Tuesday, March 29, 2011

63,000 கள்ள கிரடிட் காட்டோடு இலங்கையர் கைது!

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் சுமார் 56 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை அணுகி, பெரும் பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடனட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை இலக்கங்களை அவர்கள் பெற்றுகொண்டுள்ளனர்.

மறைத்துவைக்கப்படும் சிறிய கமராக்கள் மூலமாக வாடிக்கையாளர் கடன் அட்டையின் இரகசியக் குறியீட்டு எண்களையும் இவர்கள் பெற்று, பின்னர் அதேபோல போலியான கடன் அட்டைகளை இவர்கள் தயாரித்து, அதனைக் கொண்டு காசைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் 25.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்கள் சம்பாதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பும் இடங்களில் வேலைசெய்யும் சில இலங்கையருக்கு அவர்கள் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்துள்ளதாகவும், பிடிபட்ட கும்பலிடம் சுமார் 63,000 கள்ளக் கடனட்டைகள் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளர்.

இப் பிரச்சனை ஒருபக்கம் இருக்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் இதனை அவுஸ்திரேலிய பொலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இக் குற்றச்செயல்களில் இலங்கையர் ஈடுபட்டுள்ளதால், அவுஸ்திரேலிய அரசு தமிழர்களுக்கு புகலிடம்கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை தூதரம் மேலும் தெரிவித்துள்ளதாக மனிதன் இணையம் அறிகிறது. உலகில் எந்தக் குற்றச் செயல்களில் இலங்கைத் தமிழர்கள் அகப்பட்டாலும், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் தெரிவித்துவருகிறது. 29 Mar 2011

Sunday, March 27, 2011

பிரம்மாண்டமான இலவசம் வருகிறது உஷார்! - ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா


எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒருபோதும் அறிவிக்காத ஒரு பிரம்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா அப்பாவியான வாக்காளர்களா என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லோரையும் அழித்து விடும்.


தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே கூடன்குளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.

பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில் வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது கல்பாக்கம் உலையும் பாதிக்கப் பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால் தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க மாட்டோம்.

உடனடியாக சில லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம் பேரும் அழிவது இவற்றில் விபத்து ஏற்பட்டால் நிச்சயம். அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் அது பல தலைமுறை களுக்கு நிலம், நீர், காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக்கழிவுகளிலிருந்து கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க, போதுமான தொழில் நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு சதவிகித உத்தரவாதத்துடன் உருவாக்கப் படவே இல்லை. விபத்து ஏற்படாது என்ப தற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள், நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.

ஓர் எழுத்தாளனுக்கு மிகுந்த அலுப்பு தருவது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பதுதான். 1986லிருந்து அணுசக்திக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வருகிறேன். அதற்கு இது வெள்ளி விழா! மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை விட்டால் இனி வேறு வழி கிடையாது என்ற விதண்டாவாதம் செய்பவர்கள் சில அடிப்படை உண்மை களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐம் பதுக்கு மேற்பட்ட அணு உலைகளை வைத் திருந்தும் ஜப்பானின் மொத்த மின்சாரத்தில் அது வெறும் 30 சதவிகிதம்தான். இந்தியாவில் இப்போது சூர்ய சக்தி, காற்றாலை போன்ற ஆபத்தற்ற மின் தயாரிப்பு முறை களுக்கு அரசு வெறும் 600 கோடி ரூபாய்தான் செலவிடுகிறது. ஆனால் அவை 5 சதவிகிதம் மின்சாரத்தைத் தருகின்றன. அணுசக்திக்கோ 3897 கோடி ரூபாய் ஒதுக்கி, வெறும் 3 சதவிகித மின்சாரம்தான் கிடைக்கிறது.

நில நடுக்கம், சுனாமி போன்றவற்றி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும் ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால் தான் நம் சுனாமி யைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட ஒப்பீட் டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள்.

பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள், ஒத்திகைகள் மாதந் தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகி லிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன் னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாது என்று அங்கே விமர் சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடி சைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயா ராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளைச் சூறை யாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்ட றைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கி யிருக்கிறோம்.

கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப் பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்துச் செல்ல வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன! காவல் அதிகாரிகளின் வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை!

