Thursday, June 30, 2011

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இஸ்லாத்தின் தூய்மை


லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார்.

ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’ என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.
‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.

‘இதென்ன வேடிக்கை! எனது ஆடையை நானே சுத்தம் செய்கிறேன் என்றால் எதற்காக உங்களிடம் அதை நான் தரவேண்டும்? உண்மையில் நான் உடுத்திய ஆடையை துவைக்காமல் அப்படியே தான் உங்களிடம் தருகிறேன்’ என்று எதார்த்த நிலையை அப்பெண்ணிடம் சொன்னார் மாணவர்.

இந்த பதில் அந்த ஆங்கிலப் பணிப்பெண்ணை வியப்பின் உச்சிக்கே இழுத்துச்சென்றது. ‘உண்மை நிலை நீங்கள் சொல்வது எனில் மற்ற மாணவர்களுடைய உள்ளாடையில் நான் காணும்; ஒருவித கறையும், துர்வாடையும் உங்களது ஆடையில் மட்டும் காண முடிவதில்லையே! ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
அந்த மாணவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சொன்னார், ‘சகோதரியே! நான் ஒரு முஸ்லிம். எனது மார்க்கம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்னை பணிக்கின்றது. எனது ஆடையில் ஒரு துளி சிறுநீர் பட்டுவிட்டாலும் கூட அதை உடனே கழுகி சுத்தம் செய்யாத நிலையில் என் இறைவனை நான் வணங்க முடியாது. எனது ஆடையில் துர்வாடையோ, அசுத்தமோ காணப்படாமல், உடுத்தி களைந்த ஆடைகூட துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைபோல் சுத்தமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!’ என்று விளக்கமளித்தார்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் அப்பெண், ‘இஸ்லாம் இவ்வளவு சிறிய விஷயத்தில் கூட கற்றுத்தருகிறதா?’ என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்.

அப்பணிப்பெண்ணுக்கு அவ்வாலிபரின் பேச்சு பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பியது. இதன்பின் அந்த ஆங்கிலப்பெண், அந்த முஸ்லிம் மாணவரின் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவ்வாலிபரின் எளிமை, தூய்மை, பத்தினித்தனம், கலாச்சாரம், வீணான பேச்சுக்களைவிட்டும் ஒதுங்கியிருக்கும் பண்பு இவையணைத்தும் அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் ஒளி குடியேறக் காரணமாயிற்று.படிப்படியாக அவ்வாலிபரிடம் இஸ்லாத்தைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். இதனால் அப்பெண்ணின் உள்ளத்தில் உண்மையான ஈமானிய ஒளிக்கதிர் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.

இறுதியில் தனது குடும்ப அங்கத்தினர் பலருடன் இஸ்லாத்தின் அரவணைப்பில் வந்துவிட்டடார். (ஆதாரம்: ‘அத்தளாமுனில் இஸ்லாமி’ எனும் அரபி நாளேடு)

வரலாறு புகட்டும் பாடம்


islamic warrior

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.
இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.
“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.
இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.
வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.
சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.
சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.
இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.
கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!


ஜூன் 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது. 

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை . இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள். 

இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர் . இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள். 

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஐ.எம்.எப்., தலைவராக லகார்டு தேர்வு


வாஷிங்டனில் உள்ள, சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) முதல் பெண் தலைவராக, பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 5ம் தேதி பதவியேற்கும் லகார்ட், ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ் கான், நியூயார்க்கில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால், பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவருக்கான தேர்தலில், பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்டுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஐ.எம்.எப்., தலைவராக, 55 வயதான கிறிஸ்டைன் லகார்ட், அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். ஐ.எம்.எப்., அமைப்பின் டேவிட் ஹாவ்லி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். "என் மீது நம்பிக்கை வைத்து, ஐ.எம்.எப்., தலைவராக உறுப்பு நாடுகள் தேர்வு செய்திருப்பதில் சந்தோஷம் அடைகிறேன்' என, லகார்ட் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் நிக்லோஸ் சர்கோசி, "லகார்ட்டுவின் வெற்றி, பிரான்சுக்கு கிடைத்த வெற்றி' என கூறியுள்ளார். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் டிமோதி கெய்த்னர், "உலகமே பொருளாதார சிக்கலில் சிக்குண்டு இருக்கும் போது, லகார்ட்டுவின் தனித்துவம் வாய்ந்த அறிவு மற்றும் அனுபவம் சிறந்த நிர்வாகியாக செயல்பட உதவும்' என்றார். ஐ.எம்.எப்., தலைவராக தேர்வான லகார்ட், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "பொருளாதார சிக்கலில் இருந்து மீள, கிரீஸ் நாடு உடனடியாக சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு அனுமதி அளித்தால், முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கானை சந்திக்க விரும்புகிறேன். ஐ.எம்.எப்., மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றி ஸ்ட்ராஸ் கான் என்ன கூறுகிறார் என, தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்றார். பிரான்ஸ் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும் முன், அந்நாட்டின் வர்த்தக அமைச்சராக இரண்டு ஆண்டுகள் லகார்ட் பதவி வகித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன், நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் சம்பளம் பெறும் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமும் உண்டு.

ஐ.எம்.எப்.,பின் பணி

* சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு உதவுவது.
* நாடுகளின் கரன்சி பரிவர்த்தனை மதிப்புகளை கண்காணிப்பது.
* கடன் பெற்ற நாடுகள் திரும்ப செலுத்துகின்றனவா என்பதை கண்காணிப்பது.
* உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது.

குப்பை மலை (வீடியோ இணைப்பு)



150,000 m3 கண அளவிற்கு 25 மீற்றல் உயரத்தில் 200 மீற்றர் நீளத்திற்கு குப்பைக் கழிவுகளால் ஒரு மலையைக் கற்பனை செய்து பாருங்கள். கற்பனை என்னநேரிலேயே நீங்கள் பார்க்கலாம். என்ன மூக்கைப் பொத்திக் கொண்டு கண்களால் மட்டும் தான் பார்க்க வேண்டும்.
 Val-de-Marne இலுள்ள Limeil-Brévannes எனும் நகரத்திலேயே சிறிது சிறதாகச் சேர்ந்து இன்று மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை செப்டெம்பர் மாதம் முதல் மேற்கொள்ளவிருப்பதாக பிரான்சின சுற்றுப் புறச் சூழல் அமைச்சர்Nathalie Kosciusko-Morizet தெரிவித்துள்ளார். 
எனினும் இதனை அகற்றுவதற்குஇத்துறை சம்பந்தமான நிறுவனங்கள் குறைந்தது 10 மில்லியன் யூரோக்கள் செலவாகுமென விண்ணப்பித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தள்ளார். இதற்குத் தேவைப்படும் காலம் பற்றிய விபரங்களைத் தரவில்லை.
முதலில் கடும் வெயில் காலத்தில் தீப்பிடிக்காமல் இருக்க இப்போது அன்றாடம்  பாரிய கருவிகள் மூலம் நீர் பாய்ச்சி குப்பை மலை குளிர்விக்கப்படுகின்றது. இந்தக் குளிர்விக்கப்பட்ட குப்பையையே அதற்குரிய இயந்திரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றமுடியும். குளிர்விக்காத குப்பையை அகற்றுவது மேலும் சூழலை மாசடையச் செய்யும்.
இருப்பினும் நெடுங்காலமாக தேங்கிநிற்கும் குப்பைகளுக்குள் மெதேன் வாயு பெருமளவில் உற்பத்தியாகியிருக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனால் சிறிது சிறிதாக அகற்றப்படும் குப்பைகளும் மீண்டும் மீண்டும் குளிர்விக்க வைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் அதியுச்சத் திறனாக 2000 m3 குப்பைகளை மட்டுமே குளிர்வித்து வகை பிரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மொத்தமாக150,000 m3 குப்பைகள் அகற்றப்பட வேண்டும்.

Wednesday, June 29, 2011

மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - வன்மையாக கண்டிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்


பெங்களூர்: சமீபத்தில் கர்நாடகா மாநில பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. ஹுன்சூரில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி கே.எஃப்.டி இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் அந்த இயக்கத்திற்காக வசூல் செய்யும் போது இந்த கொலை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியது.


 இந்த கொலை சம்ப்வம் நிகழ்ந்தவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இந்த கொலையை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும், இந்த குற்றத்தை செய்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொண்டது. இந்த குற்றச்செயலுக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால் மீடியாக்கள் அனைத்தும் கொலை செய்த குற்றவாளி கே.எஃப்.டி. இயக்கத்திற்காக வசூல் செய்யும் போது தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டே கே.எஃப்.டி. இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தோடு இணைந்துவிட்டது. கே.எஃப்.டி என்ற பெயரில் இன்றைக்கு கர்நாடகாவில் எந்த இயக்கமும் செயல்படவில்லை.

