Saturday, March 3, 2012

சமூக மேம்பாட்டுதுறை - பிப்ரவரி மாத ரிப்போர்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனது செயல்பாட்டை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதற்கான அறிக்கையை சமுதாய மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டை நமது தளத்தில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், பணிகல் மற்றும் உதவிகள் பற்றிய ஓர் பார்வை!

சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான்



கன்னியாக்குமரி:

குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர் ரஹ்மானின் மகன்  அல்-அமீனுடைய படிப்பு செலவிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 5000/-  வழங்கப்பட்டது.

திங்கள் சந்தை:

ஜைனபா என்பவரின் மகன் அபூதாஹிருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது.

மாதவலாயம்:

டயாலிஸ் செய்வதற்காக ரூபாய் 3500/-ம் மாதவ்லாயத்தில் மருத்துவ முகாமிற்காக ரூபாய் 10662/- மற்றும் திட்டுவிலளையில் ரூபாய் 1000/-மும் வழங்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் சூரங்குடியில் ஒரு மாணவனின் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 5000/- மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 1500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 5 யூனிட் அளவிற்கு இரத்ததானம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு  ரூபாய் 3000/- மற்றும் ரூபாய் 1500/- மதிப்பில் சேலைகளும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

கல்வி உதவியாக ரூபாய் 500/-ம் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 46,000/- வழங்கப்பட்டது.

திருப்பூர்:

கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000/-மும் பொருள் உதவியாக ரூபாய் 350/-ற்கும் வழங்கப்பட்டது. மேலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து பயன் பெற்றனர்.

கோவை வடக்கு:

மேட்டுப்பாளையம் குன்னூரிலும், ஊட்டியிலும் இரத்த வகை கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். சுமார் 17000/- அளவில் இதற்காக செலவு செய்யப்பட்டது. மேலும் இலவச தையல் பயிற்சி பள்ளியில் கடந்த மாதம் மட்டும் 23 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சென்னை:

கல்வி மற்றும் கம்ப்யூட்டர் படிப்பிற்காக ரூபாய் 10500/-ம் 6 முதியவர்களுக்கு ரூபாய் 650/- வீதமும், சிறு நீரகம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூபாய் 8000/-மும், திருமண உதவித்தொகையாக 12500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 13 யூனிட் அளவிற்கு இரத்த தானம் செய்யப்பட்டது. விதவை பெண் ஒருவருக்கு மாதா மாதம் ரூபாய் 500/-வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேனி:

கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் கம்பம் வந்த பிறகு இறந்துவிட்டார். அவரது ஜனாசாவை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்ததுடன் குடும்ப செலவிற்காக ரூபாய் 24,500 கொடுக்கப்பட்டது. அதே போன்று நேஷன் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கர்பப்பை நோய் ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 77 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

thanks to chennaipfi

0 comments:

Post a Comment