Saturday, September 29, 2012

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி…(வேண்டுகோள் காணொளி)



  
இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.

படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220-351291 , இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





தகவல்: அதிரை நிருபர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:காவல்துறையை மதசார்பற்றதாக மாற்றுவதற்கான அழைப்பு – இ.எம்.அப்துற்றஹ்மான்!

இ.எம்.அப்துற்றஹ்மான்!
புதுடெல்லி:சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தீவிரவாத முத்திரைக் குத்தி சிறையில் அடைக்கும் நிரபராதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.
1994-ஆம் ஆண்டு அஹ்மதாபாத்தில் ஜகன்னாதபூரி யாத்ராவின் போது வகுப்புக் கலவரத்தை தூண்ட சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுதலைச் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத செயல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறாமல் இருக்கவியலாது. ஆனால், அரசியல் சாசனமும், சட்டமும் கூறும் நடவடிக்கைகள் அல்லாத தனி நபர் சுதந்திரத்தின் மீது அத்துமீற தீவிரவாதத்தை ஒரு திரையாக பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘எனது பெயர் கான்! ஆனால் நான் தீவிரவாதி அல்ல!’ என்று ஒரு நிரபராதி கூறாமல் இருக்கும் நடவடிக்கைதான் போலீஸ் தரப்பில் இருந்து உருவாகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவை குஜராத் போலீஸ் மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த போலீசாரும் கடைப்பிடிக்க வேண்டியதாகும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் கூறினார்.
அரசு நிர்வாகத்தையும்,காவல்துறையையும் மதசார்பற்றதாக மாற்றுவதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பாரபட்சத்திற்கு முடிவுக் கட்டவும் உச்சநீதிமன்ற அளித்த எச்சரிக்கைதான் இத்தீர்ப்பு. காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை அதிலும் குறிப்பாக உளவுத்துறையை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் மீது ஓரவஞ்சனையாக செயல்படுவதில் இருந்து சுத்தப்படுத்த வேண்டும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
நிபந்தனைகளை கடைப்பிடிக்காமல் தடாச் சட்டத்தை பிரயோகித்து பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்ததை வாய்ப்பாக பயன்படுத்தி நாட்டின் எதிரிகள், தடாச்சட்டம் துஷ்பிரயோகம் செய்வதாக பிரச்சாரம் செய்கின்றனர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நிரபராதிகளான முஸ்லிம்கள் ஜாமீன் கூட கிடைக்காமல் நீண்டகாலமாக சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டிருப்பது காலாவதியான தடாச் சட்டத்தில் மட்டுமல்ல. தடாச் சட்டத்தை புதுப்பித்து உருவாக்கப்பட்டUAPA சட்டத்தின் மூலமும் நிரபராதியான முஸ்லிம்களை சிறையில் அடைப்பது தொடருகிறது.
தடா மற்றும் பொடா சட்டத்தில் உள்ள கடுமையான பிரிவுகளை உட்படுத்தி திருத்தப்பட்ட UAPA சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்தான் உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் இயக்குநர் கைது!

Nakoula Besseley Nakoula
லாஸ் ஏஞ்சல்ஸ்:இஸ்லாத்தின் இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா பாசிலி நகவுலா என்பவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வங்கி மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட நகவுலா, நன்னடத்தை விதிகளை பேணவில்லை என்ற காரணத்தால் கலிஃபோர்னியா போலீஸ் அவனை கைது செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நகவுலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டான். ஐந்து ஆண்டுகாலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தை உபயோகிக்க கூடாது என்று நகவுலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமெரிக்க அட்டர்னியின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ம்ரோஸக் இத்தகவலை வெளியிட்டார்.
மூடிய அறைக்குள் நகவுலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தலை முழுமையாக மறைத்தவாறு பலத்த பாதுகாப்புடன் நகவுலா சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டான்.
எகிப்து வம்சா வழியைச் சார்ந்த நகவுலா, 2010-ஆம் ஆண்டு வங்கி மோசடி வழக்கில் 21 மாத கால தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது ஒரு சமூகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தும் மோசமான திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா, நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளில் எட்டு வாக்குறுதிகளை மீறிவிட்டதாக கண்டறிந்ததால் ஜாமீன் மறுக்கப்பட்டது. போலி பெயரில் திரைப்படத்தை நகவுலா,  வெளியிட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞர் கூறினார். சாம் பாசிலி என்ற பெயரில் திரைப்படத்தில் இவன் தன்னை அறிமுகப்படுத்தினான்.
இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட  ‘இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்” என்ற திரைப்படத்தின் 14 நிமிடங்களைக் கொண்ட ட்ரைலரை கடந்த ஜூலையில் யூ ட்யூப் இணையதளத்தில் நகவுலா அப்லோட் செய்துள்ளான். இவன் யூ ட்யூபில் அப்லோட் செய்த மோசமான திரைப்படத்தின் டிரைலரை யாரோ ஒரு விஷமி, அரபு மொழியில் மொழிபெயர்த்து மீண்டும் யூ ட்யூபில் அப்லோட் செய்ததால் முஸ்லிம் உலகம் முழுவதும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. லிபியாவின் அமெரிக்க தூதர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நகவுலாவின் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் குலாம் அஹ்மத் பிலோர் 55 லட்சம் பரிசு பணம் தருவதாக அறிவித்திருந்தார்

