராஷ்ட்ரா மாநில நந்தத்தில் நிகழ்ந்த வெடிக்குண்டை தயாரிக்கும்போது  ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ஹிமான்ஷு பான்ஸேவும், நரேஷ் ராஜ் கோண்டோவாரும் கொல்லப்பட்ட சம்பவத்தை பரிசோதித்த பிறகு என்.ஐ.ஏ இம்முடிவுக்கு வந்துள்ளது.
 
    பான்ஸே உள்ளிட்ட மஹ்ராஷ்ட்ராவைச் சார்ந்த 4 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள பாக்லியா காட்டில் நடந்த ஆயுத பயிற்சியில் பங்கேற்றதாக 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் விபரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு பான்ஸே, மத்திய பிரதேசத்தில் வைத்து சுனில்ஜோஷியை சந்தித்துள்ளான் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
     2003 நவம்பர் 21-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பார்பானி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பூர்ணா, ஜால்னா ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதுகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பான்ஸே தலைமை வகித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு மாலேகானில் தொழுகையின் போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இவ்வழக்கில் மனோகர், டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் நன்றி!

                            6 Jun 2013 cfi
 
     சென்னை: தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவிற்க்கு மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
 
     இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
     தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்து வரவேற்பதோடு தமிழக அரசு மற்றும்  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றிற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
 
     தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப் பள்ளிகளும், 5,167 உயர்நிலைப் பள்ளிகளும், 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் சுயநிதி பள்ளிகள் ஆகியவை அடங்கும். இந்த பள்ளிகளில் ஒன்றரை கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள்.
 
    இவற்றில் அரசு பள்ளிகளான, 23,522-ஆரம்பப் பள்ளிகள், 7,651-நடுநிலைப் பள்ளிகள், 3,096-உயர்நிலைப் பள்ளிகள், 2,595-மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் 2-இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளில் ஆண்கள் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றார்கள்.
 
     இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் மாற்றத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வர உள்ளது. அதன்படி இனி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளார்கள்.
 
 
     இதற்க்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், திருமதி. டி.சபீதா அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனை தேசிய மாணவ இயக்கமான ‘கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’, வரவேற்பது மட்டுமின்றி தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, June 5, 2013

அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை!




திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊக்கத் தொகை வழங்க உள்ளது.
மதிப்பெண்கள் வரையறைகல்வி ஊக்கத்தொகை
480 மற்றும் அதற்கு மேல்ரூ.3,000
460-479ரூ.2,500
400-459ரூ.2,000
300-399ரூ.1,500
299 அல்லது அதற்கு கீழ்ரூ.1,000
இந்த அறக்கட்டளை மூலம் ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், 31.05.2013 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கத் துவங்கலாம்.
கவனிக்கவும்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 03.06.2013 மாலை 4 மணி
 
 
கூடுதல் விபரங்களுக்கு http://mvrc.miet.edu/ என்ற இணைய தளத்தைக் காண்க.
தகவல்: ஜாஃபர்

ஈராக்-ஆப்கானில் சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்த பிரிட்டனுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

2 Jun 2013
 
     ஜெனீவா:ஈராக் மற்றும் ஆப்கானில் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் பிரிட்டனை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
 
     இதுவரை யாரையும் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவோ, தண்டிக்கவோ செய்யவில்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஏஜன்சி சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும், ஈராக்கிலும், ஆப்கானிலும் ராணுவ தலையீட்டின் போது சாதாரண மக்களை சித்திரவதைச் செய்தது கவலையை ஏற்படுத்துகிறது என்று ஐ.நா ஏஜன்சியின் 10 நிபுணர்கள் அடங்கிய குழு கூறியுள்ளது.
 
     பிரிட்டீஷ் சட்டத்தின் சிக்கல் மிகுந்த சட்டங்களே, இத்தகைய விசாரணைகளை தாமதப்படுத்த காரணம் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரான அலஸியோ ப்ரூணி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய கொடுமைகள் குறித்து சர் பீட்டர் கிப்ஸனின் புலனாய்வு அறிக்கை ஓரளவு வெளியே வந்தது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

                             2 Jun 2013 syrian-refugee-camp
 
     ஐ.நா:உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.
 
     துருக்கி, லெபனான், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையே இதுவாகும்.முகாம்களில் பெயரை பதிவுச் செய்யாதவர்கள் லட்சத்திக்கும் அதிகமானோர் உள்ளனர் என கருதப்படுகிறது. அகதிகள் முகாம்களில் சிரியா மக்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது என்று ஐ.நா அகதிகள் ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் டான் மக் நோர்டன் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். டயோரியா, தொற்றுநோய்கள், காய்ச்சல், காதுகளில் தொற்று போன்றவை முகாம்களில் பரவியுள்ளன. கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும்அதிகமானோர் சிரியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு புலன் பெயர்ந்துள்ளனர்

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

                          photo_1369976291051_5_0-18qhbpq
 
     காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரெட்க்ராஸ் ஆர்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.சுதந்திரமாக இயங்கும் எந்த அமைப்பையும் தாங்கள் தாக்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே அரசு ஆதரவுப் பெற்ற ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் 38 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆறுமணிநேரம் மோதல் நீடித்ததாக போலீஸ் கமாண்டர் லுத்ஃபுல்லாஹ் கம்ரான் கூறுகிறார்.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

                           4 Jun 2013 aa2fbd84185ad6eb07860def6175-grande
 
    புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.
 
     இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்களை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். இப்பல்கலைக்கழகங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். சிறுபான்மை மதத்தினருக்கு கல்வி அளிப்பதற்காகத் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகங்களில் மதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்த சச்சார் குழு, சிறுபான்மையினரின் கல்வி நிலை, எஸ்.சி., எஸ்.டி.,யினரின் நிலையை விட பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார்.
 
     தலித் சமூகத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக பட்டியல் இனத்தில் சேர்ப்பது குறித்து ரஹ்மான் கான் கூறியதாவது: “”நியாயப்படி இக்கோரிக்கை சரியானதுதான். ஆனால், அரசியல் சாசன சட்டப்படி அவ்வாறு வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். அரசியல் சாசனம் கூறுவதுதான் இறுதியானதாக இருக்கும்” என்றார்.அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில்வைத்துத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களை தொடங்குகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “”நான் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வர முயன்றால், அதை அரசியல் ரீதியாக பார்க்கிறீர்கள்.
 
     தேர்தல் வரும்வரை பணி எதையும் மேற்கொள்ளாமல் அமர்ந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் ரஹ்மான் கான்.