Wednesday, May 30, 2012

மம்தா தலைமையில் நடந்த ஐபிஎல் வெற்றிவிழாவில் வன்முறை. போலீஸ் தடியடி!

 கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். வெற்றி விழாவில் வெடித்த வன்முறையால்,  போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து பலர் காயமடைந்தனர். சென்னை அணியுடன் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணி கோப்பையை வென்றது.இந்த வெற்றி விழாவை கோலகலமாக கொண்டாட  மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா முடிவு செய்தார்.  அதன்படி இன்று காலை 11 மணியளவில் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வெற்றி  விழா தொடங்கியது. காம்பிர் தலைமையிலான ரசிகர்கள் திறந்த...

ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை !

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக,...

Saturday, May 26, 2012

யேசு சிலுவையில் அறையப்படவில்லை, நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்: - தோலாலான நூல்

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.  மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான...

உண்மை உரைத்த அதிகாரியை உயிரை எடுத்த பா ஜ க!!

 பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வீடு நிர்மாண கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதால் தாக்கப்பட்ட தணிக்கை பிரிவு அதிகாரி மகந்தேஷ் மருத்துவமனையில் சிகிட்சை பலனளிக்காமல்மரணமடைந்தார். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகந்தேஷ்(42). இவர் கர்நாடக கூட்டுறவுச் சங்கத்தில் தணிக்கைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பெங்களூர் சாமாராஜ் பேட்டையில் மனைவி பூர்ணிமாவுடன் வசித்து வந்தார். அரசியல்வாதிகளுக்கும்,...

உணவு சப்ளைக்கு விண்வெளி ஓடம்! ஸ்பேஸ் எக்ஸ்!!

வாஷிங்டன்: விண்வெளியில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை SPACE X என்ற நிறுவனம் சொந்தமாக்கியுள்ளது. SPACE X என்ற கலிபோர்னிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தேவையான உணவும் உபகரணங்களுமாக சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்கிறது. இது காலம் வரை அமெரிக்க அரசின்...

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்”

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 25-05-2012 அன்று மாலை 7 மணியளவில் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்” நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் I.ரிஹாருத்தீன் B.E., தலைமை தாங்கினார் , மாநில துனை தலைவர் A.சாகுல் சஹீத் B.E., அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்த நிகழ்ச்சி துவங்கியது, திரு. பைரோஸ்கான் (பெற்றொர் ஆசிரியர் கழக...

கல்வி கட்டணமா? கவலை வேண்டாம் !! அருகிலுள்ள தரமான பள்ளியில் இலவசமாக பெறுங்கள்

தொடக்க கல்வி முதல் மேல்நிலை உயர்நிலை வகுப்புகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பள்ளிபடிப்பை தொடரவும் பள்ளிக்கூடம் செல்வதையும் உறுதிசெய்ய பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் "கோ டு ஸ்கூல் - பள்ளி செல்வோம் " பிரசாரத்தை தொடக்கிவைக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்குவதால் இந்த பிரச்சாரம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் நாடெங்கும் உள்ள பாப்புலர் பிரான்ட் யூனிட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில்...

Friday, May 25, 2012

உஸாமாவை கொலைச் செய்ய உதவிய டாக்டருக்கு 33 ஆண்டு சிறை !

இஸ்லாமாபாத்:உஸாமா பின்லேடனை கொலைச்செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுக்கு உதவியதாக கூறப்படும் டாக்டருக்கு பாகிஸ்தானில் 33 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உஸாமாக் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு டாக்டர் ஷகீல் அப்ரிதி ஆபோட்டாபாதில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதன் மூலம் தேசத்துரோக குற்றம் இழைத்ததாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. ரகசியமாக வெளிநாட்டு உளவு அமைப்பிற்கு உதவியை ஒப்புக்கொள்ள இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. உஸாமாவை...

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – ஈரான் !

பாக்தாத்:ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி மேற்கத்திய நாடுகள் தடைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில் பாக்தாதில் ஐந்து வல்லரசுகள் மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகியநாடுகளுடன் ஜெர்மன் பிரதிநிதியும் பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ளார். பி5+1 என சுருக்கமாக அழைக்கப்படும் வல்லரசு நாடுகளின் பிரதிநிதிக்...

மாயாவதிக்கு சிலை வடித்தவர் காசுக்காக கண்ணீர் வடிக்கிறார் !

உ.பி.,யில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலைகளை அமைப்பதற்கான பொருட்களை சப்ளை செய்தவர், தனக்கு கொடுக்க வேண்டிய மூன்று கோடி ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்துள்ளார். உ.பி.,யில், கடந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில், முதல்வர் மாயாவதி சிலைகள் மற்றும் அவரது கட்சியின் தேர்தல் சின்னமான யானைச் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ள...

Tuesday, May 22, 2012

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்

ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் காவல்துறை குறிவைத்து தொந்தரவு செய்து வருகிறது. குறிப்பாக 17 அன்று இரவு சோதனை என்ற பெயரில் ஏதோ மறுநாள் காவல்துறைக்கும முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரும் போரே நடந்துவிடப்போகிறது என்ற பாணியில் முன்னெச்சரிக்கை...

இந்திய தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை - முஸ்லிம்களைக் கவரும் முயற்சி

உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வகையில் இந்திய  வணிகப் பொருள் தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகள் உலகளவில்  வெற்றிகரமாகச் செல்லும் வகையில் தங்கள் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள் உணவு தயாரிப்புகள் மட்டுமின்றி மற்ற அழகுச்சாதனத் தயாரிப்பாளர்களும் தங்கள்...

ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த +2 மாணவன்

மதுரை: மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியா அந்த ஆசிரியை பழிவாங்க தீர்மானித்தார்....

Sunday, May 20, 2012

பள்ளிகளில் பாலியல் உள்ளிட்ட தொல்லைகள்: தமிழகம் முதலிடம்!

புதுடெல்லி:பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாநிலங்களவையில் நேற்று(வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தில் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் இதுத்தொடர்பான விபரங்களை வெளியிட்டார். பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாக தமிழ்நாட்டிலிருந்துதான் 115 புகார்கள் ‘தேசிய...

முதல்ல அவங்க சொல்லட்டும்; அப்புறம் நாங்க சொல்லுறோம்: மாயாவதி

 உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.,யாகியுள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதன் முறையாக, நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மாயாவதி பதிலளித்தார். ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,"தற்போதைய சூழ்நிலையில்,...

மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!

புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார். முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம்களுக்கான நலத்திட்டம் என்ற பெயரால்...

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் இளைய ஆதினமாக பொறுப்பேற்றேன்: நித்யானந்தா பேட்டி

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள செக்ஸ் அசாமி  நித்யானந்தா, திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன். இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது என கூறினார். மேலும், இவர் மீது ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவிப்பதை...

புரட்சி தலைவியின் போறம்(பிற்)போக்குதனம்!!

சென்னை: ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி. ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம்...