இந்திய அணு உலைகளில் முழு நேரத் தொழிலாளர்களும் அன்றாடக் கூலிகளும் கடுமையான கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படு கின்றனர். எந்த அளவுக்கு கதிர் வீச்சு என்பதை முறையாக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. விபத்துகளில் தினக் கூலிகள் செத்திருக்கிறார்கள் கல்பாக் கத்தில் உள்ளே நடந்த பல கதிர்வீச்சு விபத்துகள் பற்றி அங்குள்ள தொழிற்சங்கம் பட்டியலிட்டு நிர்வாகத்திடம் பல வருடங் கள் முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால் எதற்கும் முறையான பதில்கள் இல்லை.

நம் அணு உலைகள் பலவும் அணுகுண்டு தயாரிக்கும் இடங்கள் என்பதால், அரசு அவற்றை ராணுவ இடங்களாகக் கருதி எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக் கொள்கிறது. வேலை பார்ப்பவர்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உரிமை இல்லை. குற்றவாளியே நீதிபதியாக இருப் பது போலத் தவறுகளுக்குப் பொறுப்பான அரசாங்கமே எல்லாம் சரியாக இருப்பதாக முடிவையும் அறிவித்துவிடுகிறது.

அணு உலை வியாபாரத்தில் இருக்கும் அரசுகளும் சரி, தனியாரும் சரி தொடர்ந்து முழு உண்மைகளைச் சொல்லாமல் அரை உண்மைகளையும் முழுப்பொய்களையும் தான் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய சம்பவங்கள் உள்ளன.

ஜப்பானில் அணு உலை நடத்தும் ஒரு தனியார் கம்பெனியான டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு அதற்கான கருவிகள் அனைத்தையும் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி விற் றது. அப்படி விற்ற போது, அந்தக் கருவிகளின் தொழில்நுட்ப சிக்கல்கள் பற்றி முழுமையான தகவல்களை ஜெனரல் எலெக்ட்ரிக் தரவில்லை என்று அதில் வேலை பார்த்த சுகோகா என்ற ஜப்பானியர் அம்பலப் படுத்தி னார். அவருக்கு வேலை போயிற்று. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களை ஜெனரல் எலெக்ட்ரிக், டோக்கியோ கம்பெனி இருவருமாக அரசின் அணு உலைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து மறைத்தார்கள் என்று பின்னர் தெரியவந்தது.

இந்தியாவில் அமெரிக்கத் தனியார் கம்பெனிகள் அணு உலை விற்பதற்கு வழி செய்யும் ஒப்பந்தத்தைத்தான் மன்மோகன் சிங் இடது சாரிகள், பி.ஜே.பி ஆகியோரின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுடன் செய்தார். அப்போது ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு எம்.பி.கள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பது இப்போது விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கும் அமெரிக்க தூதர் களின் ரகசியச் செய்திகளால் நிரூபண மாகியிருக்கிறது.

ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச் சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலா காவுக்கு யார் அமைச்சர் என்பதை தொழி லதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும் கேடுகெட்ட அரசியலில், மனித குலத்தா லேயே இதுவரை தீர்வு காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்கு வது மிக மிக ஆபத்தானது.

அணு உலைகளின் பாதுகாப்பை மறு பரிசீலனை செய்வோம் என்று மன்மோகன் சிங் அறிவித்திருப்பது போதாது. அந்த மறு பரிசீலனை நடவடிக்கையில் தன்னார்வக் குழுக்கள் முதல் உச்ச நீதி மன்றம் போன்ற அமைப்புகள் நியமிக்கும் சுயேச்சையான அறிஞர்கள் பங்கு பெறச் செய்ய வேண்டும். புதிதாக எந்த அணு உலையும் தேவை யில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மூன்று சத தயாரிப்பில் இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு இறைக்கும் கோடிக்கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல் லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர்வீச்சு பற்றி இப் போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழிவகுப்பது உறுதி. இன்னும் பிறக்காத கொள்ளுப் பேரன்களுக்கெல்லாம் இப்போதே சொத்து சேர்க்கும் தமிழினத் தலைவர்களும் உடன்பிறப்புகளும் உடன் பிறவாத கொள்ளைக் கூட்டாளிகளும் ஒன்றை மறக்க வேண்டாம். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை ஒரே ஒரு பேரக் குழந்தைக்கு உருவாக்கி வைத் தாலும், அந்தப் பேரக் குழந்தையும், ஒற்றை தம்படி கூட இல்லாத தெருவோரக் குழந்தையும் அணு கதிர் வீச்சினால் சமமாகவே பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவின் எல்லா அணு உலை திட்டங்களையும் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும், இருக்கும் அணு உலைகள் பற்றிய பகிரங்கமான விசாரணைகள் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நாம் எல்லோரும் எழுப்பியாக வேண்டும்.

