Friday, July 1, 2011

பழமைவாய்ந்த இஸ்லாமிய நினைவுச்சின்னங்களை இஸ்ரேல் அழிக்கும் நடவடிக்கையை, ஹமாஸ் வன்மையாக கண்டிப்பு



மேற்கு ஜெரூஸலத்தில் உள்ள,பழமைவாயந்த இஸ்லாமிய 
மக்பராக்களையும்,ஏனைய இஸ்லாமிய நினைவுச்சின்னங்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமைமுதல் இஸ்ரேலிய தொழில் அதிகாரசபை அழித்துவருகின்றது. இந்நடவடிக்கையை ஹமாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்நினைவுச்சின்னங்களை அழிப்பதன் மூலம்,இப்பகுதியில் குடியிருப்புக்களை உருவாக்குவதற்காகவும், ஆதிகாலம்தொட்டு முஸ்லிம்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை மறைப்பதற்காகவும் இஸ்ரேலிய தொழில் அதிகாரசபை முயற்சிப்பதாக சர்வதேசஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.மேலும் மதங்களுக்கு இடையில் இனவெறியை தூண்டும் செயலாகவும் இது அமைந்துள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் சர்வதேச விதிகளை மீறியுள்ளது.


கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த மக்பராக்களை இஸ்ரேலிய தொழில் அதிகாரசபை அழித்துள்ளது. இந்நடவடிக்கை 'இயற்கைக்கு எதிரான கொடூரமான செயல்' என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.இஸ்ரேலின்,இக்கொடூரசெயலானது,  வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது இறந்த மக்கள்மீதும் கட்டவிழ்த்துவிடப்படும் இனவாதச்செயலாகும். என ஹமாஸ் மேலும் தெரிவித்துள்ளது.புனித நகரான ஜெரூஸலத்தில் பழமைவாயந்த இஸ்லாமிய குடியிருப்புக்கள், மக்பராக்கள்,நினைவுச்சின்னங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அரபுலீக் மற்றும் எல்லா மனித உரிமை அமைப்புக்களும், இஸ்ரேலின்  இந்நடவடிக்கையைநிறுத்தவேண்டும்.என ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment