எனக்கும், உங்களுக்குமான என்னுடைய இரண்டாவது அழைப்பு "விபச்சாரத்தை நெருங்காதீர்கள்" ஆகும். இஸ்லாத்தில் தவிர்ந்து நடக்க வேண்டிய மோசமான விடயங்களில் இதுவும் ஒன்று. இங்கு நான் குறிப்பிட வருவது, விபச்சாரத்தை மட்டுமல்ல, மாறாக விபச்சாரத்திற்கு வழிகோலுகின்ற விடயங்களையங்களிளிருந்தும் தவிந்து நடப்பது. ஏனென்றால், அல் குர்ஆன் விபச்சாரம் செய்யாதீர்கள் என்று குறிப்பிடவில்லை. மாறாக அதனை நெருங்காதீர்கள் என்று குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம்.
உதாரணத்திற்கு, மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகின்ற அடிப்படைக்கு ,அமைவான பாடல்கள், படங்கள், அல்லது இதனடிப்படையில் ஆடை அணிகின்ற பெண்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இங்கு நான் மேலதிகமான ஒரு விடயத்தை பதிவு செய்யவிரும்புகிறேன். அதாவது,மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களும், பல்வேறு கேள்விகளும் எனக்கும், உங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு எனது மனமே நீதிபதி. இப்படிப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு மனிதனின் மனம் இது சரி, இது தப்பு என்று நிற்சயமாக சொல்லும். இதனை நீங்கள் அனுபவ ரீதியாகவே உணர்ந்து இருப்பீர்கள்.
ஆகவே, இவ்விடயத்தை தொடர்ச்சியாக, இறுதிவரை என்னால் முடியுமான முறையில் அல்லாஹ் குறிப்பிட்ட படி நிறைவேற்ற மனதில் உறுதி கொள்கிறேன். அதே நேரம் இது உங்களுக்குமான எனது இரண்டாவது அழைப்புமாகும்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.17:32
“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (24:30)
கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)
"இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே!" (அல் குர்ஆன்3:8)
0 comments:
Post a Comment