Thursday, November 10, 2011

ஈரான் மீதான அவசர நிலையை நீடித்தது அமெரிக்கா.



ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அவசர நிலையை, மேலும் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஒபாமா நீடித்துள்ளார். ஈரானில் கடந்த 1979ல் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் ஈரானுக்கு எதிரான அவசர நிலை அமெரிக்காவில் 1979, நவ. 14ம் திகதி பிறப்பிக்கப்பட்டது. 

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அவசர நிலையை மேலும் ஓராண்டுக்கு நீடித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ஈரான் உடனான அமெரிக்காவின் உறவு இன்னும் சுமுக நிலைக்குத் திரும்பவில்லை. 1981, ஜன. 19ம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்த பரிந்துரைகளை அந்நாடு அமுல்படுத்தவில்லை. அதனால் 1979, நவ. 14ம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஈரானுக்கு எதிரான அவசர நிலை 2011, நவ. 14க்குப் பின்பும் தொடரும். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். வெள்ளை மாளிகை ஊடக செயலர் ஜே. கார்னே இது குறித்து கூறுகையில், “ஐ.நா. வின் ஈரான் தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் கவலையை எதிரொலிக்கும் என நம்புகிறோம்’ என்றார்.
by yarlmusilm

0 comments:

Post a Comment