
வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில், 'ஐந்து பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன்தான் காவல்படை சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், ''கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவுக்குரிய குற்றத்தை செய்திருந்தால் மட்டுமே, அவரைக் கொல்லலாம் என்று, இந்திய தண்டனைச் சட்டம் 46 தெளிவாகச் சொல்கிறது. போலீஸ் சொல்லும்...