சொஹ்ரபுத்தீன் ஷேக் கொலை வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு!

Abhy Chudasama
அஹ்மதாபாத்:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயை அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமா ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில் நீதிபதி அபிலாஷா குமாரி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடிச் செய்தார்.
அவர் தனது தீர்ப்பில் கூறியது: “குற்றம் சாட்டப்பட்டவர் உயர் போலீஸ் அதிகாரி ஆவார். ஜாமீன் வழங்கினால் வழக்கின் முக்கிய சாட்சிகளை மிரட்டுதல்,  வழக்கில் தலையிடுதல் போன்ற வாய்ப்புகளை மறுக்க முடியாது” என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடிச்செய்தார்

ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர்: வன்ஸாரா, பாண்டே மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை!

sadiq jamal
புதுடெல்லி:ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, பி.சி.பாண்டே மீது சி.பி.ஐ நாளை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.
சொஹ்ரபுத்தீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலைகளைப் போலவே ஸாதிக் ஜமால் கொலையும் போலி என்கவுண்டர் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. ஜமாலின் போலி என்கவுண்டர் கொலைக்கு உத்தரவிட்டது குஜராத் க்ரைம் ப்ராஞ்சில் உயர் போலீஸ் அதிகாரியான வன்ஸாரா மற்றும் பாண்டே என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.
கடந்த 2003-ஆம் ஆண்டு லஷ்கர் போராளி இயக்கத்தைச் சார்ந்தவர் என குற்றம் சாட்டி நரோடாவில் திரைப்பட அரங்கிற்கு வெளியே வைத்து சுட்டுக் கொன்றதாக குஜராத் போலீஸ் கூறுகிறது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி, பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, வி.ஹெச்.பியின் பிரவீண் தொகாடியா ஆகியோரை கொலைச்செய்ய ஸாதிக் ஜமால் திட்டம் தீட்டினார் என குஜராத் போலீஸ் கூறியது.
இந்நிலையில் ஸாதிக் ஜமாலின் சகோதரர் ஸாபிர் ஜமால் இதற்கு எதிராக குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பை க்ரைம் ப்ராஞ்சில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் தயா நாயக், ஸாதிக் ஜமாலை கஸ்டடியில் எடுத்தார் என்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்தது. தயா நாயக், ஸாதிக் ஜமாலை குஜராத் போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். மும்பையைச் சார்ந்த பத்திரிகையாளர் கேதன் திரோத்கரின் பிரமாணப்பத்திரம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஸாதிக் ஜமாலை, தயா நாயக் குஜராத் போலீஸிடம் ஒப்படைத்ததை தான் நேரில் கண்டதாக திரோத்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். பின்னர் மஹராஷ்ட்ரா-குஜராத் எல்லையில் வைத்து போலீஸ் துணை சூப்பிரண்ட் தருண் பரோட்டின் தலைமையிலான போலீஸ் கும்பல் ஸாதிக் ஜமாலை சுட்டுக் கொன்றது. பரோட்டை நேற்று முன்தினம் சி.பி.ஐ கைது செய்தது.
கொலைச் செய்யப்பட்ட ஸாதிக் ஜமாலின் உடலின் அருகில் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி என்கவுண்டர் நிகழ்ந்தாக காட்டுவதற்கான போலியான ஆதாரங்களை உருவாக்கினர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த சம்பவத்திலும் இதே போலவே போலியாக ஆயுதங்களை அருகில் வைத்து என்கவுண்டர் நிகழ்ந்தது போன்ற சூழலை குஜராத் போலீஸ் உருவாக்கியதாக சி.பி.ஐ கூறுகிறது. குஜராத் போலீஸ் கூறுவது போல, நரோடாவில் உள்ள திரைப்பட அரங்கிற்கு வெளியே என்கவுண்டர் நடக்கவில்லை என்று சி.பி.ஐ கூறுகிறது

