Sunday, July 31, 2011

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்- அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம். உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது.கடந்த...

பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!(காணொளி இணைப்பு)

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது.  இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர் கூறிவருவதும் குறிப்படத்தக்கது...

எல்லா மதானிக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும்- இ.அபூபக்கர்

கொல்லம்: அப்துல் நாசிர் மதானியின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து கூறினார். கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக அப்துல் நாசிர் மதானியை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு...

பெல்தங்காடி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விளையாட்டுப்போட்டி

பெல்தங்காடி: கர்நாடக மாநிலம் பெல்தங்காடியில் அப்பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் உஸ்மான் போட்டியை தொடங்கி வைத்தார்.உடல் ஆரோக்கியத்தைப்பற்றி வலியுறுத்துவதற்காக இவ்வாறான போட்டிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடந்து நாடு முழுவது நடத்தி வருகிறது. "பலஹீனமான் முஃமீனைவிட பலமுள்ள முஃமீன் தான் அல்லாஹ்விற்கு மிகவும் உவப்பானவன்!"  என்ற நபிகளாரின் கூற்றுப்படி பலமுள்ள சமுதாயத்தை...

மஸ்ஜித்தை சுத்தம் செய்யும் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

புத்தூர்: கர்நாடக மாநிலம்  பாப்புலர் ஃப்ரண்டின் புத்தூர் கிளை சார்பாக மாவட்டம் முழுவதும் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இஸ்லாமியர்களின் புனித மாதமாம ரமழான் நெருங்கும் வேலையில் மாவட்டம் முழுவதும் உள்ள 40ற்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளை சுத்தம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புத்தூர்...

qatar to bahrain ( வீடியோ இணைப்பு )

...

Friday, July 29, 2011

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை...

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!

JULY 29, பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். ...

Thursday, July 28, 2011

உணர்வற்ற உணர்வு(!) இதழின் அவதூறும் - மறுப்பும்

சமுதாயத்தில் குழப்பம் செய்வதையும், சமுதாய தலைவர்கள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மீது அவதூறு சகதியை அள்ளி இறைப்பதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டு வெளிவரும் சமூக, சமுதாய உணர்வற்ற உணர்வு(!) இதழ் தனது ஜுலை 15-21 இதழில் வழக்கம் போல் ஈனத்தனமாக ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது. “போதை பொருள் கடத்திய போராளிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அச்செய்தியில் SDPI ன் மீது அவதூறை அள்ளி வீசி தனது அரிப்பை தீர்த்துள்ளது உணர்வு(!).உண்மையில் என்ன நடந்தது...

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும்...

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்

தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால்...

Tuesday, July 26, 2011

தெரிந்துக்கொள்வோம் !

ஜப்பானியக் கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே இவை விமானத்தைப் போல முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்ககின்றன. சூழியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. Public...

காரைக்கால் மாவட்டம் சார்பாக ஜகாத் கொடுக்க வலியுறுத்தி வெளியிடப்பட்ட நோட்டீஸ்

கடமையைச் செய்வோம் இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று, அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுமார் 32 இடங்களில் இதனை வலியுறுத்துகின்றான். அவற்றில் ஒரு சில வசனங்கள் இன்னும் தொழுகையை முழுமையாக கடைபிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள் (அல் குர்ஆன் 2:110) அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்). அவ்வாறு கொடுப்பவர்தான் (தன் நற்கூலியை) இரட்டிப்பாக்கி கொள்கிறார்கள். (அல் குர்...

Monday, July 25, 2011

கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு

கோழிக்கோடு : கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது. வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம்...

பா.ஜ.க.வே! பாப்புலர் ஃப்ரண்டை ஒருபோதும் உன்னால் தடை செய்ய முடியாது!

மங்களூர்: மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரித்தும் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்து நகரில் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்து மத வெறி பிடித்த ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதில் முக்கியமாக "உங்களால் பாப்புலர் ஃப்ரண்டை தடை...