Tuesday, August 30, 2011

வரலாற்றில் சில ஏடுகள்

1)தீரர் திப்பு சுல்தான் அவர்களின் சிறுவயது பிராயம்,அவருக்கு அப்போது அவர் தாயார் காய்கறிகளை காட்டி சொல்வார்களாம்,” இதோ பார்,இது என்ன தெரியுமா?இந்த பெரிய காய்தான் பரங்கியரின் தலை,(வெள்ளையர்)அதன் தலையை சீவு பார்க்கலாம்”என சொல்லி,வாளையும் கையில் கொடுத்து பயிற்சி செய்வாராம்.அந்த காய்தான் பிறகு பரங்கிக்காய் என வழக்கில் வந்தது.அப்பேற்பட்ட தீரர் திப்புவை,பூர்னையா என்ற பிராமணன்,ஆங்கிலேயனிடம் காட்டிக்கொடுத்தான்.


2)வ உ சி கப்பல் ஓட்ட,அவருக்கு கப்பல் வாங்கிக்கொடுத்தது வள்ளல் ஹபீப் முஹம்மத்.ஆனால் இதை வரலாற்றில் மறைத்துவிட்டனர்.


3)ஷாஜகான் ஜூம்மா மசூதியை அறுபத்து மூன்று படிகள் வைத்து கட்டினார்.அது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வயதை குறிப்பிடும் காரணமாக,மேலும் அதன் அருகில் உள்ள செங்கோட்டையில் அவரது சிம்மாசனத்தில் உட்காரும்போது அவருடைய கிரீடம், ஜூம்மா மசூதியின் அறுபத்து இரண்டாம் படியின் அளவு இருக்கும்படி பார்த்து கட்டினார்,அதற்கான காரணம் கேட்டதற்கு அவர் சொன்னார்,”இறைவனை தொழ வருபவர்களின் செருப்புக்களை விட என் கிரீடம் தாழ்மையானது,”


4)பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு சில கட்டளைகள் இடுகிறார்:ஒன்று)மற்ற மத வழிபாட்டு இடங்களை இடித்து மசூதிகள் கட்டக்கூடாது என நம் இஸ்லாம் மார்க்கம் தடுத்துள்ளதால்,அவ்வாறு நீ செய்யக்கூடாது.
இரண்டு)எல்லா மத,இன மக்களையும் சரி சமம் என நடத்த வேண்டும் என நம் மார்க்கம் கட்டளை இட்டுள்ளபடியால் நீயும் அவ்வாறு எல்லா மக்களையும் சீராக நடத்த வேண்டும்.


5)ஒரு தடவை காந்தியடிகளிடம்,”உலகில் உள்ள மந்திரங்களில் எல்லாம் சிறந்தது எது என நீங்கள் எண்ணுகிறீர்கள்?என கேட்டனர்,அதற்கு அவர் சொன்னார்,”லா இலாஹா இல்லல்லாஹு “என்ற மந்திரம்தான் சிறந்தது என்பது என் கருத்து.காரணம் அதில் எல்லாமும் அடங்கிவிட்டது”.


6)ஒரு தடவை பெரியாரிடம் சிலர் கேட்டனர்,”ஐயா நீங்கள் சாமி இல்லை என்கிறீர்,ஆனால் உம் பெயரோ ராமசாமி,?என்றனர்.உடனே சொன்னார் பெரியார்,”ஆமாம்,நான் ராமனுக்கே சாமி”.அந்தப் பெரியார் சொன்னதுதான் இது,”இன இழிவு நீங்க இஸ்லாம் மட்டுமே இனிய மருந்து.

0 comments:

Post a Comment