மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பயஸ் உஸ்மானி. இவரை போலீஸ்சார் அடித்தே கொன்றார்கள். விசாரணை என்றபெயரில் அழைத்து செல்லப்பட்டவரை போலீஸ் அடித்தே கொன்றுள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் கடந்த 13ம் தேதி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 23 பேர் பலியாயினர். 130க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த நாசவேலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வருகின்றனர்.
கடந்த 2008&ம் ஆண்டு நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்சல் உஸ்மானியின் சகோதரர் பயஸ் உஸ்மானி. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க, பயஸ் உஸ்மானியை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஆனால் அந்த அகமதாபாத் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று நிருபிக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய ஹிந்துத்துவா சாமியார் அசிமானந்தா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் இந்திரஜித் குப்த்தா உட்பட நிறையபேர் ஜெயிலில் உள்ளனர். இந்த மொலோகன், அகமதாபாத், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்து தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டதும் அதில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இலஞ்சர்களை விடுதலை செய்வதில் அரசு காகதாமதம் செய்து வந்தது.
இந்நிலையில் இந்த அப்பாவிகளின் உறவினரான பயஸ் உஸ்மானியை விசாரணை என்ற பெயரில் இந்திய ஹிந்துத்துவா போலீஸ் கைது செய்து அடித்து சித்திரவதை செய்தது. இதில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பயஸ் இறந்தார். விசாரணையின்போது போலீசார் அடித்து துன்புறுத்தி பயஸ்சை கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்திகாலை 1.30 மணியளவில் பயஸ் இறந்தார். விசாரணையின்போது போலீசார் அடித்து துன்புறுத்தி பயஸ்சை கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment