பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார். கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.
thanks to asiananban