Saturday, July 23, 2011

துபாய்க்கு 10 வது இடம்.


சி.பி., ரிச்சர்டு எலிஸ்' என்ற நிறுவனம், உலகில் உள்ள 232 நகரங்களில் இயங்கி வரும், 280 மிகப் பிரபலமான வர்த்தக நிறுவனங்களை ஆய்வு செய்து, முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு, 68 சதவீத நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அடுத்த இடத்தை சிங்கப்பூரும் (67), மூன்றாவது இடத்தை டோக்கியோவும் (63.9),நான்காவது இடத்தை லண்டனும் (63.2), ஐந்தாவது இடத்தை ஷாங்காயும் (61.4) பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் துபாய் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில், 56 சதவீத நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment