Wednesday, February 13, 2013

சி.ஐ.ஏவின் தலைமை பதவிக்கு ஒபாமா முன்மொழிந்த ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவினார்!

John Brennan, CIA nominee, may have converted to Islam   
    வாஷிங்டன்:அமெரிக்க உளவு அமைப்பான செண்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஏஜன்சியின்(சி.ஐ.ஏ) தலைமை பதவிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     1996-1999 காலக்கட்டத்தில் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் சி.ஐ.ஏவின் ஸ்டேஷன் தலைவராக இருக்கும் வேளையில் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியதாக முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜண்டான ஜான் கோண்டோலோ கூறியுள்ளார். 2008-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோண்டோலோ ட்ரெண்டோ ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இஸ்லாத்திற்கு எதிரானவராக கருதப்படுவர் கோண்டோலோ என்பது குறிப்பிடத்தக்கது.

      ரியாதில் வைத்து இஸ்லாத்தை தழுவிய பிரன்னன், ஹஜ்ஜின் போது சவூதி அதிகாரிகளுடன் மக்கா மற்றும் மதீனாவுக்கு சென்றார். சவூதி அதிகாரிகளுடனான பழக்கம் அவரது மனதில் மாற்றத்தை உருவாக்கியது. அவரது மதமாற்றத்திற்கு ஆதரமான வீடியோ காட்சிகளும் உள்ளதாக கோண்டோலோ கூறுகிறார்.

     அமெரிக்க அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த நபர் தாம் பிரன்னன். இவருக்கு வயது 57. மக்கா மற்றும் மதீனாவுக்கு சென்றிருந்ததாக 2010-ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலைக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடும்போது பிரன்னன் தெரிவித்திருந்தார்.

வடகொரியா அணுகுண்டு சோதனை: ஐ. நா. கண்டனம்!

வடகொரியா அணுகுண்டு சோதனை- ஐ. நா. கண்டனம்!   
     பியாங்யோங்க்:அமெரிக்க மற்றும் ஐ.நா எதிர்ப்புகளை மீறி நேற்று வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.  வடகொரியாவின் இந்த சோதனைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா  உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

     அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும்  வடகொரியா, இன்று 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை உறுதி  செய்துள்ளது.

     ஆனால், 2006, 2009 ஆண்டுகளில் பயன்படுத்தியதைவிட குறைவான சக்தியைக்  கொண்டே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.  வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியுள்ள நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகப் பாதுகாப்பாகவும், மிகச்சரியான முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த  சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை  என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.

    வடகொரியா நேற்று நடத்திய அணுகுண்டு சோதனை ஐ.நா. பாதுகாப்பு சபையின்  தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர்  மார்டின் நேசிர்கி தெரிவித்துள்ளார்.

Pranab   
     புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றம் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதித்த அப்ஸல் குருவின் கருணை மனுவை நிராகரித்ததோடு மரணத்தண்டனையை உறுதிச் செய்ய கையெழுத்திட்ட பிரணாப் முகர்ஜி கடந்த 15 வருடங்களில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட குடியரசு தலைவராக கருதப்படுகிறார்.

     அப்ஸல் குருவின் மரணத்தண்டனைக்கு ஒப்புதல் அளிக்க கையெழுத்திடும் முன்பு அஜ்மல் கஸாப் (2012 நவம்பர் 5) மற்றும் ஸய்பன்னா நிஞ்சப்பா (2013 ஜனவரி 4) ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை உறுதிச் செய்தார்.

     சொத்து தகராறில் குடும்பத்தில் 3 நபர்களை கொலைச் செய்த அல் பீருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையில் கருணை மனுவை ஏற்றுக்கொண்டார் பிரணாப்.

    முன்னாள் குடியரசு தலைவர்களான பிரதீபா பாட்டீல், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் பிரணாபிடமிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை கையாண்டனர். கே.ஆர்.நாராயணன் தன்னிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் எதனையும் தள்ளுபடிச் செய்யவில்லை. பிரதீபா பாட்டீலிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் நான்கு பாலியல் பலாத்கார கொலையாளிகள் உள்பட 34 பேர் இடம் பெற்றிருந்தனர்.

     தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பிரதீபா பாட்டீல் பரிசீலிக்கவில்லை. கார் குண்டு வெடிப்பின் மூலம் ஒன்பது பேரை கொலைச் செய்த குற்றவாளி தேவீந்தர் சிங் புல்லார், கொலைக் குற்றவாளி மஹேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்கள் தள்ளுபடிச் செய்யப்பட்டன.

