Monday, July 11, 2011

நூற்றுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்த சாமியார் கைது!

JULY 10, நெல்லை வண்ணார் பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த லாட்ஜுக்கு சோட்டாணிக்கரையைச் சேர்ந்த சாமியார் நந்தகுமார் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம்.

இதனால் அவருடன் கிருஷ்ணனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் லாட்ஜுக்கு வந்த நந்தகுமாரிடம், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் சொல்லுமாறு கிருஷ்ணன் கூறினார். இதற்கு நந்தகுமாரும் ஒப்புக் கொண்டார். நேற்று நந்தகுமார் நெல்லை சந்திப்பிலுள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிருப்பதாக கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்தார்.

கிருஷ்ணனின் மனைவி லலிதாவுக்கு ஏற்கனவே நந்தகுமாரைத் தெரியும் என்பதால், லலிதாவும், உறவினர் பானுமதியும் குடும்பத்தினரின் ஜாதகங்களை எடுத்து கொண்டு லாட்ஜூக்குச் சென்றனர். அறையில் நந்தகுமார் குடிபோதையில் இருந்தார். பரிகாரம் சொல்வது போல் நடித்து, திடீரென இருவரின் கைகளைப் பிடித்து இழுத்தார். சேலையையும் பிடித்து இழுத்ததால், பெண்கள் இருவரும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு காவல்துறையினர் நந்தகுமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி சாமியார் என்பது தெரிய வந்தது. எப்போதும் போதையிலேயே இருக்கும் நந்தகுமார், கேரளா, சென்னை, மதுரை, திருச்சி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் பரிகாரம் சொல்வது போல நடித்து நூற்றுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment