Saturday, November 12, 2011

ஈராக்கிலிருந்து பாலியல் நோக்கத்திற்காக கடத்தப்பட்ட 4.000 முஸ்லிம் சகோதரிகள்



ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இவ் ஆய்வறிக்கையின் படி 2003 ஆம் ஆண்டின் பின்னர் அதாவது அமெரிக்க படையினர் ஈராக்கில் நுழைந்ததன் பின்னர் இதுவரை சுமார் 4000 பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களில் அநேகர் அண்டைய மத்தியகிழக்கு நாடுகளான சிரியா, ஜோர்தானுக்கும், மேலும் பலர் சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களே இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், சில பெண்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. 

0 comments:

Post a Comment