இந்த வார நகைச்சுவை!

மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 12 லட்சம். பல வருடங்கள் முன்பே தங்கை கனிமொழியின் (அறிவிக்கப்பட்ட) சொத்து மதிப்பு மூன்று கோடி!

இந்த வார இரங்கல்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை, தமிழகம் எங்கும் சென்று தூவப் போவதாக வைகோ அறிவித்திருக்கிறார். கூடவே அவர் தூவப் போகும் சாம்பல் - தேர்தல் புறக்கணிப்பு என்ற தீயில் அவர் தகனம் செய்து விட்ட ம.தி.மு.கவின் சாம்பல்.

இந்த வார திட்டு!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்று அறிவித்தபோது... கருணாநிதி, இது குடும்பத்துக்காக என்று சொல்லாமல் “இது பெண்களுக்காக” என்று அழுத்தமாக அறிவித்ததற்கு இ.வா.தி. சமையல், அடுப்படி வேலை பெண்களுக்கானது என்ற ஆணாதிக்க மனப்பான்மையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அவரது அணுகுமுறை அருவெறுப்பானது.


நன்றி: கல்கி

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!


சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்றனர்.


பண்ணை உரிமையாளரோ அதிசயிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக்கள், குறும்புகள் உள்ளன.


ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றார் என்றும் முதல் தடவையாக இவ்வதிசயம் நேர்ந்து உள்ளது என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.
thanks to manithan.com

நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை!

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது.

பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34.


வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். 

thanks to manithan.com

குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை.

இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.

Saturday, March 26, 2011

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தது.

இவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து மாட்டின் தோலும், கத்தியும், பயன்படுத்திய வாகனமும் கண்டெடுத்ததாக போலீஸ் கூறியிருந்தது.

ஆனால், தங்கள் மீது பொய் குற்றம் சுமத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிவேலைக்கு போலீஸ் துணை போவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அ.மார்க்ஸ், பீப்பிள் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ரஜனி, ஃபெடரேசன் ஃபார் பீப்பிள்ஸ் ரைட்ஸ் செயலாளர் ஜி.சுகுமாரன், வழக்கறிஞர்களான முஹம்மது அப்பாஸ், பாதுஷா(என்.சி.ஹெச்.ஆர்.ஒ) ஆகியோர் உண்மைக் கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆகியோரை சந்தித்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் சித்திரவதைச் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் உண்மைக் கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டமாக இருக்கலாம். ஏனெனில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன என என்.சி.ஹெச்.ஆர்.ஓ குற்றஞ்சாட்டியுள்ளது.

by sinthikavum blog.

பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ்



லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ‌ஏற்படுத்தி உள்ளது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரை 10 வயதிற்கு உட்பட்ட 13 குழந்தைகளுக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் உள்ள 51 அமைப்புக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 வயதிற்கு உட்பட்ட 7,071 பேருக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புறாக்களை வேட்டையாடுவதற்காக மட்டுமே இந்த லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளது.
thanks to thaalam

உலகின் உயரமான கட்டத்தில் ஏறி சாத‌னை படைக்க வாலிபருக்கு அனுமதி



துபாய்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்டிற்கு உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ்கலிபா கட்டடத்தில் ஏற நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட். இவர் அந்நாட்டின் ஸ்பைட்மேன் எனஅழைக்கப்படுகிறது. இவர் அந்நாட்டின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள இரட்‌டை கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள கட்டடம் ஆகிய மிகவும் உயரமாக கட்டடங்களில் எந்தவித உபகரணங்களும் இன்றி ஏறி சாதனை படைத்தார். இந்நிலையில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான சாதனையை வரும் மார்ச் 28-ம் தேதி மேற்கொள்ளவுள்ளார். பூர்ஜ்கலிபா கட்டடம் 800 மீட்டர் (2625 அடிஉயரம் ) கொண்டது. 160 மாடிகளை கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரியில் தான் கட்டி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க ராபர்ட் விரும்பினார். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்‌னெச்சரிக்க‌ை நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே கட்டடத்தின் மீது ஏற துபாய் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 28-ம் தேதி ராபர்ட் இச்சாதனையை நிகழ்த்தவுள்ளார். மொத்தம் 7 மணி நேரத்திற்குள் கட்டடத்தின் உச்சியினை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!



வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு - ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...

நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.

நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!
thanks to thaalam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது



இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசீர்பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 28-ம தேதியன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும் அவர் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டிருககலாம் என்ற சந்தேகமும் அந்நாட்டு தேசிய புலனாய்வு ஏஜ‌ஜென்சி கருதுகிறது. ‌‌தக்ரிக்௸இ- தலிபான் என் அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய நிர்வாகக்குழுக்கூட்டம் , உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தலைமையில் நடநத்து. இதில் கலந்துகொண்டு பேசிய மாலிக் , பெனாசீர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக , அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கொலை நடந்த அன்று சிக்கியுளள வீடியோ ஆதாரம் சிக்கயிருப்பதாகவும் தெரிவித்தார்.
thanks to thaalam.

ஜப்பானில் அணுஉலை கதிர்வீச்சு அதிகரிப்பு



டோக்கியோ : ஜப்பானில் கடல் நகரமான ஃபுகுஷிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட 8 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கதிர்வீச்சால் பாதிப்பு ஏதும் ஏற்பாடு என அறிவிக்கப்பட்ட 8 நாட்களுக்கு பின் மீண்டும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுஉலைகளை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
thanks to thaalam.

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு


Traffic Ramasamyசென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது போல அமைந்துள்ளது சில கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புத் திட்டங்கள். இந்த இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமி தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியை எதிர்த்து போட்டி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட திருவாரூரிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி.

அங்கு உதவி தேர்தல் அதிகாரி ஜெயராஜிடம் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி.
thank u to thatstamil

Friday, March 25, 2011

கோடை காலத்தில் எதைத் தவிர்க்கலாம்?



கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
* கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.
* காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
* சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.
* தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
* கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.
* வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
* உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.
* குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.
thank u thaalam.

ஒரிசா இனி ஒடிசாவாக பெயர் மாற்றம்: பார்லிமென்ட் ஒப்புதல்



புதுடில்லி: ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்வதற்கும், ஒரியா மொழி இனி ஒடிசா என ஆட்சி‌, மற்றும் அலுவலக மொழியாக மாற்ற பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்யக்கோரி பார்லிமென்ட் அரசிலமைப்பு சட்டம் 113 பிரிவின் கீழ் மாசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் எம்.பி.க்கள் பார்லிமென்ட் இரு சபைகளிலும் வலியுறுத்தி வந்தனர் . லோக்சபாவிலும் ஏற்கனவே இதற்கு ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்நிலையில் ராஜ்யசபையில் 245 எம்.பி.க்கள் இதற்கு ஆதரவாக ஒட்டளித்தனர். இதன் மூலம் இரண்டில் ஒரு பங்கு மெஜாராட்டியுடன் இந்த மசோதாவிற்கு ஆதரவு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஒரிசா மாநிலம் இனி ஒடிசா என்றும், ஒரியா மொழி அம்மாநிலத்தின் அலுவலகத்தின் ஒடிசா எனவும் அழைக்கப்படும்

தமிழக சட்டசபை தேர்தல் மனுதாக்கல் நாளையுடன் முடிகிறது



சென்னை : தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சனிக்கிழமை (19-ந் தேதி) தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் நேற்று குறிப்பிட்ட நேரத்தில் மனு செய்தனர். 234 தொகுதிகளிலும் நேற்று வரை 1052 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்றும் நிறைய பேர் மனு தாக்கல் செய்தனர். 234 தொகுதிகளிலும் நாளை (26-ந் தேதி) வேட்பு மனு தாக்கல் முடிகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 30-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும்.
thank u thaalam

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சி : இன்டபோல் முறியடிப்பு !




தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இன்டபோல் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளயிருந்த இடங்களை கடந்த வாரம் தாம் அடையாளம் கண்டதாக பிரான்ஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச பொலிஸ் முகவர் நிலையத்தின் பிரதான அதிகாரியான ரோனால்ட் கே நோபில் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் - கராச்சி நகரிலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாக இருந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பை அடுத்தே இந்த தாக்குதல் சம்பவத்தை தம்மால் தடுக்க முடிந்ததாக தெரிவித்த அவர், அதனால் அனைத்து நாடுகளுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
thank u thaalam

Thursday, March 24, 2011

‘ஆமாம் சாமி’ சபையா?


இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குபவையாக இருந்து வருகிறதே தவிர, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாகவோ, சின்னஞ்சிறு நாடுகளின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவோ இல்லை. வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தலையாட்டி அங்கீகரிப்பதற்காகக் கூட்டப்பட்ட உலக நாடுகளின் அமைப்பாகத் தன்னை ஐ.நா. சபை மாற்றிக் கொண்டிருப்பதன் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் லிபியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.
லிபியா அத்துமீறி தனது அயல்நாட்டின் மீது படையெடுத்திருந்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை நிச்சயமாக ஐ.நா. சபைக்கு உண்டு. ஆனால், லிபிய அரசு உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முயற்சிப்பது தவறு என்று கூறி, புரட்சியாளர்கள் சார்பில் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தொடுத்திருக்கும் விமானத் தாக்குதலுக்கு ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்க முற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
கடந்த இரண்டு நாள்களாக விமான வெடிகுண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் என்று தொடர்ந்து இந்தப் படைகள் லிபியா மீது அரங்கேற்றியிருக்கும் தாக்குதல்களால் தரைமட்டமாகிப் போயிருக்கும் கட்டடங்கள் ஏராளம். செயலிழந்து காணப்படும் விமானத் தளங்கள் பல. உயிரிழந்திருக்கும் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிகள் நூற்றுக்கணக்கில். இவையெல்லாம் திடுக்கிட வைக்கின்றன.
குறிப்பாக, புரட்சியாளர்களின் எழுச்சி, லிபிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஐ.நா.வின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவம் லிபியாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதன் மூலம், லிபிய அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகப் புரட்சியாளர்களைத் தூண்டிவிட்டதுகூட இந்த நாடுகள்தானோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.
அமெரிக்கத் தலைமையிலான “நேட்டோ’ படைகள் தமது நாட்டில் எந்தவிதமான உதவி பெறுவதையும் துருக்கி அனுமதிக்க மறுத்துவிட்டிருக்கிறது. ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு வாக்களித்த 23 நாடுகளின் அரேபியக் கூட்டமைப்பு இப்போது தாங்கள் தவறு செய்துவிட்டதாகக் கையைப் பிசைகிறது. சாமானிய மக்களின் உயிரிழப்பும், அதிபர் மும்மார் கடாஃபியைக் குறிவைத்து அவர் குடியிருக்கும் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களும் “நேட்டோ’ படைகளின் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று அரேபியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அமர் மௌசா சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டு காலமாகவே மேலைநாட்டு வல்லரசு நாடுகளின் விபரீத எண்ணங்களின் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் ஏராளம். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருக்கும்போது, கொசோவாவில் தங்களது படைகள் பின்னடைவைச் சந்தித்த வேளையில், 15,000 அடி உயரத்திலிருந்து இலக்கே இல்லாமல் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்து எதிரிகளைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பலி வாங்கியதில் தொடங்கிய இந்த ரத்த வெறி, இப்போது லிபியாவில் மையம் கொண்டிருக்கிறது, அவ்வளவே.
எதற்காக இப்போது லிபியா மீது தாக்குதல்? புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக என்றால் திரிபோலியில் உள்ள அதிபர் மும்மார் கடாஃபியின் இருப்பிடத்தைச் சுற்றித் தாக்குதல் நடத்தி நாசம் விளைவிப்பானேன்? எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் பகுதிகளை விட்டுவிட்டுத் தாக்குதல் நடத்துவதிலிருந்தே, லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமேயொழிய, அதன் எண்ணெய் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மறைமுக கபட நாடகம் வெளிப்படுகிறதே…
அமெரிக்கா கூறுகிறது ஆட்சி மாற்றமல்ல குறிக்கோள் என்று. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் கேமரோன் கூறுகிறார் லிபிய அதிபர் மும்மார் கடாஃபி அகற்றப்பட வேண்டும் என்று. அப்படியானால் யார் சொல்வது உண்மை?
இவர்களது இலக்கு அதிபர் மும்மார் கடாஃபியா, இல்லை, தங்களுக்குத் தங்கு தடையின்றி லிபியாவின் பெட்ரோலிய வளத்தை அள்ளி வழங்கி உதவும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதா?
லிபியாவின் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குப் பகுதியில் எழுந்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான புரட்சியாளர்களின் எழுச்சிக்கு, மனித உரிமை மீறல், அடக்குமுறை என்கிற சாக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கும் “நேட்டோ’ படைகள், இலங்கையில் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு ஆதரவாகக் களம் இறங்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை இந்தியா அமெரிக்காவின் விரலசைப்புக்கெல்லாம் தலையசைக்காவிட்டால், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்காது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் எழுகிறது.
லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை உலகிலுள்ள அணிசாரா நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தங்களது குரலை உரக்க எழுப்பி “நேட்டோ’ படைகளின் மறைமுக ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் லிபியாவின் கதியை அவர்களும் எதிர்கொள்ள நேரிடலாம். உள்நாட்டுப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்க ஐ.நா. சபையைத் துணைக்கு அழைக்கும் தவறைக் கண்டிக்காமல் விட்டால், செர்பியா, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதிகாரப்பூர்வமான தாக்குதல்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும்.
அமெரிக்காவில் அதிபர்கள் மாறுகிறார்களே தவிர, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே மாறுவதில்லை என்பதைத்தான் லிபியா மீதான தாக்குதல் உணர்த்துகிறது.
நன்றி: தினமணி

Wednesday, March 23, 2011

SDPI மேலும் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு.

மார்ச் 23,: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் SDPI எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என் ஏற்கனவே அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக ஆறு தொகுதிகள். கடையநல்லூர், இராமநாதபுரம், பூம்புகார், நாகை தொண்ட முத்தூர், துறைமுகம், காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டின ஆகிய தொகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக நேற்று நடந்த செயற்குழுவில் கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன் படி பாளையங்கோட்டை மற்றும் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பாளையங்கோட்டை வேட்பாளராக மேலபாளையத்தை சேர்ந்த மொவ்லவி சாகுல் ஹமீத் உஸ்மானியும், திருப்பூர் தொகுதி வேட்பளராக அமானுல்லவும் தேர்ந்தடுக்கப் பட்டுள்ளனர்.
by sinthikkavum blogger

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. 

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே அந்நாடு இன்னுமமீளாமல் உள்ளது. 

இந்நிலையில் நேற்றும், அதனைத் தொடர்ந்து இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் வெடித்த அணு உலைகளை குளிர்விக்கும் பணி நடந்து வரும் நிலையில்,அப்பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.



thank u to tamil.webdunia.com

ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி


போபால் விஷ வாயு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு கழக நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை, இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1984 ஆம் ஆண்டில் போபாலில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டார். 

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே சமயம் ஆண்டர்சன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வந்து, அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க கோரி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி வினோத் யாதவ்,ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்தார். 

போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கணக்கில் கொண்டும், நீதியின் நலன் அடிப்படையிலும், ஆண்டர்சனை நாடு கடத்துவது சரியானது என்று கருதுகிறோம். 

எனவே, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த தடையும் இல்லை. இதில், சிபிஐ-யின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
thank u to webdunia

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை


samuthaayamதமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
முஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.
அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.
SDPI – இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.
இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.
அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.
இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….
புதுவலசை பைசல்

முஸ்லிம் காவல்துறை அதிகாரி எரித்து கொலை!


மார்ச் 23, ஜெய்பூர்: ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை பாரதீய ஜனதா கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில் அந்த முஸ்லிம் அதிகாரியை கலவரக் கூட்டம் தாக்கும் போது உடன்வந்த மற்ற காவலர்கள் நம்மைவிட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளனர் என்பதுதான்.

சவை மதோபூர் மக்கள் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் பெண் கொலைக்கு கடந்த இரண்டு வாரங்களாக மதச்சாயம் பூசப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் காவலருடைய கொலை அரங்கேரியதாகவும் தெரிவித்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சில மர்ம நபர்கள் ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து கொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவலதுறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதற்கிடையில் கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மையினச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் காவல்துறை அதிகாரி முஹம்மது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பி.ஜே.பி. தூண்டுதலால் இந்த கலவரம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 17 ஆம் தேதி மீனா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதாக தகவல் வந்ததின் பேரில் தற்கொலையை தடுக்க முஹம்மது தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலையைத் தடுக்க முஹம்மது முயன்று கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த ஒருவர் முகமதுவின் தலையில் அடித்ததால் மயக்கமுற்றார். பின்னர் கலவரக்காரர்கள் முஹம்மதுவை காவல் வேனில் போட்டு தீவைத்தனர்.

சம்பவ இடத்தில் டிஎஸ்பி மற்றும் சக காவலர்கள் இருந்தும் முஹம்மதுவை காப்பாற்றாமல் ஓட்டம் பிடித்தனர். காவலர் முஹம்மது நேர்மையாக நடந்ததால் DSP அவரிடம் விரோதப் போக்கை கடைப் பிடித்ததாக தெரிகிறது. இந்த கொடூரக் கொலையால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த வியாழனன்று முஹம்மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாதென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சமாதானப்படுத்தியதோடு கொல்லப்பட்ட முஹம்மதுவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுமென்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஎஸ்பி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1000 க்கும் அதிகமான நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 21 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த காவல் அதிகாரி முஹம்மதுவின் உடல் தனது சொந்த ஊரான சிகாரில் கடந்த வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது.

by sinthikavumblogger