     ராஜீவ் காந்தி கொலை வழக்கும், புல்லாரின் வழக்கும் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைச் செய்த வழக்கில் குற்றவாளியான தனஞ்செய் சாட்டர்ஜியின் கருணை மனுவை அப்துல் கலாம் நிராகரித்தார்.

    சங்கர் தயாள் சர்மாவின் முன்னால் வந்த 14 கருணை மனுக்களும் தள்ளுபடிச் செய்யப்பட்டன

அஸ்ஸாமில் போலீஸ் துப்பாக்கிச்சூடு! 12 பேர் பலி!

12 shot dead in assam   
     கோல்பாரா:அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஊராட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

    அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மற்றும் காமரூப் மாவட்டங்களில் ரபா ஹசாங் தன்னாட்சிக் கவுன்சில் அதிகாரத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சித் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தன்னாட்சிக் கவுன்சிலுக்கு முதலில் தேர்தலை நடத்திவிட்டுப் பின்னர் ஊராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று ரபா ஹசாங் கூட்டுப் போராட்டக் குழு வலியுறுத்தியது.

     ஆனால், அஸ்ஸாம் அரசு கடந்த ஜனவரி 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முதல் இரு கட்டத் தேர்தலை நடத்தி முடித்தது.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறைச் சம்பங்கள் நடைபெற்றன. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கஹிர்பாரியில் 4 பேர், கசதாலில் இருவர், சிலுகுட்டில் இருவர், ரக்ஷிசினியில் 2 பேர், பேகிபுல் பகுதியில் இருவர் என துப்பாக்கிச்சூட்டுக்கு மொத்தம் 12 பேர் உயிரிழந்து விட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என்று அஸ்ஸாம் மாநில முதன்மைச் செயலர் திரிபாதி தெரிவித்தார். இந்த வன்முறைச் சம்பத்தில் ஒரு போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச வன்முறையாளர்கள் முயன்றபோது, பொதுமக்கள் அவர்களைத் தாக்கினர்.

    போலீஸாரின் வாகனங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வாகனங்கள், பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு தீ வைக்கும் சம்பங்களும் நடைபெற்றன. கோல்பாராவின் அருகில் உள்ள காமரூப் மாவட்டத்திலும் தேர்தல் தொடர்பான வன்முறைகளும், தீ வைப்புச் சம்வங்களும் பெருமளவில் நடைபெற்றன.

    இதனிடையே ரபா ஹசாங் அமைப்புகள் அடங்கிய கூட்டுப் போராட்டக் குழு செவ்வாய்க்கிழமை மக்கள் பங்கேற்புடன் நடக்கும் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தது. இதனால் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை மக்கள் வீடுகளுக்குள் இருந்தனர். கடைகள் மூடப்பட்டன. வாக்குப்பதிவை முன்னிட்டு கல்வி நிலையங்கள், வங்கிகள் விடுமுறை அறிவித்திருந்தன.

     துப்பாக்கிச் சூடு குறித்து அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “வன்முறைச் சம்பங்கள் துரதிஷ்டவசமானவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கும், சொத்துகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும்” என்றார்.

ஆசிட் வீச்சுக்குள்ளான வினோதினி மரணம்: குற்றவாளியை கடுமையாக தண்டிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

வினோதினி   
    சென்னை: காரைக்காலைச் சார்ந்த பெண் பொறியாளர் வினோதினியை வாலிபர் ஒருவர் தனது ஒருதலை காதலை ஏற்காததால் ஆசிட் வீசினார்.இதனால் கடுமையாக காயமடைந்து வேதனையால் துடித்த வினோதினி 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிட்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

     இந்த கொடிய சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

     வினோதினியின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

    பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் நிறைந்த ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது

பாதுகாப்பு பேரத்தில் ஊழல்: இத்தாலி நிறுவன தலைவர் கைது!

Italian defence giant head arrested                       
 
    புதுடெல்லி:இந்தியாவுடனான பாதுகாப்பு பேரம் தொடர்பாக ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக இத்தாலி அரசு நிறுவனத் தலைவர் கியூசெப் ஒர்சியை அந்நாட்டு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். வி.வி.ஐ.பிக்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டர் கிடைப்பதற்காக 362 கோடி ரூபாய் இந்தியாவில் லஞ்சமாக அளிக்கப்பட்டதாக வழக்கு.
    
     இதனிடையே இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிய, சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இந்திய பாதுகாப்புத் துறையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தம், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை (ஏ.டபிள்யூ 101 ரகம்)
இந்தியாவுக்கு வழங்க வகை செய்கிறது.

     இதில் 3 ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் சப்ளை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ளவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இதுகுறித்து இத்தாலி அரசு விசாரணை நடத்தி வருகிறது.