இருந்த போதிலும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு பொருளாதாரம் தனது உறுப்பினர்கள் மாதந்தோறும் கொடுக்கும் சந்தா பணமும், பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடைகள் மூலமாகவே கிடைக்கிறது.  இன்று பாப்புலர் ஃபரண்ட் மகத்தான் பல பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. 

இளைஞர்களை ஒன்று திரட்டி, போதை பொருளுக்கு எதிராகவும், சூதாட்டத்திற்கு எதிராகவும், கிரிமினல் குற்றத்திற்கு எதிராகவும் போராடி வருகிறது. மேலும் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் என்றைக்கும் வலிமையான மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் சமூகத்தை வலிமை அடையச்செய்யவேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது.

இலியால் முஹம்மது 
(மாநில தலைவர்)
பாப்புலர் ஃப்ரண்ட், கர்நாடகம்

மாணவியை கெடுத்த பொருக்கி இன்ஸ்பெக்ட்டர் தப்பி ஓட்டம்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா. 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார். 

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.  பெற்றோரின் பண ஆசையால் செக்ஸ் சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார்.  200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது. 

இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர். 

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 

அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். 

ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

Tuesday, June 28, 2011

அவன்-இவன்!. எவன் இந்த பாலா?



சமீபத்தில் பாலா என்ற இயக்குனன் மரியாதை இல்லா தலைப்பில் “அவன் இவன்” என்று ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளான்!. அதில் வழக்கம் போல, சினிமா கூட்டம் முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பது போல, தானும் தன் பங்கிற்கும் இதில் சீண்டிப் பார்த்துள்ளான். இதில் வரும் ஒரு காட்சியில், வியாபாரிகள் அடிமாட்டை வாங்கி, விற்பனை செய்ய அடைத்து வைத்திருக்கின்றார். இவ்வாறு மாடுகள் கறிக்காகவும், வியாபாரத் திற்காகவும் வாங்கி விற்பனை செய்வதை கண்டு, மிருகங்களின் மேல் அக்கறை கொண்ட, படத்தில் தன் மர்மஸ்தானத்தை அம்மணமாக திரையில் காண்பிக்கும் சமஸ்தான ஜமீன்(!) ஹைனஸ், பொங்கி எழுந்து புளூ கிராசிற்கு தகவல் தெரிவிக்கின்றார்.
இதனால் ஆத்திரமடையும் அந்த வியாபாரி,

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.

முஸ்லிம்கள், ஹஜ்ஜுப்பெருநாள் அன்று கொடுக்கும், மார்க்க கடமையான குர்பானியை வம்பிற்கு இழுக்கும் காட்சியை வேண்டும் என்றே வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல், இக்காட்சியை காணும் மக்கள் முஸ்லிம்களின் மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாய் இந்த காட்சியை அமைத்துள்ளான்!.

சரி…..!. அவன் பங்கிற்கு நம்மை வம்பிற்கு இழுத்து விட்டதினால், இனி நாமும் இவனை நம் விருப்பப்படி தோழுரிப்போம்!. மிருகங்களை அறுப்பது கூடாது என்றால், அதே படத்தில் இந்த ஜமீன், வெள்ளைக்காரனோடு காட்டுக்குள் துப்பாக்கி சகிதம் வேட்டையாட செல்லும் காட்சியை ஏன் நீ வைத்தாய்?. மிருகவேட்டை என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?. மிருகவேட்டை உனக்கு மிருகவதையாக தெரியவில்லையா?. அவ்வாறு வேட்டைக்கு செல்பவர்களை தடுக்கும் வன அதிகாரியை அடித்து உதைக்கும் காட்சியையும் வைத்து கேவலப்படுதியது ஏன்?.

பின் வேறொரு காட்சியில், மிருகவதைக்கான புளுகிராஸ்ஸை துணைக்கு அழைக்கும் இந்த ஜமீன், அருவிக்கரையில் அமர்ந்து, கோழியின் சப்பைக்கறியை (Leg piece) ருசித்து, ருசித்து உண்ணுவது போன்ற காட்சியை வைத்து, தனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று, தனக்கு மிருகங்களின் மேல உள்ள இரட்டை நிலையை வெளிப்படுத்தியுள்ளான். மிருகத்தை வதை கூடாது எனும் இவன், இந்தப்படத்தின் இறுதியில் மாட்டு வியாபாரியை உயிரோடு வைத்து கொழுத்தும் காட்சி, எந்த வதையில் சேரும் என்று இந்த கூறுகெட்ட பாலா விளக்கம் தருவானா?.