அரச பயங்கரவாதம் - சகோ Z.முஹமது தம்பி

கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்க கோரி சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் நமதூர் சகோ Z.முஹமது தம்பி அவர்கள் அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இதோ ஒலி வடிவில்

கியூ பிராஞ்ச் போலிசை கண்டித்து INTJவின் கண்டன போஸ்டர்


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருப்பூர் கிளையின்   சார்பில் நமதூர் சகோதரர் தமீம் அன்சாரியின் மீது புனையப்பட்டுள்ள போய் வழக்கினை கண்டித்தும்

கியூ பிராஞ்ச்சில் ஊடுருவியுள்ள (கருப்பு)காவி  ஆடுகளை களையெடுக்க  கோரி திருப்பூர் நகர INTJ சார்பில் சுவரொட்டிகள் நகரெங்கும்  ஒட்டப்பட்டுள்ளது .

தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ்

Friday, September 28, 2012

இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 28.09.2012-Mp3

இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 28.09.2012-Mp3

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு! அதிர்ச்சியில் தினமலர்!




Sep 28: பதிமூவாயிரம் ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் சுப்ரிம்கோர்ட் அதிரடி உத்தரவு.  இச்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளது தினமலர் நாளிதழ்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டஅனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

ஆனால் அதை எதிர்த்து டெல்லி உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு வெற்றி தரும் உத்தரவை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.

அணுஉலைக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும் மக்கள் பாதுகாப்பு முக்கியம்.தேவைப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைப்போம்'  என்றும் உச்ச நீதி மன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.  போபால் விசவாய்வு கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்திருக்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தை உலுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இவ்உத்தரவு எல்லா பத்திரிக்கையிலும் முக்கிய செய்தியாக வந்திருக்கும் நேரத்தில் தினமலரில் இது குறித்து வெளிவந்த செய்தியில் முழு சாராம்சமும் இடம்பெறவில்லை. இது போல் மக்கள் போராட்டங்களையும், தமிழர் போராட்டங்களையும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் போராட்டங்களை தினமலம் திட்ட மிட்டு மறைத்தே வந்துள்ளது

இந்திய வரலாறு கூடங்குளம் போன்று ஒரு நீண்ட நெடிய  மக்கள் போராட்டத்தை கண்டதில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

பாப்புலர் ஃப்ரண்டின் சர்வ சிக்ஸா கிராமம்


சென்னை: முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், முன்னேற்றத்திற்காகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆற்றி வரும் பணிகளில் "சர்வ சிக்ஸா கிராம்" என்ற மாபெரும் சேவையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அக்கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும்.




தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேளங்காடு பகுதியிலுள்ள மஹ்மூத்பூர் மற்றும் தீன் நகர் ஆகிய இருகிராமங்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடந்த 21.09.2012 அன்று அலுவ‌லகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



















சிரியாவில் இரத்தக் களரி: ஒரே நாளில் 305 பேர் படுகொலை!

305 killed in bloodiest day of Syrian conflict
டமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்று முன்தினம்(புதன் கிழமை) மட்டும் 305 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதில் சாதாரண அப்பாவி மக்கள் 199 பேர் அடங்குவர். பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் அதிகம் பேர் இப்பொழுதுதான் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
டமாஸ்கஸில் ராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் நிகழ்ந்த மோதலில் ஐந்து அரசு எதிர்ப்பாளர்களும் கொல்லப்பட்டனர். புதன் கிழமை கொலைச் செய்யப்பட்டவர்களில் 199 பேர் சாதாரண மக்கள் என்று கண்காணிப்புக்குழு இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் எ.எஃப்.பிக்கு தெரிவித்துள்ளார். பெயர் விபரங்கள் தெரிந்த இறந்த உடல்கள் மட்டுமே 305 என்றும், அடையாளம் தெரியாத உடல்களையும் சேர்த்தால் மரண எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று அப்துல்றஹ்மான் கூறினார்.
சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் இவ்வளவு அதிகமானபேர் கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும். பஷாருக்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அதனிடையே, சிரியாவில் இருந்து புலன்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இவ்வருடத்தில் ஏழு லட்சமாகும் என்று ஐ.நா அகதிகள் ஏஜன்சி கூறியுள்ளது. தற்போது 3 லட்சம் பேர் சிரியாவை விட்டு வெளியேறியதாக முன்னர் ஐ.நா ஏஜன்சி தெரிவித்திருந்தது. புலன்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் தங்கியுள்ளனர்

மேற்கத்தியர்கள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குகின்றனர்- அஹ்மத் நஜாத்!

Amadinejad
ஐ.நா:மேற்கத்திய நாடுகள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார். ஆயுதக் கடத்தல், பேரழிவு ஆயுதங்களின் பீதி ஆகியவற்றை பரப்புரைச் செய்வதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய பணி என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்துகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளை ஒரு பிடி பிடித்தார் நஜாத். நேற்று முன்தினம்(புதன் கிழமை) ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய முக்கிய நபர்களில் நஜாதும் ஒருவர் ஆவார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நஜாத் கூறியது: “15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஐ.நாவின் அதிகாரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. எல்லா உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் சம உரிமை வேண்டும். சில நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரபட்சமான அதிகாரங்கள் தாம் உலகில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம். பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இரண்டு நாடுகள் அவர்களின் விருப்பத்தை பிற நாடுகளின் மீது திணிக்கின்றனர். உலகில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளின் பின்னணியிலும் ஒரு பகுதியில் இவ்விரண்டு நாடுகளும் உள்ளன. ஆகையால் பாதுகாப்பு கவுன்சிலால் அதன் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை என்று நஜாத் கூறினார்.
பொது அவையில் அஹ்மத் நஜாதின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை என்ன விலைக்கொடுத்தேனும் தடுப்போம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் ஆற்றிய உரையில் ஒபாமா தெரிவித்திருந்தார். அதேவேளையில் சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்பதாக எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸி கூறினார்

அணு உலைக்கு எதிர்ப்பு: ஒரு லட்சம் பேர் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம்!

Assembly Building
கூடங்குளம்:கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, அக்டோபர் 29-ம் தேதி தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாக, அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், இந்தப் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப் போராட்டம் தமிழக மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இதுபற்றி இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனவே, அணு உலைக்கெதிரான போராட்டத்தை தமிழக மக்களின் கோரிக்கைப் போராட்டமாக மாற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையின் வைர விழா அக்டோபர் 29-ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் அணுஉலையை மூட வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும். இதில், அணுஉலைக்கெதிரான அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் இக் கூட்டத்தில் நஸ்ருத்தீன் (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா),  வேல்முருகன் (தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்),நெல்லை முபாரக் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா),  ரவிக்குமார் (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), வன்னியஅரசு (விடுதலைச் சிறுத்தைகள்), வியனரசு (பாமக), ஷெரீஃப் (மக்கள் ஜனநாயகக் கட்சி), திருப்பூர் சக்திவேல் (மனிதநேய பாசறை), சண்முகசுந்தரம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), அரங்ககுணசேகர் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), மிசா பாண்டியன் (மார்க்சிஸ்ட் லெனின் மக்கள் விடுதலை இயக்கம்), மகேஷ் (காந்தி மக்கள் மன்றம்), துரை சம்பத் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கிறிஸ்டினா (பெண்கள் முன்னணி), அருணா (மகளிர் அயம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கண்டனப் பேரணியை தொடர்ந்து அமெரிக்க மையம் மூடல்!

Protests against anti-Islam film at US Consulate in Kolkata
கொல்கத்தா:இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தால் கொந்தளித்த முஸ்லிம்கள் உலக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே.வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தை நோக்கி முஸ்லிம்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அமெரிக்க மையம் மூடப்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை வெளியானதற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஆல் பெங்கால் மைனாரிட்டீஸ் யூத் ஃபெடரேசனின் தலைமையில் அமெரிக்க மையத்தில் நுழைய மக்கள் முயன்றனர். போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்தனர். ஆனால், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல் இல்லை

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர்: வழக்கை மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!

Sohrabuddin fake encounter-SC shifts case to Mumbai
புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயின் போலி என்கவுண்டர் கொலை வழக்கின் விசாரணையை அம்மாநிலத்தில் இருந்து மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரும் சி.பி.ஐயின் மனு தள்ளுபடிச்செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அம்மாநிலத்திற்கு செல்லவும், அங்கு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் தடையில்லை என்று நீதிபதிகளான அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொஹ்ரபுத்தீன் ஷேக்கும், அவரது மனைவி கெளஸர்பீயும் குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மாநிலம் காந்தி நகருக்கு அருகே வைத்து போலி என்கவுண்டர் நாடகம் மூலம் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு அமித் ஷாவை சி.பி.ஐ கைது செய்தது. அமித் ஷா தான் போலி என்கவுண்டர் நாடகத்தின் முக்கிய சூத்திரதாரி என்பதை சி.பி.ஐ கண்டறிந்தது.
அமித் ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும், சாட்சிகளை மிரட்டும் வாய்ப்பு இருப்பதால் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட அமித் ஷா, குஜராத்தில் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துளசி பிரஜாபதியை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கிலும் அமித்ஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக்கை கொலைச்செய்த அதே போலீஸ் கும்பல் துளசி பிரஜாபதியையும் கொலைச் செய்தது

அதிரையில் திடீரென ஏற்பட்ட சூறை காற்றுடன் சாரல் மழை!

கடந்த சில வாரங்களாக அதிரையை வெயில் வாட்டி வதைத்து வந்தது.வெயில் வாட்டி  வதைப்பது ஒருபுறம் இருந்தாலும், மின் தடையும் அதிகமாக இருந்து வந்தது.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.


நேற்று மாலை 5.50 மணியளவில் அதிரையில் சூறை காற்று வீசியதால்   நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருந்தாலும் இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று அதிரையில் மூன்று மணி நேரம் மட்டுமே மின் தடை இருந்தது.......!
எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் மாலை 5 மணிக்கே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். (இடம் : பட்டுகோட்டை செல்லும் சாலை )
புகைப்படங்கள் : M.I.அப்துல் வஹாப்.

Thursday, September 27, 2012

அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவிலான பிரச்சாரம்!

PFI
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை அதன் தேசிய செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
அரசு மற்றும் போலீஸ்-உளவுத்துறை ஏஜன்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவாத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் சில சுயநலவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதன் விளைவாகவே அவர்கள் இவ்வியக்கத்திற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இத்தகையதொரு சூழலில் “Why Popular Front?” (பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?) என்ற தலைப்பில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர்10-ஆம் தேதி வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரச்சாரத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆற்றி வரும் பணிகள், பாப்புலர் ஃப்ர்ண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி ஆகியன குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கூடங்குளம் பிரச்சனை குறித்து மிகுந்த கவலையை தேசிய செயற்குழு வெளியிட்டது. மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறு தேசிய செயற்குழு அரசை வலியுறுத்தியது.
அஸ்ஸாம் அகதிகள் தங்கள் வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மற்றும் பணிகளில் தவறிழைத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பிற்கும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் அந்நிய நேரடி முதலீட்டை(FDI) மத்திய அரசு மறு பரிசீலனைச் செய்யவேண்டும்.
தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூடங்குளம் போராட்டத்தை நசுக்க தொடரும் மின்வெட்டு!


Sep 27: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் மணலுக்குள் தங்களை புதைத்து கொண்டு புதுவிதமான போராட்டத்தை நடத்தினர்.

இடிந்தகரையில் சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் இடிந்தகரை கடற்கரைக்கு சென்று தானும்  மணலுக்குள் உடலை புதைத்தபடி, மக்கள் போராட்டத்தில் பங்கேற்றார். அதில் உதயகுமா
ர், புஷ்பராயன் உள்ளிட்ட தலைவர்களும் மண்ணில் புதைந்து தாங்கள் மக்கள் தலைவர்கள் என்பதை நிருபித்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகள் தொடர் மின்வெட்டு க்கு ஆளாகி வருகின்றது. தென்மாட்டங்களின் கடலோர கிராமங்களான தூத்துக்குடி பீச்ரோடு, மாதாகோவில், திரேஸ்புறம், பழையகாயல், புன்னகையால், காயல்பட்டினம், திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கூடுதலை, கூட்டபனை, இடிந்தகரை, போன்ற கிராமங்களின் மீனவர்கள் மீன் பிடித் தொழிலையே ஜீவாதாரமாக கொண்டுள்ளனர்.
 

இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள்,  நாட்டுப்பட்குகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை பதப்படுத்தி சந்தைகளுக்கு கொண்டு சொல்லவும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் ஜஸ்கட்டிகள் தேவைப்படுகின்றது.  இதற்காக அப்பகுதிகளில் ஜஸ்கம்பெனி பிளாண்டகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய அறிவிக்கப்படாத மின் வெட்டு காரனமாக ஜஸ் பிளாண்ட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இந்த தொழிலையே நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு தினமும் 70 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது அதோடு கடலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவகுடும்பங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்ட தோடு மீன் சந்தையில் பணப்புழக்கம் கடுமையாகச் சரிந்து உள்ளது. கூடங்குளம் போராட்டத்தை வலுவிழக்க செய்ய தென்மாட்டங்களில் தொடர் மின்வெட்டு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதற்க்கு முன்னாள் தடையின்றி கிடைத்த மின்சாரங்கள் இப்பொழுது எங்கே போனது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானது. அதை அண்டை மாநிலங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரியிறைத்து விட்டு மக்கள் போராட்டத்தை நசுக்க பல்வேறு கேவலமான உக்திகளை கையாண்டு வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.
புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என குற்றம் சாட்டி அஷ்ரஃப் கான், பாபு முன்னி கான் ஆகியோரை கைது செய்த போலீஸ், தீவிரவாத குற்றம் சுமத்தி மேலும் பலரை கைது செய்தது. 2002 ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது:  சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம் என்று ஒரு அப்பாவிக்கும் தோன்றக் கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும்.
இதனை கூறுகையில் நீதிபதிகள் ஷாரூக்கான் நடித்த ’மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற வசனத்தை சுட்டிக்காட்டினர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த கோரும் குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் எதிரிகளும் இதனால் பலன் அடைந்தனர். இதன் மூலம் இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிச் செய்யவேண்டும். தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கது. ஆனால், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு: கர்நாடகா அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Madani bail plea- HC notice to State govt
பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீரழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் அக்ரஹார சிறை சூப்பிரண்டிற்கு நீதிபதி ஹெச்.என்.நாக மோகன்தாஸ் உத்தரவிட்டார். அக்டோபர் 3-ஆம் தேதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி கைதுச் செய்யப்பட்ட அப்துல் நாஸர் மஃதனி கர்நாடகா மாநிலம் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்துல் நாஸர் மஃதனி தனது ஜாமீன் மனுவில் கூறியிருப்பது: “நீரழிவு நோயாளியான நான் சக்கர நாற்காலியில் நடமாடுகிறேன். எனக்கு ஒரு கால் முறித்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கண் பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் என்னை பாதித்துள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேற்கூறப்பட்ட நோய்களுக்கு முறையான சிகிட்சை வழங்கப்படவில்லை. வலது கண்ணின் பார்வை இழந்துவிட்டது. இடது கண்ணிற்கு 30 சதவீத மட்டுமே பார்வை சக்தி உள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி அவசர அவசரமாக எனது கண்ணுக்கு லேசர் சிகிட்சை அளிக்கப்பட்டது. விசாரணை நீளுவது எனது குற்றமல்ல. ஆகையால் சிறப்பு மருத்துவமனையில் சிகிட்சை மேற்கொள்ள ஜாமீன் அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கூறியுள்ளார்.

அமெரிக்கா அணுகுமுறையை மாற்றினால் உறவு மேம்படும் – அஹ்மத் நஜாத்!

Ahmadinejad
வாஷிங்டன்:அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். ஈரான் தனது சொந்த காலில் நிற்கும் தேசம் என்பதை அமெரிக்க தூதர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொது அவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள அஹ்மத் நஜாத், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அப்போது அவர்; “இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படவேண்டுமென்றால் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டும். அணுசக்தி தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முன்வர வேண்டும். நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். எனில் இரு நாடுகள் இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் அணுகுமுறை, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்ற அந்நாட்டின் கூற்றுக்கு முரணாக உள்ளது.” இவ்வாறு நஜாத் கூறினார்.

ஆசிரியர் திட்டியதால் லாரல் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை - பரபரப்பான தகவல்!!


பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று (26/09/2012 புதங்கிழமை) காலை வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமதூரில் உள்ள மாணவர்கள் பலர் லாரல் பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கற்பித்தல் முறைபலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் முஸ்லீம் மாணவர்களுக்கு வெள்ளிகிழமை ஜும்-ஆ தொழுக்கைக்கு கூட அனுமதிக்காத பள்ளியில் தான் நமதூர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது...

