Tuesday, August 2, 2011

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்


இங்கிலாந்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வெறித்தனமாக வீடியோ கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லண்டனை சேர்ந்த கிரிஸ் ஸ்டெயின்போர்த் என்ற வாலிபருக்கு வீடியோ கேம் என்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். மணிக்கணக்கில் வீடியோ கேம் ஆடுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எக்ஸ்பாக்ஸ் என்ற வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஸ் இறந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போனதால் மரணம் நிகழ்ந்துள்ளது என்று டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து கிரிஸின் தந்தை டேவிட் கூறுகையில்,”வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. வீடியோ கேமை நான் குறை சொல்ல மாட்டேன். எதற்கும் எல்லை உண்டு. வெறித்தனமாக விளையாடினால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்.
எக்ஸ்பாக்ஸ் தயாரித்த நிறுவனம் கூறுகையில்,”கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பொறுப்புள்ள விளையாட்டுகளையே நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். வீடியோ கேம் விளையாடும்போது, அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment