அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளில் நோன்பு திறக்கும் சகோதரர்களுக்கு அருந்துவதற்கும் பயன்படுத்தபட்டு வருகின்றதை நாம் அறிந்ததே !
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ் சேக்கனா M. நிஜாம்
நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது ஹழ்ரத் பிலால் ( ரலி ) நகர் பள்ளியின் கஞ்சி. நமதூரைச் சேர்ந்த பல சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் என பாத்திரங்களுடன் இப்பள்ளிக்கு வந்து வரிசையில் காத்திருந்து கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு 45 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியானது விநியோகம் செய்யும் சில நிமிடங்களில் தீர்ந்து விடுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment