Monday, January 28, 2013
Wednesday, January 23, 2013
தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவ, சிறையில் இருந்து விடுதலையானவர் அமைப்பை துவக்கினார்!
Wednesday, January 23, 2013
No comments
23 Jan 2013
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் பொய் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார். 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) கைது செய்த யுனானி மருத்துவரான சல்மான் ஃபார்ஸி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஏ.டி.எஸ் சல்மானை கைது செய்தது. பாகிஸ்தானில் இருந்து வந்த போராளிகளுக்கு உதவினார் என்றும், ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கடத்தியதாகவும் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால்,தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளது வெட்டவெளிச்சமானதை தொடர்ந்து ஐந்து வருட கொடுமையான சிறைக்கு பிறகு 2011-ஆம் ஆண்டு சல்மான் உள்ளிட்ட அப்பாவி இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஒரு வருடமாக யுனானி ப்ராக்டீஸ் நடத்திய பணத்தைக் கொண்டு ஜஸ்டிஸ் லீகல் வாய்ஸ் என்ற அமைப்பை சல்மான் துவக்கியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனக்கு சட்டத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்று சல்மான் கூறுகிறார். இதுபோல பல்வேறு சம்பவங்களை தன்னை சுற்றிலும் கண்ட சல்மான் சட்டத்தைக் குறித்து படிக்கத் துவங்கினார். அப்பகுதியில் பல்வேறு வழக்கறிஞர்களின் உதவியையும் இவ்வமைப்புக்காக அவர் உறுதிச் செய்துள்ளார்.
பொய் வழக்குகளில் சிக்கும் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கும் உதவி அளிப்போம் என்று சல்மான் கூறுகிறார். தற்போது தனது யுனானி க்ளீனிக்கிலேயே இவ்வமைப்பின் அலுவலகத்தையும் அமைத்துள்ளார் அவர்.
சிறைகளில் உள்ள சூழல்களைக் குறித்து எந்த அமைப்பும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சல்மான் கூறுகிறார். சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ள காரியங்கள் கூட அங்கு நடப்பதில்லை.அதிலும் குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர் நிரபராதியாக இருக்கும்போது சூழல் பயங்கரமாகும். தன்னை இவ்வழக்கில் இருந்து முற்றிலும் விடுவித்த பிறகு தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சல்மான் தெரிவித்தார்.
ஏ.டி.எஸ் கைது செய்த பிறகு சல்மானும், இதர எட்டுபேரும் ஐந்து ஆண்டுகள் மும்பையில் பிரபல ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்! – போலீஸ் கமிஷனரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் மனு!
Wednesday, January 23, 2013
No comments
23 Jan 2013
சென்னை:நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளியாக உள்ள ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இந்த படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளிவந்தவுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என கருத்து வெளியானது. அப்போதே இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக இணைந்து படத்தை எங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டியபின்பே வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கமல் பத்திரிக்கையாளர்களிடம் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என வழக்கம்போலவே சமாதனம் பேச ஆரம்பித்தார்.இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சென்ற மாதம் இறுதியில் பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் பேட்டியளித்தனர். அதன் பின் நேரடியாக கமலை சந்தித்து முதலில் எங்களுக்கு திரைப்படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும் என்பதை கூறினார்கள்.