தற்போதுள்ள மிருகவதை சட்டத்தின் படி, சினிமாவில் மிருகங்களை காட்ட வேண்டும் என்றால், அந்த மிருகத்திற்கு மருத்துவ சான்று வேண்டும். ஆனால் இதில் காட்டப்படும் அத்தனை மாட்டிற்கும் அவ்வாறு சான்று வாங்கப்பட்டதா?. இல்லை என்றால் உடனே இந்த பாலாவை மிருகவதை சட்டத்தின் படி கைது செய்து உள்ளே தள்ளவேண்டும்!.

அதுமட்டுமல்ல, படம் முழுவதும், போலிஸ் மற்றும் ஜட்ஜை கேவலப்படுத்தி இவர்களை கையாலாகாதவர்களை போல் காட்டி, தன் அறிப்பையும் தீர்த்துள்ளான். இந்தப்படத்தில் காவல்துறையை கேவலப்படுதியது போல வேறு எந்தப்படதிலும் இருக்குமா என்பது சந்தேகமே!. இவ்வாறு பல இடங்களில் அரசாங்க துறைகளை, அதிகாரிகளை கேவலப்படுத்திய இவனுக்கு, மத்திய-மாநில அரசுகள், “பல காட்சிகளில் எங்கே பாலாவை காணவில்லை என்று தேட வேண்டி இருந்தது!. திரைக்கதையில் அங்கங்கே சோர்வு இருப்பது சலிப்பு” என்று நக்கீரன் இதழ் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதி இருப்பதையும் கண்டுகொள்ளாமல், சிறந்த படத்திற்கான விருது வழங்கினாலும் வழங்கும் என்பது இன்னும் கேவலமான செயலாகும்!.

சினிமா என்பது ஒழுக்கங்கெட்டவர்களின் கூடாரம் என்பது நாம் எல்லாம் அறிந்ததே!. ஆனால் அதை எல்லாம் தாண்டும் விதமாக, இந்தப்படத்தில் பாலா என்பவன், ஆத்தாளையும்-மகனையும் பலபேர்களின் முன்னிலையில் குத்துப்பாட்டு ஆட வைத்து, தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைக் கேவலப்படுத்தியும் உள்ளான்!. அதுமட்டும் அல்ல!. அதே தாயை அவள் வரும் காட்சி முழுவதும், புகை பிடிப்பவளாகவும் காட்டி பெண் இனத்தையும் கேவலப்படுத்தி உள்ளான்!. மேலும் படம் ஆரம்பமானது முதல் இறுதிவரை ஒரே மது அருந்தும் காட்சிகள்!. புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் சினிமாவில் காட்டக்கூடாது என்ற ஆணையையும் மீறிய இந்த பாலாவை கைது செய்து உள்ளே தள்ளவேண்டும். ஏற்கனவே இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜமீன் ஒருவர் கோர்ட்டை அணுகியுள்ளார்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க யார் இந்த பாலா?. முஸ்லிம்களின் மார்க்க கடமையை இழிவுபடுத்தும் இக்காட்சியை, உடனே நீக்கவேண்டும்!. முதியவரை அம்மணமாகக் காட்டி பலான படம் எடுக்கும் பாலா முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!.

இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கங்களும் இதுவரை இவனின் இந்த குர்பானி அவமதிப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக நமக்குத் தகவல் இல்லை!.

வரலாற்று சிறப்புமிக்க ரஜப் மாதம்

    may 28  இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.    இம்மாதத்தில் நடைபெற்ற    பல்வேறு    சம்பவங்கள் இஸ்லாமிய     வரலாற்றில் பதிவு    செய்யப்பட்டுள்ளன.   போர் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு  மாதங்களில் ரஜப் மாதமும் அடங்கும்.நபி(ஸல்) அவர்களின்  மிஃராஜ்  பயணம்  இம்மாதத்தில் நடந்தேறியது. அல்லாஹ் கூறுகிறான்:-

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير

(அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன்.அவன் தன்னுடைய  அடியாரை கஃபத்துல்லாஹ் விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரகத்து செய்திருக்கின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றோம்.   நிச்சயமாக  அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.                                               (பனி இஸ்ராயீல் : 1) .

   நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு  அளித்துவந்த  அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் மற்றும் அவர்களின் அருமை மனைவியான கதீஜா(ரலி) ஆகியோரின் மறைவால் நபி(ஸல்) அவர்கள் துயருற்றிருந்தார்கள்.    குறைஷிகளிடமிருந்து வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.    இந்த காலகட்டத்தில் தான் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் விண்ணுலகிற்கு அழைத்துச்சென்று தன்னுடைய அத்தாட்சிகளை காண்பித்தான். நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னர் தலைமைப்பொறுப்பு பனி இஸ்ராயீல் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கஃபத்துல்லாஹ்விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு   அழைத்து சென்ற நிகழ்ச்சியானது தலைமைப்பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு அவர்களின் உம்மத்திற்கு கிடைக்கப்போகிறது என்பதை யூதர்களுக்கு உணர்த்தியது.  இஸ்ரா- வ- மிஃராஜ்  சம்பவத்திற்கு பின்னர்  நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியிலே முன்னேற்றம் ஏற்பட்டது. அவ்ஸ், கஸ்ரஜ் மக்களிடமிருந்து  நபி(ஸல்) அவர்களுக்கு அதன் துவக்கம் ஏற்பட்டது. அவர்களின் உதவியோடு மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.

   இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற போர்களிலே தபூக் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்காலத்தில் பெரும் வல்லரசாக ரோம் மற்றும் பாரசீகம் இருந்தது. இந்த போர் ரோமர்கள் மதினாவை நோக்கி படையெடுக்க ஆயத்தாமாகி வருகிற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு கிடைத்தபின் மேற்கொண்ட நடவடிக்கையாகும். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் தபூக் போர் நடைறெ இருந்த காலகட்டம் மிகக் கடுமையான கோடை காலமாக இருந்தது. முஸ்லிம்கள் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும் அது பேரீத்தம் பழங்களின் அறுவடைக் காலமாகவும் இருந்தது.  அதே போன்று   மதீனாவிலிருந்து  நீண்ட தூரம் பயணித்து  ஷாம் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது இஸ்லாமிய நிலப்பகுதிக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அரசிற்கு மாபெரும் பின்னடைவை தரும்  என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் இஸ்லாமிய வீரர்கள் தபூக் களத்தை நோக்கி அணிவகுத்தார்கள். ஆனால் ரோமர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அஞ்சி நடுங்கியவர்களாக இஸ்லாமிய இராணுவத்தை சந்திக்க துணிவின்றி சிதறி ஓடினார்கள். ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்களெல்லாம் இனி முஸ்லிம்களுக்கு தான் அடிபணிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தனர். இவ்வாறாக இஸ்லாமிய எல்லைப்பகுதி  நாளுக்கு நாள் விரிவடைந்து ரோமப்பகுதிக்கு  சென்றடைந்தது.

 ஐரோப்பிய  சிலுவைப்படையினரின்  ஆக்கிரமிப்பில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த முஸ்லிம்களின் முதல்  கிப்லாவான அல்குத்ஸ் (ஜெருசலேம்)  இம்மாதத்தில் தான் மீட்கப்பட்டது.  ஹிஜ்ரி 583 ரஜப் மாதத்தில்  மாவீரர் சலாஹுதீன் அய்யூபி( ரஹ்) அவர்களின் தலைமையில் அடைந்த இம்மாபெரும் வெற்றியானது ஐரோப்பியர்களை குலைநடுங்கவைத்தது. அதன் பிறகு அதனை எதிரிகளால் நெருங்க இயலவில்லை. முதல் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் பாலஸ்தீனை உஸ்மானியா கிலாஃபத்திலிருந்து  பிரிட்டன் ஆக்கிரமித்தது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யூபிக்காக அல்குத்ஸ் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

 இம்மாதத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வாக   ஹிஜ்ரி 1342  ,ரஜப்  28 (மார்ச் 3, கி. பி.1924 )   ல் முஸ்தபா கமால் பாஷா என்ற துரோகியின் மூலம்  கிலாஃபத் வீழ்த்தப்பட்டது. உலக முஸ்லிம்களின் தலைமையாகிய விளங்கிய  கிலாஃபத் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருந்தன. கிலாஃபத் வீழ்த்தப்பட்டதோடு உலக அளவில் முஸ்லிம்களுக்கு இருந்த தலைமை பறிபோனதால் இஸ்லாத்தின் எதிரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவர்களின் வெறுப்புணர்வை அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படையாகவே உமிழ்ந்தனர். இது குறித்து அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாஃபத்தை வீழ்த்திய பின்னர் 1924 ஜூன் 24ல் லாஸன்  மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு  முஸ்லிம்களின் மீதான  தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

"முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது.ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம் ".

