Monday, July 11, 2011

277 தலித்துகளை படுகொலை செய்த பயங்கரவாதிக்கு விடுதலை!

JULY 11, புதுடெல்லி: 277 தலித்துகளை கூட்டுப்படுகொலை செய்த ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி பயங்கரவாத அமைப்பின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் என்ற முக்கியாஜிக்கு ஜஹனாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

60 வயதான சிங்கின் மீது கூட்டுப்படு கொலைக்கு தலைமை வகித்தது உள்பட 22 க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் 6 வழக்குகள்முக்கியமானவை, பதானி தோலா வழக்கு ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவரை ஜாமீனில் விட்டது பெரும் ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்துகிறது.இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்குகளிலெல்லாம் முன்னரே சிங்கிற்கு ஜாமீன் வழங்கப் பட்டிருந்தது. ஆயுத சட்டத்தின் அடிப்படையிலான ஒரு வழக்கிலும் ஜஹனாபாத் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் தீபக் குமார் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து பிரம்மேஷ்வர் சிங்கிற்கு சிறையிலிருந்து விடுதலை பெறுவது எளிதானது. சிறைக்கு வெளியே இவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

0 comments:

Post a Comment