விஸ்வரூபம் படம் வெளியிடுவதற்கு முன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்களிடம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் என்று கமலஹாசன் உறுதியளித்ததன்பேரில் 21.01.2013 அன்று திரையிட்டுக் காட்டப்பட்டது.படத்தில் முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருமறைக் குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமாக கொச்சைப்படுத்தும் விதத்திலும் படத்தில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கியுள்ள கமலின் விஸ்வரூபம், விஸ்வரூபம் எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இந்நிலையில் படைத்தை கண்டப்பின்தான் தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு விஷம கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளன என்பது. படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுவதோடு முஸ்லிம்களின் புனித குர்ஆன் தீவிரவாதத்தை போதிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதோடு இன்னும் கூடுதலாக முஸ்லிமாக நடித்துள்ள கமல் தனது மனைவியை வெளிநாட்டர்களுக்கு கூட்டிகொடுப்பது போன்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக படத்தை தடை செய்யக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. விஸ்வரூபம் படம் தடை செய்யப்படாவிட்டால் கடுமையான போராட்டங்களிலே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இறங்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக ’விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக புகார் கூறி, அதனை கமலஹாசன் மறுத்து இருந்தார்.மேலும் படம் வெளியான பின்னர் அவ்வாறு காட்சிகள் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்றும் தவறுக்கு பிராயசித்தமாக இஸ்லாமிய அமைப்புகள் ஏழைகளுக்கு பிரியாணி வழங்க வேண்டும் எனக் கமலஹசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Wednesday, January 16, 2013
பிப்ரவரி 17 - பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்சிகள் மற்றும் மூன்று இடங்களில் யூனிட்டி மார்ச்
Wednesday, January 16, 2013
No comments
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கடந்த ஜனவரி 10ம் தேதி மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கினார் . பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார் . அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .
செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்:
- பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்ற தேசிய செயற்குழுவின் தீர்மானதின்படி அகில இந்திய அளவில் பல்வேறு நிகழ்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது எனவும் காஞ்சிபுரம் , திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மண்டல அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் யூனிட்டி மார்ச் (Unity March) என்ற பெயரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கின்றது .
இப்படிக்கு
ஏ.காலித் முஹம்மது
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு
மத வெறியர்களால் தாக்கப்பட்ட பள்ளி இமாம் (புகைபடங்கள்)
Wednesday, January 16, 2013
No comments
பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் கடந்த சனிகிழமை இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும்போது பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிளான 15 கொண்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் பள்ளி இமாம் மற்றும் தடுக்க சென்ற நகர SDPI தலைவர் அமான்னுல்லாஹ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
தாக்கப்பட்ட பள்ளி இமாம்
நகர SDPI தலைவர் அமான்னுல்லாஹ்
Tuesday, January 15, 2013
விஸ்வரூபம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் - இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்களிடம் கமலஹாசன் உறுதி
Tuesday, January 15, 2013
No comments
அண்மையில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது . அதனை தொடர்ந்து துப்பாக்கி பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கினர்.
இதற்கு பிறகு விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டிப்பாக முஸ்லிம்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் எனக் கூறியிருந்தன.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதீன் தன் தரப்பு கருத்தை எடுத்து வைத்த பொழுது
அதன் அடிப்படையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் நடிகர் கமலஹாசனை சந்தித்து அவரிடம் விஸ்வரூபம் படம் சம்மந்தமாக விளக்கம் கேட்டனர். முஸ்லிம்கள் தரப்பு கோரிக்கைகளை கவனமாக கேட்ட கமலஹாசன், பின்னர் அவருடைய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக விஸ்வரூபம் படம் திரையிடப்படும் முன்பு முஸ்லிம் தலைவர்களிடம் திரையிட்டுக் காட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்
இதற்கிடையே உள்துறை செயலாளரிடம் இந்த திரைபடம் தொடர்பாக குறித்து மனு அளிக்கபட்டது. அப்பொழுது உள்துறை செயலாளர் கண்டிப்பாக மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார்.
எனவே கமலஹாசன் இந்த திரைபடத்தை திரையிட்டு காட்டும்வரை எந்த வித அனுமானத்திற்கும் இடம் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இச்சந்திப்பின் போது இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.முஹம்மத் ஹனீபா , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் , தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது , இந்திய இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி முனீர் , ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த் நிர்வாகி மன்சூர் காஷிஃபி , வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் திரு.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் திரு.அச.உமர்பாரூக் உள்பட பல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிரை நகர முஸ்லிம் லீக்கின் பொதுக்கூட்டம்!
