Saturday, August 6, 2011

சுப்பிரமணிய சாமியின் கட்சியை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை!



புது டெல்லி: சுப்பிரமணிய சாமியின் விஷமத்தனமான கருத்தை தொடர்ந்து அவரது கட்சியான ஜனதா தளம் கட்சியை உடனே ரத்து செய்ய வேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 நாட்கள் பிறகு 16ஆம் தேதி ஜூலை மாதம் டி.என்.ஏ பத்திரிக்கையில் சுப்ரமணிய சாமி "ஆய்வு: இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது எப்படி?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழிதியுள்ளார். இதே கட்டுரையை அவரது கட்சி இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

இது போன்ற எண்ணற்ற ஆதாரமில்லாத கட்டுரைகளை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் இவரது கட்சியின் பதிவை உடனே ரத்து செய்ய வேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் விஜிஹத் ஹபீபுல்லாஹ் கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.



தனது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக சுப்ரமணியசாமி  முஸ்லிம் சமூகம் மீதான இருக்கும் வெறுப்பை தோலுறித்து காட்டும் வகையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அவற்றில் சில:


"இந்துக்கள் இவ்வாறு ஹலால் முறையில் கொலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது, தொடர்ந்து இவ்வாறு நடக்கும் தாக்குதல்களால் தேசம் ஒரு நாள் சீர்குழைந்தே போகும்...."

"இந்திய முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்  இதனால் மெதுவான எதிர்வினை செயல்முறை திட்டமிடப்பட்டது வருகின்றது..."

"இன்று அவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் முன்னோர்கள் இந்துக்களாக இருந்துள்ளார்கள் என்பதை அவர்கள் பெருமையுடன் ஒப்புக்கொள்ளும் வரை அவர்களின் மீது ஒரு போதும் நான் நம்பிக்கை வைக்க மாட்டேன். எந்த முஸ்லிமாவது தன்னுடைய மரபு வழி இந்து மதம் தான் என்பதை ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தியாவில் வாழ்வதற்கு அவரை ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா அதாவது பாரதம் அதாவது இந்துஸ்தான் இந்துக்களுக்காக மட்டுமே! மேலும் யாருடைய மூதாதயர்கள் இந்துக்களாக இருந்தார்களோ அவர்களைத் தவிற யாரெல்லாம் இதனை ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை வெளி நாட்டவர்கள் என்றும் வந்தேரிகள் என்றும் அறிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வாழலாம் ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது."
வியூகம்: காசி விஷ்வனாத் கோயில் அருகே உள்ள மஸ்ஜிதை நீக்க வேண்டும். அதே போல் இன்னும் நாடு முழுவதும் கோயில் அருகே இருக்கும் 300 மஸ்ஜிதுகளையும் இடிக்க வேண்டும்.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் தங்களுடைய பூர்வீகம் இந்து மதம் தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவறை அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க்கக்கூடாது....
வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.…
இத்தகைய விஷமத்தனமான கருத்துக்களை முஸ்லிம் சமூகம் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அவரது கட்சியின் பதிவை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  தேசிய சிறுபான்மை கழகத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்ட

0 comments:

Post a Comment