ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் The Smurfs என்ற திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது.
ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால் பிரபல்யத்திற்காக நீலநிறப்பூச்சிடப்பட்டது. அதன் தேவாலயங் கூட அதே நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தக் காவற்றுறையினர் மேலதிகமாகக் கடமையில் அமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்தும் அவ்வாறே கிராமத்தை இருக்கவிடும் படி அக்கிராமத்து மக்களிடம் திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும்.
இக் கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனை மீண்டும் தாம் அதன் பழைய வெள்ளைநிறத்திற்கு மாற்றித் தருவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். எனினும் அது தற்போது தேவையில்லை என்றே கருதப்படுகின்றது.
0 comments:
Post a Comment