ஜூலை 8 ௦ பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக் காட்சியில் குரோர்பதி 4 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.
இதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில், இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அமிதாப்பச்சனும், தொலைக்காட்சி நிறுவனமும் வருகிற 28-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்
சிந்திக்கவும்: இவர்களுடைய பணத்தாசைக்கு பெற்ற தாயை வேண்டுமானாலும் விற்ப்பார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! அதுபோல்தான் கலை கூத்தாடிகளுக்கு எங்கே தெரியபோகிறது சுபாஷ் சந்திர போஸின் அருமை பெருமைகள்.
அவர் இல்லையேல் இந்த சுதந்திரம் ஏது? காந்தியால் கிடைத்ததில்லை இந்த சுதந்திரம்! சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் நாம் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியா! அந்த வீர தளபதியை நினைவு கூறுவது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
0 comments:
Post a Comment