குறிப்பு:
நமதூரில் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இஸ்லாமிய சட்டங்கள் பற்றி அறியபடுத்தாமல் உலக படிப்பின் ஆசையில் மயங்கிவிட்டனர். நமது மார்கத்தில் தற்கொலை ஹராம் என்று உங்கள் குழந்தைக்கு தெறியுமா? அல்லது நீங்கள் தெறியபடுத்திவுள்ளீர்களா? அன்னிய பெண்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகள் படிக்கின்றதே அங்கு நம் மார்க்க சட்டம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது.... இதெல்லாம் உங்களுக்கு சொன்னால் தெரியாது....தெரிந்தாலும் புரியாது...... உங்கள் குழந்தை வளர்ப்பை பற்றி அல்லாஹ்விற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்............!

Wednesday, September 26, 2012

கூகிலில் கிடைக்கும் ராணுவ ரகசியங்களை வைத்திருந்த தீவிர(!)வாதி கைது!!


இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், நம்நாட்டு சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரிலும், நிரூபணமில்லாத குற்றவாளிகளாகவும், நீதி மன்ற விசாரணைக் கைதிகளாகவும் அதிகமான சதவீதம் பேர் இருந்து வருகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களின் அவலக் காட்சிகள் மாறுவதாக இல்லை.
கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புறந்தள்ளப்பட்டுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரப் போக்கிடமாக வளைகுடா மற்றும் கீழைத்தேய நாடுகளுமே இருந்து வருகின்றன. செலவு குறைந்த வணிகம் செய்யும் நாடுகளாக இலங்கையும் பர்மாவும் உள்ளன. பல்லாண்டுகளாகத் தமிழகத்துடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதால் இவ்விரண்டு நாடுகளில் தமிழக முஸ்லிம் வணிகர்களுக்கு ஆர்வமுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான கொலைவெறியில் குஜராத்தையும் விஞ்சிய கொலைவெறி தேசமாக பர்மா மாறியபிறகு, இந்திய வணிகர்களின் ஒரே அண்மைய வர்த்தக தளமாக இலங்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கை வழியாகப் பாகிஸ்தானுக்குக் கடத்த முயன்றதாக நாட்டின் அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியொன்றைப் பரபரப்பாக வெளியிட்டிருந்தன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. வழக்கமாக சந்தேகத்தின் பேரில் கைதாகும் முஸ்லிம்கள் வெடிகுண்டு அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பெயரில்தான் கைது செய்யப் படுவர். ஆனால் தற்போது கைதாகியுள்ள தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது பிடிபட்டதாகப் புதிய கதை வசனம் எழுதப்பட்டுள்ளது.

அப்பாவி முஸ்லிம்களை, திட்டமிட்டுத் தீவிரவாதிளாக உருவகிக்கும் உளவுத்துறையைப் பற்றி ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் விரிவாக எழுதியிருப்பதை வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்லப்படும் இந்திய ராணுவ ரகசியங்கள், கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. மேலும் குறுந்தகடுகள், பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு ஆகிய 'பயங்கர ஆயுத'ங்களையும் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. பட்டிதொட்டியெல்லாம் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு இந்தப் பயங்கர ஆயுதங்கள் குப்பனிடமும் சுப்பனிடமும்கூட உள்ளதை அறியாத நமது உளவுப்பிரிவு போலிஸாரின் தொழில்நுட்ப அறிவு கேலிக்குரியதாகிறது.

29-09-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள செய்தியின்படி, தஞ்சாவூரில் ஏற்றுமதி வியாபாரத்திற்கான அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ள தமீம் அன்சாரியைக் கட்டிட உரிமையாளர் ஒப்பந்தக்காலத்திற்கும் முன்பே காலிசெய்யச் சொல்லியுள்ளார். வர்த்தகத்திலிருந்து வரவேண்டிய தொகைகள் வசூலாக வேண்டிய நிலையில் அந்த இடத்தைக் காலிசெய்வது மேலும் இழப்பு ஏற்படுத்தும் என்பதாலும், ஒப்பந்தக்காலம் முடிவடையாததாலும் விரைவில் காலிசெய்வதாகக் கூறியுள்ள நிலையில், ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றதாக பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதில் கட்டிட உரிமையாளரின் கைங்கர்யமும் இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ ரகசியங்களில் ஊட்டியிலுள்ள வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி முகாம் புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விபரமாகச் சொல்லவேண்டுமெனில், ராணுவப் பயிற்சி முகாம் நடக்கும் வெலிங்டன் கட்டடத்தைத் தம் காருக்குள் இருந்து தமீம் அன்சாரி எடுத்ததாகக் குப்பைச்சாட்டை க்யூ ப்ராஞ்ச் போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். இந்த ராணுவ முகாமில்தான் சிலமாதங்களுக்குமுன் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதும், தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் வேறுமாநிலத்திற்கு அனுப்பப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது மத்திய அரசே இலங்கை ராணுவ வீரர்களைப் பயிற்சிக்கு அழைத்தபோது எடுக்கமுடியாத ராணுவ ரகசிய புகைப்படங்களை தமீம் அன்சாரி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அமர்ந்து எடுத்திருக்கிறார் என்பதும், அதை சிடி, மெமரிகார்டில் வைத்திருந்தார் என்பதும் இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாகும். இவற்றின் அடைப்படையில்தான் திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (FIR 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). க்யூ ப்ராஞ்ச் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி தமீம் அன்சாரி மீதான குற்றங்கள்:
1. மதவிரோதம்
2. சொந்த லாபம்
3. இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சி
4. தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கம்

