தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ருபாய் வரை உயர்த்தியுள்ளது. இது ஏற்கனவே கல்வி கட்டண கொள்ளையில் ஈடுப்பட்டு வரும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை அதிகரிக்கவே செய்யும். இதனால் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் கல்விப்பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மேலும், சமீபத்தில் இந்திய மருத்துவ குழுமத்தால் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 20 மருத்துவ கல்லூரிகளில் 11 மருத்துவ கல்லூரிகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகும். இது தனியார் மருத்துவ கல்லூரிகளின் பெருக்கத்தையும் அரசு மருத்துவ கல்லூரிகள் நடத்துவதிலிருந்து விலகி ஒட்டுமொத்த கல்வியையும் தனியார் வசம் ஒப்படைக்கும் விதமாக படிப்படியாக விலகுகிறதோ என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது.
அரசின் இத்தகைய செயல்பாடுகளை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு தற்போது அறிவித்துள்ள கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
நாள்: 5.07.2012 இப்படிக்கு,
Z. முஹம்மது தம்பி
(மாநில தலைவர், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா )
0 comments:
Post a Comment