லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் சிரேஷ்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு எதிரான மேலதிக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆலோசித்து வருகின்றது. அமைதியின்மை நிலவிய காலப் பகுதியில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் அப்துல்லா அல் சனூசி மற்றும் ஏனையவர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஏனைய போர்க் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சனூசிக்கு எதிராக ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளன. அமைதியின்மை நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணையை நிறைவுசெய்துள்ளதாக நீதிமன்றத்தின் வழக்கு தொடுநனர் மோரேனோ ஒகம்பு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் அல்லது வேறு நபர்களுக்கு எதிராக புதிய வழக்குகளை பதிவு செய்யவுள்ளதாக ஹேக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள லிபியத் தலைவர் மற்றும் அவரின் புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் உத்தரவிட்டமை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் ஒகம்பு இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
தற்போது அரச அதிகாரத்திலுள்ள முன்னாள் கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட முஅம்மர் கடாபி, கடந்த மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தந்தையின் வெற்றிக்காக பெரிதும் பாடுப்பட்ட சைய்ப் அல் இஸ்லாமிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட மாட்டாதென மொரேனோ ஒகம்பு குறிப்பிட்டுள்ளார். போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சைய்ப் அல் இஸ்லாமினை கைது செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
sources- yarlmuslim
0 comments:
Post a Comment