உலக வரைபடத்தை இணையத்தில் காணும் கூகில் எர்த் (Goolge Earth) மற்றும் கூகில் மேப் (Goolge Map) ஆகியவவை மூலம் எவரும் உலகின் எந்தப்பகுதியை வேண்டுமானாலும் துல்லியமாகக் காண்பதோடு அவைகுறித்த மேலதிக தகவல்களை கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கான சுட்டிகளும் படங்களும் கிடைக்கின்றன. கூகில் எர்த் இலவச மென்பொருள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தபோது அப்போதைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி, "கூகிலின் வரைபடங்கள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்றார். ஆக, கூகில் வெளியிட்ட ராணுவ ரகசியங்களை ஒருவர் குறுந்தகடுகளில் பதிவு செய்து கடத்த முயன்றார் என்பது கேலிக்குரியதும், கணினி மற்றும் இணைய நுட்ப அறிவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இந்தியர்களை அவமதிக்கும் செயலுமாகும்.

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வருவதற்கும், அவ்வாறே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் திருச்சி-இலங்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர்.அவர்களால் கொண்டுசெல்ல முடியாதவற்றைப் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு உள்நாட்டில் விவசாய உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் ஒருவரை ராணுவ ரகசியங்களைக் கடத்தியதாக கைது செய்திருப்பது 'நிலக்கரி ஊழல், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு மற்றும் கூடங்குளம் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் யுக்தியே' என்று நாம் சொல்வோமெனில் அதற்கான அடிப்படை உள்ளது. ஏனெனில், இலங்கை வியாபாரியிடமிருந்து தமக்கு வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்ற தமீம் அன்சாரியைக் கைது செய்தபோது க்யூ ப்ராஞ்ச் கதைவிட்ட 'பயங்கர ஆதாரங்கள்' அவரிடமிருந்து கைப்பற்றப்படவில்லை. மாறாக, அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்ட ரவி எனும் அதிகாரி பறிமுதல் செய்த தமீம் அன்சாரியின் லேப் ட்டாப்பில்தான் கூகுள் மேப்புகள் இருந்தன. இதை, பேரா. அ. மார்க்ஸின் தலைமையில் விசாரித்த உண்மை அறியும் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதோடு, க்யூ ப்ராஞ்ச் ஜோடித்த வழக்கைக் கேலி செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி, தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்பிலும் எக்காலத்திலும் பங்கு வகிக்காதவர். அவரது பங்களிப்பெல்லாம் இந்திய மாணவர்கள் அமைப்பு, இலக்கிய மன்றங்கள், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியவற்றில் மட்டுமே அடக்கம். இவ்வாறு பொதுவிசயங்களிலும், உள்நாட்டு வணிகத்திலும் ஈடுபட்டுள்ள ஒருவர் கூகிலில் கொட்டிக் கிடக்கும் புகைப்படங்களை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தி, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றப் போகிறாராம் தமீம் அன்சாரி. இதுவே ஒரு கேவலமென்றால், இந்தக் கதையை நாள்தோறும் பல்வேறு வசனங்களோடு வெளியிடும் ஒளி மற்றும் அச்சு ஊடகங்களின் போக்கு, படு கேவலம்.

தமீம் அன்சாரி மீது புனையப்பட்டிருக்கும் வழக்கு, சிபிசிஐடி மூலம் முறையான விசாரணை நடத்தப்பட்டு அநியாய வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளவருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதோடு, பொய்வழக்குப் புனைந்தவர்களுக்கு எதிராகக் கடும் சட்டநடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்திய சட்டத்தை நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அதிரையிலிருந்து தோழர் எழில்
தோழர் வினவின் பதிவு : http://www.vinavu.com/2012/09/25/tamim-ansari/