நபி (ஸல்) அவர்கள் இந்த சிறப்பு மிக்க ரஜப் மாதத்தில் 12, 13, 14 ஆகிய தின்த்திலும் மெஹ்ராஜ் தினமான 27 ஆம் தினத்தில் நோன்பு நோற்றார்கள். 

சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஏ.முகமது ஜான் நியமனம்.


JUNE 28. ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்ததால், இதுவரை அந்த பொறுப்பை சுற்றுச்சூழல் அமைச்சர் டி.கே.எம் சின்னையா கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்!


JUNE 28, பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

இதற்காக மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரமின் மாவட்ட அமைப்பாளர் சகோ.அப்துல் லதீப் ,மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் குழு பல சிகிச்சைகளுக்கு அவசர ரத்த தான உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!


JUNE 29, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார். ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் இந்துக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எழுப்ப வேண்டுமே தவிர அரசுப் பணத்தில் அல்ல என்றார்.

ஒரு தனிமனிதர் தன்னளவில் மத நம்பிக்கையாளராக இருப்பதற்கும், ஆட்சியாளர் என்ற முறையில் மதச்சார் பற்றவராக இருப்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய கண்டிப்பான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். ஒர் ஆழ்ந்த மதநம்பிக்கையாளரான காந்திஜியிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகுந்த அர்த்தபாவமுடையது. இதற்கெல்லாம் சேர்த்துத்தான் அவரது உயிரைப் இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பலி கொண்டது.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று சட்டப்புத்தகத்தில் இருந்தாலும் அது பெரும்பான்மை மதமாகிய இந்து மதச்சார்பு அரசாகவே உள்ளது என்பதற்கு அதன் வேறு பல செயல்பாடுகளும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் பலவும், குறிப்பாகத் திறப்பு விழாக்கள் பலவும் இந்து சாஸ்திர, அதாவது பிராமணிய முறைப்படியே நடைபெறுகின்றன. பல மதத்த- வரும் அல்லது மத நம்பிக்கையற்றவரும் கொடுத்த வரிப்பணத்தில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்பட்;டவை என்கிற உணர்வே இல்லை.

அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன, இந்து சாமி படங்கள் இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது. ஒரு நூலகத்திற்குப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருந்தால் அவர் பாடு திண்டாட்டம்தான். அவர் ஏற்காத விக்கிரக ஆராதனை அவர் கண் முன்னாலேயே நடைபெறும். இதனினும் கொடுமை இது தவறு என்கிற உணர்வே அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடத்தில் இல்லாதது. அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இதுவெல்லாம் சிறுபான்மை மதத்தவர் உள்ளத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது, அல்லது அரசு அலுவலகங்களில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்படுவது போலத் தங்கள் விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையைக் கிளப்புகிறது. ஆனால் சிறுபான்மையினர் என்கிற காரணத்தாலேயே அது சாத்தியமில்லாமல் போகிறது.

“சகல மதங்களிடமும் அரசு சமத்துவம்” என்பது காரிய சாத்தியமில்லாதது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. ஒரே வழி அரசு நிறுவனங்களிலிருந்து சகல மதங்களையும் ஒதுக்கி வைப்பதுதான். அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டில் தத்தம் மத அனுஃ;டானங்களைச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்ல.

இந்தியாவில் மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. இந்து காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது.

Monday, June 27, 2011

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!


JUNE 27, உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.

ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

அந்த சிறுவன் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர். பாரபங்கி மாவட்டம் இப்ராகிம்புர் கிராமத்தை சேர்ந்த 12 வயது தலித் சிறுமியை சிவகுமார் என்ற வாலிபர் கற்பழித்து விட்டார். கடந்த 25-ந் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

செல்போன் பேட்டரி வெடித்து வாலிபர் பலி!


JUNE 27, சித்தூர் அருகே செல்போன் பேட்டரி வெடித்ததில் வாலிபர் பலியானார்.  சித்தூர் மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலத்தை சேர்ந்தவர் சிவாரெட்டி (23).

இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  நேற்று மாலை தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் செய்து கொண்டிருந்தார். பின்னர் பேட்டரியை கழற்றியபோது எதிர்பாராமல் வெடித்தது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்க த்தினர் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sunday, June 26, 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

ஜூன் 26,இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.

பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. வரவுக்குள் திட்டமிட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது அவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

சென்னையில் இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.352.35 ஆக இருந்தது. தற்போது ரூ.402.35 ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி சார்ஜையும் சேர்த்தால் ரூ.425 கொடுக்க வேண்டியதிருக்கும். கடுமையான விலை உயர்வை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் பெண்கள்.

முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் யாயிர் கூறுகையில், மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளார். அத்தோடு நில்லாமல், தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்றும் விஷமத்தனமாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், பாலஸ்தீனம் ஒரு போதும் தனி நாடாக முடியாது என்றும் கூறியுள்ளார் இந்த யாயிர். யாயிரின் இந்த அவதூறு மற்றும் மத துவேஷ கருத்துக்களுக்கு பாலஸ்தீனியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யாயிர் இதுபோல இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும், அராபியர்களையும் வம்புக்கு இழுப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே 23 பேருடன் சேர்ந்து ஒரு குரூப்பை பேஸ்புக்கில் ஆரம்பித்த யாயிர், அரபு தொழில்களையும், உற்பத்திப் பொருட்களையும் யூதர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யாயிரின் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது. பிரதமர் நதன்யஹூவும், அவரது மனைவியும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். மத பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அவர்கள் மதிக்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் அவர்கள் அப்படித்தான் வளர்த்தி வருகிறார்கள். ஏதோ கோபத்தில் யாயிர் அவ்வாறு எழுதி விட்டார். தற்போது அது பேஸ்புக்கில் இல்லை என்றார். பாலஸ்தீன செய்தித் தொடர்பாளர் ஹுசம் , ஸோம்லாட் கூறுகையில், தந்தையின் போதனையைத்தான் இப்போது மகன் வெளிப்படுத்தியுள்ளான். தனது குடும்பத்தை எப்படி வளர்த்து வருகிறார் நதன்யஹூ என்பது யாயிரின் பேச்சைப் பார்த்தாலே தெரிகிறது என்று கடுமையாக யாசிரையும், அவரது தந்தையையும் சாடியுள்ளார். இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யாயிர் நதன்யஹூவுடன் ராணுவத் தளபதிகள் பேசியுள்ளனர். அப்போது யாயிரின் தவறு அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதுபோன்ற செயலில் ஒரு ராணுவ வீரர் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சமின் நதன்யஹூ 1996 முதல் 99 வரை பிரதமராக இருந்தவர். பின்னர் பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமரானார். ஆரம்பத்தில் பாலஸ்தீன தனி நாட்டை ஆதரித்த அவர் தற்போது அது குறித்துப் பேசுவதே இல்லை. கிட்டத்தட்ட பாலஸ்தீன தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை அவர் முடக்கி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் அவரது மகன் இப்படி விஷமத்தனம் செய்து சர்ச்சையைப் பெரிதுபடுத்தியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் யாயிர் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரை போர் முனைப் படைப் பிரிவில் சேர்க்காமல், அலுவலக வேலையில் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 25, 2011

கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, மண்ணெண்ணெய் ரூ.2 அதிகரிப்பு..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!


Petrol Bunk
சென்னை: சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக 50 ரூபாய் உயத்தியது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் - டீஸலின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. பெட்ரோல் விலையை விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நினைத்த நேரத்திலெல்லாம் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்து வருகின்றன.

ஆனால் டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இவற்றின் விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுப்பதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதாலும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படுவதாலும் அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு

இந்த நிலையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

இனி சிலிண்டர் விலை ரூ.402

மண்ணெண்ணெயின் விலை கடந்த ஆண்டு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இப்போது லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னை நகரில் இதுவரை சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 352 ரூபாய் 35 காசாக இருந்து வந்தது. 50 ரூபாய் விலை உயர்ந்து இருப்பதால் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 402 ரூபாய் 35 காசாக அதிகரித்து விட்டது.

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

விலை உயர்வு பற்றிய தகவலை அமைச்சர்கள் குழு கூட்டம் முடிந்ததும், பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. டீசல் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 4 ரூபாய் 60 காசில் இருந்து 2 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சுங்கவரியும், உற்பத்தி வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.21 ஆயிரம் கோடி குறையும்.

டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றுக்கு பின்னரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படும்," என்றார்.