Wednesday, August 10, 2011

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? – அறிந்து கொள்ளுங்கள்!

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? – அறிந்து கொள்ளுங்கள்!
தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.நம் உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒருசில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.இன்னும் சில விஞ்ஞானிகள் நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம் களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.
நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.
மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் கலங்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
அமெரிக்க விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.
மரபணு கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப் பெரிய ‘யூகலிப்டஸ்’ மரத்தின் மரபணு மூலக்கூறை தென் ஆபிரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 85 மீ.உயரமுள்ள இம்மரத்தின் மரபணு அமைப்பு மனித மரபணு மூலக்கூறில், ஐந்தில் ஒரு பங்கு நீளம் கொண்டது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் உள்ள ‘யூகலிப்டஸ்’ மரங்களின் மூலம் உயிரி எரிபொருள் ஆராய்ச்சி செய்ய முடியும்.

0 comments:

Post a Comment