    ஃபின்மெக்கனிகா நிறுவனத்தின் தலைவர் கியூசெப் ஒர்சியிடம் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்றது. அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என கூறி வந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் ஒர்சியை இத்தாலி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தலைவர் புருனோ ஸ்பக்னொலினியை வீட்டுக் காவலில் வைக்குமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

     கைது செய்யப்பட்டுள்ள ஒர்சிக்கு உறுதுணையாக இருப்போம் என ஃபின்மெக்கனிகா நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனம் தொடர்ந்து வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

     ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் ஃபின்மெக்கனிகா நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உத்தரவிட்டுள்ளார்.

     இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  “இந்த ஒப்பந்தம் தொடர்பாக புகார் எழுந்தபோது, இதுதொடர்பான விவரங்களைத் தெரிவிக்குமாறு இத்தாலி அரசைக் கேட்டுக் கொண்டோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மொத்த ஆர்டரில் மீதம் உள்ள 9 ஹெலிகாப்டர்களைப் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

     இத்தாலி நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சகம், பின்னர் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு 2010ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

     “தற்போதைய நிலைமைக்கேற்ப பாதுகாப்பை அதிகரிக்க நவீன ஹெலிகாப்டர்கள் அவசியம் என இந்திய விமானப்படை தொடர்ந்து கோரி வந்தது. இதையடுத்து, முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிதியமைச்சகம் பின்னர் ஏற்றுக் கொண்டது.” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஏற்கெனவே கூறியிருந்தார்.

உலக கட்டப்பஞ்சாயத்து அமைப்புக்கு எதிரான போராட்டம்!


     பிப் 13/2013:ர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா. அதிகாரிகளை கண்டித்து சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. 

     இந்த இயக்கத்தின் தலைவர் திருமுருகன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பின் பழ.நெடுமாறன், PFI மற்றும் SDPI கட்சி, TMMK மற்றும் மமக  MLA ஜவஹருல்லா, விடுதலை சிறுத்தைகள், வேல்முருகன், மணியரசன், விடுதலை ராஜேந்திரன் உள்பட 39 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

    சிந்திக்கவும்: இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. சபை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன்மூலம்  மேற்குல நாடுகளின் கை பொம்மை ஐநா என்பதை மீண்டும் நிரூபித்தது.

    ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள் வளங்களை பறிக்க மற்றும் பொருளாதார ரீதியாக தாங்கள் கால்பதிக்க விரும்பும் நாடுகளில் நடக்கும் சிறிய உள்நாட்டு பிரச்சனைகளில் கூட ஐநாவை மூக்கை நுழைக்க வைக்கும். அந்த நாடுகளுக்கு படைகளை அனுப்பும் அல்லது பொருளாதார தடைகளை  கொண்டு வரும்.

    ஆனால் இலங்கையில் நடந்த இறுதிகட்ட யுத்தத்தில் தமிழீழ போராளிகளும், பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் என்கிற சிறிய பகுதிக்குள் வளைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிந்தும் ஐநா மக்களை பாதுக்கக்க யாதொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் கொண்டு வரப்படவில்லை என்றால், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் சாக நேரிடும் என்பதை அறிந்தும் ஐநா மவுனம் காத்தது.

    போர் விதிமுறைகளை மீறி இலங்கை பயங்கரவாத அரசு கனரக ஆயுதங்களையும், விசவாய்வு மற்றும் கொத்து குண்டுகளையும் வீசி மக்களை கொல்லும் பொழுது ஐநா அதை வேடிக்கை பார்த்தது. ஐநாவை பொறுத்த வரையில் ஈழத்தமிழர்கள் விசயத்தில் பேச மேற்குலக வல்லாதிக்க   அரசுகளின் நெருக்கடிகளோ, யாழ்பாணத்தில் கனிம வளங்களோ இல்லை.

     தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட கானொளியில் இடம்பெற்றுள்ள தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. இருந்தும் ஐநாவால் இலங்கைக்கு எதிராக உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. வல்லரசுகளுக்கு கூஜா தூக்க, அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்கவும் உள்ள கட்டப்பஞ்சாயத்து அமைப்பாகவே ஐநா செயல்பட்டு வருகிறது.
 
*மலர் விழி*

Tuesday, February 12, 2013

மேலபாளையம் குலுங்கியது !காதியானியசம் ஒழிந்தது !!சமுதாயம் ஒன்றிணைந்தது !!!

     நெல்லை மாவ ட்டம் மேலபாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது .இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர். 

தலைவர்கள் பெயர்கள் கீழ உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

JAQHமாநில துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 




SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி உரையாற்றுகிறார்

கூட்டத்தின் ஒரு பகுதி 

மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் மாநில தலைவர் உமர் பாரூக் உரையாற்றுகிறார் 


          இஸ்லாமிய விழிப்புணர்வு மாநில பொது செயலாளர் தர்வேஷ் ரசாதி உரையாற்றுகிறார் 
சிக்கந்தர் சாஹிப் உரையாற்றுகிறார் 


ஜங்ஷன் பள்ளி இமாம் இப்ராகிம் பாக்கவி உரையாற்றுகிறார் 


புரபோசனல் கொரியர் (அழகிய கடன் அறக்கட்டளை முகமத் மீரான்  ரையாற்றுகிறார்

இஸ்லாமிய விழிப்புணர்வு மாநில பொது செயலாளர் தர்வேஷ் ரசாதி உரையாற்றுகிறார் 

தமிழ் மாநில ஜமாத்துல் உலாம பேரவை மாநில தலைவர் முகமத் அலாவுதீன் ஹள்ரத் உரையாற்றுகிறார் 

தமிழ் மாநில ஜமாத்துல் உலாம பேரவை மாநில துணை தலைவர் சலாஹுதீன் ஹள்ரத் உரையாற்றுகிறார் 

தாருல் இஸ்லாம் டிரஸ்ட் மாநில தலைவர் குலாம் முகமத் உரையாற்றுகிறார் 

சுன்னத்வல் ஜமாஅத் மாநில தலைவர் மேலை நாசர் உரையாற்றுகிறார்


மைதானத்தில் எங்கும் உட்கார இடம் இல்லாமல் பள்ளிவாசல் மாடியிளும்கூட்டம் கூடியது 

இந்திய ஊனியன் முஸ்லிம் லீக் மாநில ஒருகினைப்பாளர் காமித் பக்ரி உரையாற்றுகிறார் 

இத்திய தேசிய லீக் சார்பாக அதன் பொறுப்பு தாரி உரையாற்றுகிறார் 







இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் பாக்கர் உரையாற்றுகிறார் 

பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் இஸ்மாயில்உரையாற்றுகிறார் 



த மு மு க மாநில தலைவர் ஜவஹிருல்லாஹ் உரையாற்றுகிறார்  


பா ம க மாநில துணை தலைவர் கஸ்ஸாலி உரையாற்றுகிறார்  


சரியத் பாதுகாப்பு பேரவை  மாநில செயலளார் முஹமத் மன்சூர் காசிமி 


உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டு பார்க்கும் மக்கள் 

நன்றி உரை ஆற்றுகிறார் மொகமத் மீரான் தாவூதி 




மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-


# காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல 


# இஸ்லாத்திற்கும் 

காதியானி மதத்திற்கும் ஏவித சம்மதம் இல்லை 



# காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது 



# காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் கபர்சதானில் அடக்கம் செய்ய கூடாது 


# காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும் 



# காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ ,சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது 


# காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிட கூடாது.அவர்கள் அறுத்த கறி சாப்பிடுவது இஸ்லாமிய சட்ட படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி

வாங்கி சமைக்க வேண்டாம்.

 # காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .


# காதியானிகள் முஸ்லிம்களை முஹமத் நபி இறுதி நபி அல்ல எனக் கூறுவதால்  வர்களுன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது 



 மேலும் இந்தியா, சவுதி அரபியா ,எகிப்து ,மலேசிய ,தென் ஆப்ரிக்க ,ஈரான் ,கனடா ,இலங்கை மேலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் 

காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் மதம் மாறிவிட்டனர் என் அறிவித்துள்ளது 

ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என் அறிவிக்க வேண்டும் .

பதினான்கு நூறாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கிகரிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படை இறுதி நபிதுவத்தை தகர்க்கும் நோக்கதோடு 
மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

அப்ஸல் குரு:வாக்கு வங்கி அரசியலின் இரை!- எஸ்.டி.பி.ஐ!

e.abubaker  
    புதுடெல்லி:அப்ஸல் குருவை தூக்கிலிட்ட நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சோசியல் டொமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: வாக்கு அரசியல் மற்றும் அரசியல் விளையாட்டில் அப்ஸல் குரு பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்.

    அவரை தூக்கிலிட்டதன் மூலம் தேர்தலை முன்னரே நடத்தி ஹிந்துத்துவா வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது. தனது கருத்தை தெரிவிக்க கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பொது சமூகத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த மரணத்தண்டனையை உறுதி செய்வதாக உச்சநீதிமன்றம் கூறியது. அப்ஸல் குருவுக்காக அவரது மனைவி தபஸ்ஸும் அளித்த கருணை மனுவை தள்ளுபடி செய்த விபரம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

     சர்வதேச அளவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்தியா தனது சொந்த குடிமகனின் தனது தரப்பு நியாயத்தை கூறக்கூட வாய்ப்பளிக்காமல் தூக்கிலிட்டுள்ளது. இந்த சூழலில் மரண தண்டனையை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்

அப்ஸல் குரு:கலங்க வைத்த கடைசி தருணங்கள்!

