Sunday, August 5, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் புதுப்பொழிவுடன் நேரடி ஒலிப்பரப்பு!


நமது அதிரை தண்டரில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் நேரலை செய்யப்பட்டதில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்ப கோளாறை நீக்கி தற்போது புதுப்பொழிவுடன் நேரடி ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம்...

கொசுத்தொல்ல தாங்கலப்பா...அதிரையில் காலரா அபாயம்!


அதிரையில் கடந்த சில வாரங்களாக கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் கொசுத்தொல்லையாலும் பகலில் ஈக்களின் தொல்லையாலும் காலரா, டெங்கு, டைஃபாய்டு உள்ளிட்ட உயிர்ப்பறிக்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 
தமிழக தலைநகர் சென்னையில் காலரா உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் இவ்வேளையில் நோய்களின் மூலக்காரணியான ஈ மற்றும் கொசுக்களின் தொல்லை நமதூரிலும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.   நமதூரில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் மர்மக் காய்ச்சல்கள் பொது மக்களை வாட்டி வதைத்து வருவதை போல் இந்த ஆண்டும் பரவாமல் தடுக்க அதிரையின் சுகாதாரத்தின் மீது அக்கரையுடைய நமதூர் சேர்மன் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு மந்த கதியில் நடக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Saturday, August 4, 2012

புதிய தேர்தல் கமிஷனராக அகமது ஜெய்தி தேர்வாகிறார்!


தலைமை தேர்தல் கமிஷன் 3 உயர் அதிகாரிகளைக் கொண்ட அமைப்பாகும். அதில் தலைமை தேர்தல் கமிஷனராக ஒருவரும், தேர்தல் கமிஷனர்களாக 2 பேரும் உள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி, தேர்தல் அதிகாரிகளாக சம்பத், பிரம்மா இருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் குரேஷி ஓய்வு பெற்று விட்டதால் தலைமை தேர்தல் கமிஷனராக சம்பத் பதவி உயர்வு பெற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்து வந்த தேர்தல் கமிஷனர் இடம் காலியானது. அந்த இடத்துக்கு அந்தமான் தீவு தலைமை செயலாளர் ஷெரீப் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. 

ஷெரீப்புக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆகும். இவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படும் பட்சத்தில், தலைமை தேர்தல் கமிஷன் அமைப்பில் உள்ள 3 அதிகாரிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஷெரீப் பாராளுமன்ற மேல்-சபை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. ஹமீத் அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஷெரீப் மேல்-சபை பணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காலியாக உள்ள தேர்தல் கமிஷனர் இடத்துக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சையது நசீம் அகமது ஜெய்தி நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 60 வயதாகும் ஜெய்தி 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்தவர். இவரை தேர்தல் கமிஷனர் பதவியில் அமர்த்த பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்து விட்டார். அதன் பேரில் ஜெய்தி நியமன அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரை வளர்ச்சியில் சில துளிகள்! இதோ....................

புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம்
 மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம்


அதிரையில் சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் உள்ள பழைய சுகாதார வளாகம் சுமார் 2 இலட்சம் செலவில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு அருகில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகமும் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதிரையில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கபொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்ப்படுத்தும் வகையில் அதிரை பேரூராட்சி சார்பாக ஸ்டிக்கர் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது

Friday, August 3, 2012

அஸ்ஸாம் மக்களுக்காக உதவுங்களேன்....!


அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 
அரசு தரப்பு டி.ஜி.பி  ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.


அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

- நான்கு மாவட்டங்களில் மொத்தம் 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- இதில் 99 முகாம்கள் பெளத்தர்களுக்காகவும், 135 முகாம்கள் முஸ்லிம்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு நலதிட்ட பணிகளை நடைமுறைப்படுத்தி வரும் ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய ரிஹாப் இந்தியாவிற்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உடனடியாக சில வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது.

1. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக முறையான குடிநீர் மற்றும் உணவு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

2. மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

3. உடுத்த உடை மற்றும் குளிரில் இருந்து பாதுகாப்பு பெற போர்வைகள் வழங்க வேண்டும்.

4. இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

ரிஹாப் இந்தியா சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவைகள் உங்களின் பார்வைக்காக‌




ரிஹாப் இந்தியா மேற்கொண்ட பணிகள்:
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  பரோடா மற்றும் அஹமதாபாத் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டபோது அம்மக்களுக்கு உதவி செய்ய ரிஹாப் இந்தியா தன்னுடைய தொண்டு ஊழியர்களை அனுப்பியுள்ளது.


2006 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது ரூபாய் 30 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

பீஹார் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் களத்தில் இறங்கி உதவி புரிந்தார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 1000 வீடுகள் கட்ட தீர்மானித்து தற்போது 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

ஏழை எளிய மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சுயதொழில் மூலம் முன்னேற்றம் அடைவதற்காக மூன்று சக்கர மிதி வண்டி, தையல் இயந்திரம் வழங்குதல்,  மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முழு கிராமத்தையும் தத்தெடுத்து பல்வேறு நலதிட்ட உதவிகளை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

மேலும் விபரங்கள் அறிய:  http://rehabindiafoundation.org/portal/

தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தாராளமாக உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் செக்/ டி.டி அனுப்ப வேண்டிய முகவரி

REHAB INDIA FOUNDATION
N-44, Ground Floor, Second Stage,
Jamia Nagar, New Delhi - 110025.

(அல்லது)


RTGS/NEFT transactions

Bank Details:
Name : REHAB INDIA FOUNDATION
Account no : 09231450000033
Bank Name : HDFC Bank Ltd
Branch Name : Jasola Vihar
IFSC Code : HDFC0000923 (used for RTGS and NEFT transactions)


--
முழுவதும் படிக்க: http://chennaipopularfront.blogspot.com வலைப்பதிவிற்கு வருகைதாருங்கள்

வஸ்ஸலாம்.

