Thursday, July 12, 2012

அரஃபாத்தின் மரணத்தில் மர்மம்: பதில் அளிக்க அமெரிக்கா மறுப்பு !


Arafat rumours- 'US to remain mum'
ஹானோய்:ஃபலஸ்தீன் முன்னாள் அதிபர் யாஸர் அரஃபாத்தின் மரணம் தொடர்பாக புதிய விசாரணையின் முடிவிற்காக காத்திருக்கப் போவதில்லை என்றும், ஊகங்களுக்குபதில் அளிக்க முடியாது என்றும் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். வியட்நாமில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர். மேற்காசியாவில் சமாதான முயற்சி உள்பட பல்வேறு
பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் இஸ்ரேல் செல்ல உள்ளதாகவும், ஊகங்கள் எதற்கும் உதவாது என்றும் ஹிலாரி கூறினார்.
அரஃபாத் மரணம் தொடர்பாக வெளியான புதிய புலனாய்வு முடிவை தொடர்ந்து அவரது அடக்கஸ்தலத்தை திறந்து பரிசோதனை நடத்த ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அனுமதி வழங்கியுள்ளார். இதன் பின்னணியில் ஹிலாரியின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை அரசியல் நோக்கர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
9 மாத புலனாய்வுக்கு பிறகு அல்ஜஸீரா 2004-ஆம் ஆண்டு அரஃபாத் மரணத்தில் மர்மம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அரஃபாத்தின் மரணம் ரேடியோ ஆக்டிவ் பொலோனியத்தால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை புலனாய்வு அறிக்கையில் அல்ஜஸீரா கூறியுள்ளது.
thanks to asianaban

0 comments:

Post a Comment