Saturday, July 7, 2012

அதிரையில் இன்று PFI நடத்தும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும்   வழிகாட்டுதல் நிகழ்ச்சி
1ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டைப் போல்   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த ஆண்டு அதிரையில் கல்வி உதவித்  தொகை  பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை நாளை (07-07-1012)சனிக்கிழமை காலை10.00 மணி முதல் மாலை 5.00  மணி வரை பூர்த்தி செய்தலும் அதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்த இருக்கின்றது.எனவே முன்பு கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்கும்படியும்,இதுவரை கல்வி உதவித்தொகை  வாங்காமல் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் PFI  அன்புடன் அழைக்கிறது. 
கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50௦% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
அதிரை 

0 comments:

Post a Comment