Tuesday, August 2, 2011

நோன்பு-இன்று ஒரு ஹதீஸ்

2:183ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(அல் குர்ஆன்) 


1891. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!" என்று பதிலளித்தார்கள். அவர் 'அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், 'சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!" என்றோ 'இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!" என்றோ கூறினார்கள். (
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்).

0 comments:

Post a Comment