அதிரையில் இன்று மாலை இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் மர்ஹூம் N.A.ஜெக்கரியா நினைவரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை பரப்பு செயலாளர் ஜனாப்.காயல் மஹபூப் மற்றும் MSF-ன் மாநில செயலாளர் V.A. செய்யது பட்டானி (மாநில செயலாளர் முஸ்லிம் மாணவர் பேரவை) ஆகிவோர் சிறப்புரையாற்றினர். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Photos By : S.Abdul Wahab BBA...
Monday, January 14, 2013
பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!(புகைப்படங்கள்)
நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSP-யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக செல்லும் காட்சி
DSP-யிடம் கொடுக்கப்பட்ட மனு
புகைப்படம் மற்றும் தகவல் : ரிலா
Sunday, January 13, 2013
அதிரையில் களத்தில் இறங்கிய SDTU!
அதிரையில் தன் சேவையை தொடங்கியது SDTU என்னும் தொழிலாளர்களுக்கான தேசிய இயக்கம். இதில் ஒரு பகுதியாக நேற்று முந்தினம் ஆட்டோவில் பயணித்த ஒருவர் தன்னிடம் இருந்த பாஸ்புக் போன்ற முக்கிய ஆவணங்களை ஆட்டோவில் தவரவிட அதை பார்த்த டிரைவர் SDTU-வின் அமைப்பாளர் ஹிதாயதுல்லாஹ் அவர்களின் மூலம் இதை உரியவர்களிடம் சேர்க்கும் முயர்ச்சியில் இறங்கினர். பின் நேற்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட SDPI அலுவலகத்தில் வைத்து பாஸ்புக் போன்ற ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது. அப்போது அதிரை நகர SDPI தலைவர் சலீம் மற்றும் நிறுவாகிகள் உடனிருந்தனர். இந்த உதவியை செய்த SDTU-அமைப்பாளர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
Friday, January 11, 2013
அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம் (Photos)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்: செயளாலர் V.T.அஜ்மல் ROOM
தேதி: 10-01-2013
அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :
1) செயற்குழுக்கூட்டத்தில் காலண்டர் விஷயமாக விவாதிக்கப்பட்டு ஒவ்வொரு முஹல்லாவுக்கும் உள்ள பங்கிட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிவிக்கப்பட்டது.
2) அமீரக AAMF –ன் செயற்குழு உறுப்பினர்கள் (நிர்வகதிதில் உள்ள மாற்றங்கள்) விபரம் அடுத்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டு பின் இணைய தளத்தில் வெளியிடுவது என்று தீா்மானிக்கப்பட்டது.
Wednesday, January 9, 2013
த த ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!
Wednesday, January 09, 2013
No comments
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!! வன்மையாக கண்டிக்கின்றோம்!!!
அண்ணன் ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!!
இஸ்லாமிய மார்க்க நோட்டீஸ் கொடுத்ததற்காக நடு இரவில் வீடு புகுந்து பெண்களை தரைக்குறைவாக பேசிய காவல்துறையையும்- அந்த அநீதியை கேட்க்க சென்ற அப்பாவி த த ஜ சகோதரர்கள் மீது தடி அடி ''தர்ம'' அடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதை தொடர்ந்து மண்ணடியில் த த ஜ பொதுக்கூட்டம் நடத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காவல்துறை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் ஒரு லட்சம் பேர்? கூடி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்த பிறகு- சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பை கண்டு ''குலை நடுங்கி ''கதி கலங்கி ''காவல்துறை உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி விட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் - மாறாக சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பனி இடமாற்றம் என்ற பெயரில் ஏற்கனவே அவர்கள் விரும்பிய படி ,அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பனி இடமாற்றம் செய்து
துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் விரும்பிய சலுகை கொடுத்து காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் முகமாகவும் முஸ்லிம்களின் சிறைநிரப்பும் போராதிர்க்கு ''அல்வா கிண்டி''கொடுத்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் -
அது மட்டும் இல்லாமல் அண்ணன் ஜமாஅத் வாங்கிய அல்வாவை அப்படியே தம்பிமார்களுக்கு [சுயமாக யோசிக்க] விடாமல் கொடுத்து ருசிக்க செய்து காரியத்தை கட்சிதமாக முடித்த செயலையும்
வன்மையாக கண்டிக்கின்றோம்
Tuesday, January 8, 2013
முதலாம் பரிசு தொகையை தட்டிச்சென்ற திரு.லோகநாதன் மற்றும் K.சலாவுதீன் அவர்களின் புகைபடங்கள்!
