பி.ஏ. நெளஷாத் |
கேரள பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நான்கு இடங்களில் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு நான்கு மாவட்ட ஆட்சியரும் இந்த அணிவகுப்பு
நடத்தப்படுமானால் சட்ட ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி தடைவிதித்தனர். இதனை கண்டித்து இளைஞர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் நெளஷாத் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பதாவது, "காவல்துறையினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று நினைத்தால், அவ்வாறு பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், அதை விடுத்து சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை" என்று கூறினார்.
சட்டத்திற்கு புரம்பாக இல்லாமல் எந்த இயக்கமானாலும் சரி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர்களின் இந்த முடிவு ஜனநாயகத்தை பலவீனப்படுத்து செயலாகவே அமையும். எந்த அமைப்பாவது சுதந்திர தினத்தன்று பிரச்சனைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் சரியான தீர்வாக இருக்குமே தவிற நாட்டின் குடிமக்களை சுதந்திர தினத்தை கொண்டாடுவதை விட்டு தடுப்பது அநியாயமான செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment