உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டிய
நமது ஊரில் வாழும் மக்களின் 80% பேர் வெளிநாடு கம்பெனியில் வேலை பார்த்து பணம் சம்பாத்தியம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்தவருடம் முதல் கொரோன காரணமாக சம்பளம் சரியாக பல நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனவை காரணம் காட்டி தற்போது வரை ஒரு சில வியாபாரிகள் அன்றாட வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களின் விலையை அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது அருகாமையில் உள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் விற்கும் விலையைவிட நமதூரில் பல மடங்கு விற்பனை ஏன் ? இப்படிபட்ட வியாபாரிகளை தயவு கூர்ந்து வணிக சங்கமும் மற்றும் நுகர்வோர் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அதிரையில் கோழி விலை இன்று :
கோழி கறி விலை 1kg : 260/- முதல் 280/- வரை
பட்டுக்கோட்டையில்
கோழி கறி விலை இன்று 1kg : 200/- முதல் 220/-வரை.
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும். இதை போல் பல உணவு பொருட்களின் விலை வித்யாசம் ஏற்படுகிறது. நமது ஊர் மக்களின் நலன் கருதி இந்த பதிவு.
Daily Rates link : https://rates.goldenchennai.com/chicken-price/pattukkottai-chicken-price-today/
1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..
*Air Suvidha*(Upload PCR Test report),
*TN ePass*ஆன்லைன் formஇல் register.
*PCR Report* கட்டாயம்(72Hrs Validity),
:white_check_mark: 2Copy Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும்.
:point_down:ONLINE Registration form Link:
:beginner: *Air Suvidha* :
https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration
:beginner: *TN ePass* :
https://tnepass.tnega.org/#/user/pass
பல உலக நாடுகளின் மருத்துவத்தால் தீர்க்க முடியாத டின்னிட்டஸ் எனும் காது சார்ந்த பிரச்சனைக்குச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை தீர்வளித்துள்ளது.
உலக அளவில் 15% முதல் 20% சதவீத மக்கள் மட்டுமே டின்னிடஸ் எனும் காது சார்ந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் இரு காதுகளிலும் இரைச்சல் (ringing sound in ear) சத்தம் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு இதுவரை உலக நாடுகளால் தீர்வு காணமுடியவில்லை. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று இந்த நோயால் பாதிப்படைந்த 26 வயது இளைஞர் ஒருவரை மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் எனும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியுள்ளது.
2 வருட காலமாக டின்னிடஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் இரு காதுகளிலும் ரிங்கிங் ஒலியானது கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனைச் சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் சரியாகாத நிலையில் தற்போது மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை செய்ததின் மூலம் சரியாகியுள்ளது. மேலும் உலக நாடுகளே டென்னிட்டஸ் நோய்க்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது தீர்வுகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு பணிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
மேலும், இன்று காலை முதல் சென்னை, திருநெல்வேலி, திருச்சி,
கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, கும்பகோணம் போன்ற பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்தது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வளிமண்டல சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை இருக்கும் எனவும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நமது ஊரில் வாழும் மக்களின் 80% பேர் வெளிநாடு கம்பெனியில் வேலை பார்த்து பணம் சம்பாத்தியம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்தவருடம் முதல் கொரோன காரணமாக சம்பளம் சரியாக பல நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனவை காரணம் காட்டி தற்போது வரை ஒரு சில வியாபாரிகள் அன்றாட வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களின் விலையை அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது அருகாமையில் உள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் விற்கும் விலையைவிட நமதூரில் பல மடங்கு விற்பனை ஏன் ? இப்படிபட்ட வியாபாரிகளை தயவு கூர்ந்து வணிக சங்கமும் மற்றும் நுகர்வோர் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
குறிப்பு : இது அதிரை மக்களின் நலன் கருதி மட்டுமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
மிரட்டுதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கூறி மதமாற்றம் செய்வதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுவை பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறுகையில் “ நீண்ட ஆண்டுகளாக இந்தியா மதமாற்ற சம்பவங்களுக்குப் பலியாகி வருகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள், குறிப்பாக எஸ்சி,எஸ்டி மக்கள், அவர்களின் பிள்ளைகள், ஆண்கள் , பெண்கள் மதமாற்றத்துக்குள்ளாவதைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
மிரட்டுதல், அச்சுறுத்துதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு வழிகள் மூலம் இவர்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
இந்த நாட்டில் ஒரு மாவட்டம் கூட மந்திர வேலைகள் மூடநம்பிக்கைகள், மதமாற்றம் இல்லாமல் இருப்பதில்லை. நாடுமுழுவதும் ஒவ்வொரு வாரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கடந்த் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 86 சதவீதம் இருந்த இந்துக்கள் 79 சதவீதமாகக் குறைந்துவிட்டனர். பல்வேறு அமைப்புகள் , தனநபர்கள் கிராமங்களுக்குச் சென்று எஸ்டி, எஸ்சிபிரிவு மக்களை மதமாற்றி வருவது அச்சமடையச் செய்துள்ளது. கடந்த 20ஆண்டுகளாக பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள் இடையே மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.
ஆதலால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மதமாற்றத்தைத் தடுக்க ஒருகுழுவை மத்திய அரசு அமைக்க உத்தரவிட வேண்டும். மூடநம்பிக்கைகள், மாந்தரீக வேலைகள், மதமாற்றம் ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தாக்கல் செய்யவும் உத்தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் எப் நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.
இந்த மனுவை மீது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அமர்வு, இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரர் அஸ்வினி உபாத்யாயேவுக்கு எச்சரித்தனர். இதையடுத்து, அஸ்வின் உபாத்யாயே மனுவை திரும்பப் பெற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த பின்னர் , 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 95.31 சதவீதம் பேர், குணமடைந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாகவும், 20 லட்சம் தடுப்பூசிகள் உட்பட சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், முழு ஊரடங்கு வராது என்று அவர் தெரிவித்தார்.