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதலாம் பரிசு தொகையான ரூ.11,111-யை தட்டிச்சென்ற கல்லூரி மாணவர் திரு.லோகநாதன் மற்றும் இப்போட்டியில் 12-ஆம் இடமும் அதிரையர் சார்பில் முதலாம் இடமும் ரூ.500 சிறப்பு பரிசு தொகை பெற்ற K.சலாவுதீன்( வயது 17) அவர்களின் புகைபடங்கள் இதோ உங்கள் பார்வைக்கு. திரு.லோகநாதன் சென்றமுறையும் முதலாம் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.
கோப்பையை கைப்பற்றிய திரு.லோகநாதன்
ரூ.500 சிறப்பு பரிசு தொகை பெற்ற K.சலாவுதீன்( வயது 17)
புகைபடங்கள் மற்றும் பதிவு
Z.முஹமது சாலிஹ்
தஞ்சையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்!
தொடரும் விவசாயிகள் தற்கொலை, தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும். SDPI கட்சி-யின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சையில் 09/01/2013 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெரும் மாபெரும் இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது.
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)
தஞ்சை தெற்கு மாவட்டம்.
Sunday, January 6, 2013
அதிரையை மட்டுமல்ல தமிழகத்தையே அதிரவைத்த நெடுந்தூர ஓட்டப்போட்டி! (புகைபடங்கள்)
Saturday, January 5, 2013
ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
Saturday, January 05, 2013
No comments
ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !
அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !
- இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
- மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
- இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
- இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
- அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
- மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
- மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
- சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
- தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
- மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
- உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்றோகிம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.
கூடங்குளம்:அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் எதிர்ப்புக் குழு!
Saturday, January 05, 2013
No comments
4 Jan 2013
இடிந்தகரை:கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி துறை தலைவர் ரத்தன்குமார் சின்ஹா கூறிய நிலையில் அணு உலைக்கு எதிரான இறுதிகட்ட போராட்டம் குறித்து வருகிற 13 ஆம் தேதியன்று முடிவெடுக்கப்படும் என்று அணு உலை எதிர்ப்புக் குழு அறிவித்துள்ளது.
இன்னும் இரு வாரங்களில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி துறை தலைவர் ரத்தன்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,இந்த அறிவிப்பு அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அணு உலைக்கு எதிராக இறுதிக்கட்ட போராட்டத்தில் இறங்க போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் அரசு பின்பற்றவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2 வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாக கூறினார்.
மின்உற்பத்தி பணி தொடங்குவதற்கு முன்கசிவு எற்பட்டது எப்படி என்பது தெரியவில்லை. ஆகவே கசிவு ஏற்பட்டது குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2 வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அணுசக்தி துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயண சாமியோ, வருகிற 15 ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தை மதிக்காத செயல் ஆகும். ஆகவே நாங்கள் இறுதிக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய இடிந்தகரையில் வருகிற 13 ஆம் தேதி சமுதாயக் கூட்டம் நடத்துகிறோம்.
இதில் பங்கேற்க கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்புளி, தோமையார்புரம், இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த அனைத்து மீனவர்கள் மற்றும் ஊர்த்தலைவர்களை ஒன்று திரட்டி ஆலோனை நடத்தி இறுதிக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கிறோம்” என்றார். போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் மீண்டும் போராட்ட மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளன.
சிவசேனை கட்சியின் அங்கீகாரம் "ரத்து" வழக்கு : தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
Saturday, January 05, 2013
No comments
Jan5, சிவசேனை மற்றும் "மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா" (M.N.S) ஆகிய வகுப்புவாத கட்சிகளுக்கு உள்ள "அரசியல் கட்சி" என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவ்விரு கட்சிகளும், தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகின்றன.
இக்கட்சிகளுக்குள்ள "அரசியல் கட்சி" என்ற அந்தஸ்தையே ரத்து செய்யவேண்டும், என சமூக ஆர்வலர் "பிரஜேஷ் கல்பா" உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த ஜஸ்டிஸ் ஆர்.எம்.லோடா மற்றும் அணில்.ஆர். தவே, ஆகியோர் அடங்கிய அமர்வு, விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
பிரவீன் தொகாடியாவுக்கு எதிரான புகார் : நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது!
Saturday, January 05, 2013
No comments
Jan4, ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றி "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என முஸ்லிம்களை மிரட்டும் வகையில், பகிரங்கமாக பேட்டியளித்த விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா"வுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
சார்மினாரில் கோவில் கட்டுவதை எதிர்த்தால்? "ஹைதராபாத்தை அயோத்தி"யாக மாற்றி முஸ்லிம்களுக்கு "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என, கடந்த டிசம்பர் மாதம் பேட்டியளித்த பிரவீன் தொகாடியா மீது, 295A பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் "குலாம் ரப்பானி" இன்று (04/01) பிற்பகலில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட ஹைதராபாத் 7வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட், ஜனவரி 8 ந்தேதியன்று முழுமையான வழக்கு வடிவத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஆந்திர மாநில "சைதன்யபுரி" காவல் நிலையத்திலும் தொகாடியா மீது 295A பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதன்யபுரியில் நடந்த வி.ஹெச்.பி. செயல்வீரர் கூட்டத்தில் "மத துவேஷமாக பேசியதாக" உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரை ஏற்று, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் ஆந்திர மாநில காவல்துறை தொகாடியா மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்திருப்பதும், நடவடிக்கைகள் பூஜ்ய நிலையிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பர்தாவுக்கு ஆதரவு : பெல்ஜியம் கோர்ட்டில் தீர்ப்பு!
Saturday, January 05, 2013
No comments
Jan4, பெல்ஜியமை சேர்ந்த முஸ்லிம் பெண் "பர்தா" அணிந்து வேலை செய்ததால் "பணி நீக்கம்" செய்யப்பட்ட வழக்கில், ஹிஜாபுக்கு ஆதரவாக பெல்ஜியம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கும் சம்பளம் வழங்கவுஉத்தரவிட்டதும்.
பெல்ஜியமில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், பணிபுரிந்து வந்த 27 வயது முஸ்லிம் பெண், பர்தா அணிந்து வேலைக்கு வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நேற்று (03/01) பர்தாவுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி, உடனடியாக பணியில் நியமிக்க சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், 6 மாத சம்பளத்தை வழங்கும்படியும் ஆணை பிறப்பித்தார்.
Friday, January 4, 2013
கிருஷ்ணகிரி : மாணவிகளுக்கு "தற்காப்பு" பயிற்சி!
Friday, January 04, 2013
No comments
Jan4, பாலியல் தொல்லைகளை விட்டு தப்பிக்க, மாணவிகளுக்கு கராத்தே-குங்க்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மை பிரிவு துணைத்தலைவரும், கட்சி சார்பில் "வேட்பாளராக அறிவிக்கப்பட்டும்" போட்டியிட மறுத்துவிட்டவருமான "ஹசீனா சையத்" தெரிவித்தார்.
அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
மேலும், குற்றங்களை தடுத்துக்கொள்ளும் வகையில், பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, கராத்தே-குங்க்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி அருகில் "ஆதிவாசி சிறுமி" ஒருவர், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதையடுத்து, கிருஷ்ணகிரியில் பல அமைப்புக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன், பாதிப்புக்குள்ளான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
எல்லாம் அவன் செயல் : குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்ற பர்வேஸ் ரசூல் "கிரிக்கெட்" டீமுக்கு தேர்வு!
Friday, January 04, 2013
No comments
Jan3, மூன்றாண்டுகளுக்கு முன் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" அதே ஸ்டேடியத்தில் நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்.
குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" தற்போது, இந்தியா "A" கிரிக்கெட் டீமுக்கு தேர்வாகியுள்ளார்.
காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் டீமில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக "ரஞ்சி டிராபி" ஆட்டத்தில் காஷ்மீரின் சார்பாக கலந்துக் கொண்ட பர்வேஸ், அதிரடியாக விளையாடி அனைவரையும்விட அதிகமாக 594 ரன்கள் எடுத்ததுடன் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்து, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து நிரபராதி என நிரூபித்து வெளிவர, அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட வேதனைகளும்-சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல.
விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு!
Friday, January 04, 2013
No comments
4 Jan 2013
சென்னை:முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .முஹம்மது ஹனீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கேளிக்கை, பொழுதுபோக்கு, சுய சம்பாத்தியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும், அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
அந்த வகையில் அண்மையில் வெளியான ‘துப்பாக்கித்’ திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன், ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர்.
‘துப்பாக்கி’ ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ எடுத்திருக்கிறார். மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .
மேலும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார்.
அவரது முந்தைய சில படங்களிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் எங்களது ஐயம் மேலும் வலுப்பெறுகின்றது. மேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு முறைகளில் கமல்ஹாசன் அவர்களிடம் தங்கள் ஐயத்தை எடுத்துச் சென்ற பின்பும் கமல்ஹாசன் அவர்கள் சமுதாயத்தின் அச்சத்தை போக்க எவ்விதத்திலும் முன்வரவில்லை .
முஸ்லிம்களைக் குறித்து படமே எடுக்கக் கூடாது என்பதல்ல எங்களின் நிலைப்பாடு. முஸ்லிம்களின் வாழ்வியலைப் படமாக்குவதில் தவறில்லை. இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள், அவர்களின், கல்வி பொருளாதார நிலை எனப் பதிவிற்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்க, தொடர்ந்து அவர்கள் தேச துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியது.
எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைத் தமிழகத் திரையுலகினர் மேற்கொள்ளாதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கற்பனைச் செய்திகளுக்கு திரைத்துறையினர் பலியாகிவிடக் கூடாது. அவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்துகிறோம்.
நங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும். அத்தகைய சூழல் எழாத வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது. நன்றி, தூது
சட்டவிரோத மருந்து பரிசோதனை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
Friday, January 04, 2013
No comments
4 Jan 2013
டெல்லி:மனிதர்களிடம் நடத்தப்படும் சட்டவிரோத மருந்து பரிசோதனைகளை தடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிதாக தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளை நாடு முழுவதும் பல மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்போது, அனுமதி பெறாத புதிய மருந்துகளை மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் செயல் கட்டுப்பாடின்றி நடைபெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை, நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் கண்காணிப்பின்கீழ்தான் மருந்து பரிசோதனைகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டனர். நமது நாட்டில் வாழும் மனிதர்களின் நலனைக் காக்க வேண்டியது நமது கடமை. இதுபோன்ற சம்பவங்களில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக ஆய்வு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்துக்கு விரோதமான முறையில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக முக்கிய விஷயமாக எடுத்து கையாள வேண்டும். என்றும் நீதிபடிகள் உத்தரவிட்டனர். அப்போது இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். நன்றி, தூது
Subscribe to:
Posts (Atom)