நடுத்தெருவில் பழுதடைந்துள்ள மின் விலக்குகள்! கண்டுகொள்ளாத மின் வாரியம்!

நடுத்தெருவில் உள்ள பல மின் விலக்குகள் பழுதடைந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம்மம் படுகின்றனர். இதனை பற்றி தெரு வாசிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கைவும் எடுக்கவில்லை என்பதுத்தான் கொடுமையான செய்தி. இதை போன்று நமதூரில் உள்ள பல தெருக்களில் மின் விலக்குகள் பழுதடைந்துள்ளது.  மேலும் நமதூரில் சில தினங்களாக மின் தடை இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது மீண்டும் அடிக்கடி மின் தடை ஏற்படுத்த படுகின்றது. இதற்கு விடிவு காலம் எப்போது.....

Thursday, August 2, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு !


ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.
தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.
தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,
எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.
இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
குறிப்பு:
ஒரு நாட்டில் டாலரைக்காட்டிலும் தங்கம் அதிகமிருந்தால்தானே பொருளாதாரம் முன்னுக்குவரும்?அப்படி என்றால் ஏன் நம் நாட்டு அறிவுஜீவிகள் தங்கம் கொண்டுவந்து நாட்டைகாப்பாற்றுபவர்களை கஸ்டம்ஸ் என்ற பெயரில் கபாலத்தில் தள்ளுகின்றார்கள்!?

குஜராத் முஸ்லிம்கள் இப்பொழுதும் பீதியில் வாழ்கின்றார்கள்! அமெரிக்காவின் அறிக்கை!


குஜராத்தில் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் தற்பொழுதும் வேட்டையாடப்படுவோம் என்ற பீதியில் வாழ்வதாக அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை கூறுகிறது.

2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன்ன்னால் கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.

மத்தியில் ஹிந்துத்துவா தேசியவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு அதிகாரத்தில் இருந்த போதிலும் பா.ஜ.க ஆளும் பல்வேறு மாநிலங்களில் ஹிந்துத்துவா கொள்கைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தயாரான இவ்வறிக்கை கூறுகிறது.

வெளிநாடுகளின் மத சுதந்திரம் குறித்த இவ்வறிக்கையில் குஜராத் இனப்படுகொலை அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கைது செய்ய தயங்கும் குஜராத் அரசு, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் தமது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை சீர்குலைக்க மோடி அரசு முயற்சிகிறது என குற்றம் சாட்டும் அறிக்கை, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமலில் உள்ள பசுவதை தடைச்சட்டம் மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் குறித்தும் விமர்சிக்கிறது.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய விஷயமாக மத சுதந்திரத்தை இணைத்திருப்பதாக அறிக்கை வெளியான பிறகு வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

Wednesday, August 1, 2012

பள்ளிகளில் வாகனப் பராமரிப்புக்காகவும், மாணவர்களைக் கண்காணிப்பதற்காகவும் தனியாகப் பணியாளரை நியமிக்க வேண்டும்!


பள்ளிகளில் வாகனப் பராமரிப்புக்காகவும், மாணவர்களைக் கண்காணிப்பதற்காகவும் தனியாகப் பணியாளரை நியமிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களைப் பராமரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை - பயிற்சிக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:





எந்தவித தடுப்பு நோக்கமும் அறியாத குழந்தைகள் படிக்கும் பள்ளித் தளங்களை மிகுந்த பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பள்ளி வாகனத்திலும் தீத்தடுப்பு சாதனம் கட்டாயம் இருக்க வேண்டும்.





எந்தப் பள்ளியும் கூரைக் கொட்டகைகளில் இயங்கக் கூடாது. இரும்புக் கூரை அல்லது கான்கிரீட் கூரையின் கீழ் மட்டுமே இயங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் அவசர வெளியேறும் வழியை கட்டாயம் அமைத்திருக்க வேண்டும்.





பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வாகனச் சோதனையை உரிய காலத்துக்குள் செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களின் தரம், உரிய ஆவணங்கள் பற்றி பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.





மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து ஆசிரியர்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வாகனப் பராமரிப்புக்கும், மாணவர்களைக் கண்காணிக்கவும் தனியாக பணியாளரை நியமிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அவசர வழிகள், வாகனங்களில் முதலுதவிப் பெட்டிகள் போன்றவை இருக்கிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 


மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார் பாஸ்கரன். 


மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் சு. மதி, மண்டலப் போக்குவரத்து துணை ஆணையர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: அதிரை போஸ்ட்

உளநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது மிருகத்தனமான தாக்குதல்!


அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச் சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.

முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது பொறுக்காமல் தடுக்க முனைந்த பெற்றோரையும் ஆக்கிரமிப்புப் படை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

அபூ தியாவின் நிலைமை குறித்து விளக்கிப் புரியவைக்க முற்பட்ட பெற்றோரின் மன்றாட்டங்கள் எவற்றையுமே பொருட்படுத்தாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேற்படி இளைஞனைத் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளது என பெய்ட் உம்மார் கிராமத்தின் தேசிய இணைப்பாளர் முஹம்மத் அவாத் குறிப்பிட்டுள்ளார். 

உளநலமற்ற ஒருவர் என்ற கருணைகூட இன்றி, அபூ தியாவையும் அவரது வயோதிகப் பெற்றோரையும் மிருகத்தனமாகத் தாக்கிவிட்டு, அவ் இளைஞனைத் தடுப்புமுகாமுக்கு எடுத்துச் சென்றுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரின் செயல் சகலவித மனிதப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது என உள்ளூர் மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.