Monday, July 2, 2012

அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்


பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா மீது பாகிஸ்தான் அதிருப்தியில்
உள்ளது.
இதுகுறித்து பியூ ஆராய்ச்சி மையம் பாகிஸ்தான் மக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை, 1,206 பாகிஸ்தானியர்களிடம் நேரடியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா மீதான எண்ணம் பற்றி அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 74 சதவீதம் பேர், அமெரிக்காவை தங்கள் எதிரியாகவே கருதுவது தெரிய வந்தது.
இது கடந்த ஆண்டு 69 சதவீதமாக இருந்தது. 3 ஆண்டுக்கு முன் 64 சதவீதத்துக்கே இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அமெரிக்கா மீதான வெறுப்பு பாகிஸ்தானியர்களிடம் அதிகரித்து வருவது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காதான் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று 50 சதவீத மக்கள் கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டு 72 சதவீதமாக இருந்தது.
இப்போது அமெரிக்கா நிதியுதவி தேவை என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
thanks to asiananban

0 comments:

Post a Comment