அப்ஸல் குருகலங்க வைத்த கடைசி தருணங்கள்  
     அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.

அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது:

     அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்தது . ஆனால் சிறைச் சாலையின் விதி முறைப்படி அரை மணி நேரம் உடலை தொங்கவிடப்பட வேண்டும். அதன் பின் அவரது உடல் இஸ்லாமிய சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே புதைக்கப்பட்டது . கஷ்மீரைச் சார்ந்த மக்பூல் பட்  கல்லறையின் அருகே அப்சல் குருவின் உடலும் புதைக்கப்பட்டது.

    ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன . அப்சல் கஷ்மீர் பிரிவினை பற்றி பேசியது இல்லை. தான் விரும்பாமல் இந்த விசயத்தில் தன்னை தேவை இல்லாமல் இழுத்து வந்து விட்டார்கள் என்று கூறுவார். மேலும் இந்தியாவில் ஊழல் ஒழியவேண்டும் என்று விரும்பியவர் அப்சல் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் உள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் (ஹிந்துத்துவா-சக்திகள்) அப்சல் குருவின் தூக்கை கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம் அமைதியாகவே காணப்பட்டது. சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர். காரணம் அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் பொது அவர் எல்லோரையும் பெயரை குறிப்பிட்டு தான் விடை பெறுகிறேன் என்று சொல்லியவாறு நகர்ந்தார்.

    அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் . தூக்கிடுவதற்கு முன் ஒன்றே ஒன்று தான் அவர் கேட்டுக் கொண்டார். ‘எனக்கு அதிக வலி அறியமுடியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் . அப்படியே பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதி அளித்து அப்சல் குருவின் கண்களை உற்று நோக்கியவாறு கருப்பு துணியை வைத்து அவரது முகத்தை மூடினார் அந்த சிறைச் சாலை ஊழியர் . பின்பு மரணத்தை நோக்கிய அப்சல் குருவின் பயணம் இனிதே நிறைவேறியது.

    பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்படவில்லை. தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது.

    அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார். அவருக்கு உணவு வழங்கப் படவில்லை. குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை நடத்தினார் .

     ‘இதுவரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது. எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல், மரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த மனிதரை பார்த்ததில்லை’
கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் வாழ்வும் மரணமும் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம், ஒருமைப்பாடு , மனித நேயம் குறித்து பேசினார். எந்த மனிதனும் தீயவன் அல்ல, எல்லா உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது. நாம் உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். அது தான் உண்மையான சாதனை என்று விளக்கினர். ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டார் .

    சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்? என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார்கள். அதற்கு அவர், கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் கொள்கிறார். ஆகவே எனது குடும்பத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றார் .

    அவரின் பலமே ஆன்மீகம் தான். அப்சல் நன்கு படித்தவர். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை நன்கு அறிந்தவர். இரு மதங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அடிக்கடி சொல்வார். சில காலங்களுக்கு முன் (ஹிந்து மதத்தின்) நான்கு வேதங்களையும் படித்துள்ளார். எத்தனை இந்துக்கள் நான்கு வேதங்களும் படித்துள்ளனர். ஒரு நல்ல ஆன்மா நம்மை விட்டு விலகும் போது நமக்கு அது பெரும் சோகத்தை விட்டுச் செல்கிறது என்றார் சிறை ஊழியர்.

    இதற்கு முன் தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகள் நடுங்கிய படி தான் செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு அமைதியாக மகிழ்ச்சியாக முகத்தில் சோகம் இல்லாது ஒரு புன்னகையுடன் தான் தூக்கு மேடைக்கு சென்றார். அந்த புன்னகைக்கு பின்னால் ஆயிரம் பொருள் இருந்திருக்கும்.

    மற்ற கைதிகளை தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் பொதுவாகவே மதத்தை குறித்தும் அவர்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் குறித்தும் புலம்பியபடியே செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு , எவ்வகையிலும் புலம்பவில்லை. தன்னுடைய அறையில் இருந்து சுமார் நூறு அடி தூரம் வரை இருந்த தூக்கு மேடைக்கு செல்லும் வரை சுற்றி இருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளை சொல்லியபடியே நகர்ந்தார்.
இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிது தான்.